மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!

 

ஆதி: 19: 1 – 15  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

 

 லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், என்று நேற்று பார்த்தோம். லோத்துவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது சோதோமைப் பார்த்து ஏங்கியிருப்பார்கள். ஆதி : 13: 12 ல், சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான் என்று வாசிக்கிறோம். நாம் அடுத்த முறை லோத்துவை சந்திக்கும்போது அவன் சோதோமின் வாசலிலேயே உட்கார்ந்திருந்தான் (ஆதி : 19:1)  அங்கேதான் அவனை இரண்டு தேவ தூதரும் சந்திக்கிறார்கள்.

லோத்துவின் குடும்பத்தார் பாவிகள் இல்லை ஆனால் பாவம் நிறைந்த சோதோமின் மேல் அவர்கள் கண் நோக்கமாயிருந்தது. ஒருவேளை, ஆரம்பத்தில், ஐயோ இப்படி நடக்கிறது, அப்படி நடக்கிறது என்று குடும்பத்தில் பேசியிருக்கலாம்! சில நாட்கள், மாதங்கள் சென்றபின், சோதோம் மக்களின் பாவம் லோத்துவின் குடும்பத்தாருக்கு ஒரு பாவமாகக் கூட கண்ணில் பட்டிருக்காது. அடிக்கடி போக்கு வரத்து வைத்திருப்பார்கள், தொழில் சம்பந்தமாகக் கூட சென்றிருக்கலாம். ஒருநாள் கூடாரத்தைக் கழற்றிவிட்டு சோதோமுக்குள் போய் வீடு எடுத்து குடியேறியிருப்பார்கள். ஆதி 19:1-6 வரை வாசிக்கும்போது லோத்து கூடாரத்தில் அல்ல, வீட்டில் குடியிருந்ததைப் பார்க்கிறோம்.

ஆபிரகாமோடு தேவனால் வழி நடத்தப்பட்ட இந்த குடும்பம், சோதோமுக்குள் சென்றதின் காரணமென்ன? கடவுள் மீது ஒரு கண்ணும், உலகம் மீது ஒரு கண்ணும் வைத்ததுதான். உலக ஆசை ஒரு பக்கமாய் அவர்களை இழுத்துவிட்டது.

நம்மில் எத்தனை பேருக்கு சோதோம் போல உலக ஆசைகள் உண்டு. ஒருவன் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய இயலாது என்று நம் ஆண்டவராகிய கிறிஸ்து கூறயதற்க்கு உதாரணம் இந்த லோத்துவின் குடும்பத்தாரே! அவர்கள் எவ்வளவு தூரம் சோதோமோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள் தெரியுமா? சோதோமை அழிக்குமுன் , தேவ தூதர்கள் அவர்கள் கைகளைப் பிடித்து வெளியே கொண்டு போய் விட வேண்டியதாயிருந்தது ( ஆதி 19: 16)

இன்று நம் வாழ்க்கையில் எவ்வித சோதோமோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம்? நம்மில் எத்தனை பேர் சோதோமுக்கு நேரே கூடாரமிட்டு கொண்டிருக்கிறோம்? யாரும் ஒரேடியாக பாவத்தில் விழுவதில்லை, சிறிது, சிறிதாகத்தான் இழுக்கப்படுகிறோம். இன்று  நம்மை இழுத்துக் கொண்டிருக்கும் பாவ சேற்றை உதறிவிட்டு அவருடைய பரிசுத்த சமூகத்துக்குள் வர தேவன் நமக்கு உதவி செய்வாராக!

ஜெபம்:

ஆண்டவரே! உலகத்துக்கும், உமக்கும் ஊழியம் செய்யக் கூடாது. உலக ஆசைகள் என்னை உம்மைவிட்டு பிரித்திடா வண்ணம் காத்துக்கொள்ளும். ஆமென்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s