மலர்:1 இதழ்:15 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – II

ஆதி: 16     தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம்  கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம்.

ஆபிராம் மட்டும் என்ன! தன்னை பேர் சொல்லி அழைத்து, வாக்குத்தத்தம் கொடுத்து, வழி நடத்தி வருகிற தேவனை கேட்க வேண்டும் என்று ஓருகணம் நினைத்தாரா? அல்லது கேட்டாரா? இல்லவே இல்லை. சாராய் வந்து இளம் பெண் ஆகாரோடு நீர் சேர்ந்து எனக்கு ஒரு குழந்தையைத் தாரும் என்றவுடன், மறு பேச்சில்லாமல், ஒரு விரலைக் கூட அசைக்காமல், அவளை சேர்த்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

 கர்த்தர் ,ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி, ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருப்பான் ( ஆதி 2:24) என்ற கட்டளையை மனித குலத்துக்கு கொடுத்ததை ஒரு கணம் நினைவு கூர்ந்திருந்தால் சாராயுடைய இந்த திட்டத்திற்கு இணைந்திருக்க மாட்டார்.

ஆபிராமோ சாராயுடைய திட்டத்தை அங்கீகரித்தது மாத்திரம் அல்ல, அதை உடனே செயல் படுத்தவும் செய்கிறார்.

ஆபிராமும் , சாராயும் கானானுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. இந்நேரம் ஆகார் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறியிருப்பாள். இந்த பத்து வருடங்களில், சாராய்க்கும், ஆகாருக்கும், எந்த மன வருத்தமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. சாராய்க்கு ஒரு மகளாகவே இருந்திருப்பாள் ஆகார். குழந்தையில்லாத சாராயின் மனநிலை ஆபிராமுக்கு நன்கு தெரியும். நீர் என் அடிமைப் பெண்ணோடே சேருமென்று அவள் கூறியதும் , “ என் மனைவிக்காக இதை செய்வேன்”  என்று ஆபிராம் எண்ணியிருக்கலாம்! அதனால் மறு பேச்சில்லாமல் உடன் பட்டிருக்கலாம்.

அன்பானவர்களே! எத்தனை முறை நம் கணவர் எடுக்கும் தவறான முடிவுக்கு நாம் காரணமாகி விடுகிறோம். மனைவியை பிரியப் படுத்த தவறாக சம்பாதிப்பதையும், மனைவிக்காக அதிகமாக  கடனுகுள்ளாவதையும் , பார்த்ததில்லையா?

தங்கள் சொந்த முயற்சியில் ஆபிராமும், ஏவாளும், தேவன்  தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ள முன் வந்தனர். நாம் நினைத்ததை சாதிக்க நம் கணவன்மாரை நாம் எத்தனை தரம் உபயோகப் படுத்துகிறோம்!

சாராயின் தவறு ஒருபுறம் இருக்க, ஆபிராம் அந்த சூழ்நிலையில் என்ன சொல்லியிருக்கவேண்டும்? “ சாராய்! தேவன் நமக்கு வாக்களித்த குழந்தையை தேவனே அருளிச் செய்வார். நாம் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், நீ எனக்கு குழந்தையாகவும், நான் உனக்கு குழந்தையாகவும் இத்தனை வருடங்கள் வாழ்ந்தது போல இனியும்  வாழ்வோம்” என்றல்லவா? அப்படி சொல்லியிருந்தால் சாராயின் உள்ளம் நெகிழ்ந்திருக்கும் அல்லவா?

ஆனால் நடந்தது வேறு மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் எண்ணத்தில் ஆகாரோடு இணைந்தான் ஆபிராம்.

இதனால் விளைந்தது என்ன? தொடர்ந்து பார்ப்போம்!

ஜெபம்:

ஆண்டவரே! என் குடும்பத்தில், நான் எடுக்கும் முடிவுகளால் பாதிப்பும், நஷ்டமும் வராதபடி என் சிந்தனைகளையும், செயல்களையும் காத்துக் கொள்ளும். ஆமென்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s