Bible Study

மலர்:1 இதழ்: 46 எனக்கு ஏன் இந்த வேதனை?

ஆதி:  35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று.

பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

கடந்த வாரம் நாம் ரெபெக்காளின் தாதி மரித்து அடக்கம் பண்ணப் பட்டதைப் பற்றி பார்த்தோம். யாக்கோபுக்கு தாயைப் போல இருந்த அவளை இழந்த துக்கம் மாறும் முன் யாக்கோபை இன்னும் ஒரு பேரிடி தாக்கியது. சில மைல் தூரமே அந்த குடும்பம் சென்றிருக்கும், ராகேலுக்கு கடும் பிரசவவேதனை உண்டாயிற்று.  இன்றைய நாட்களில் நமக்கு இருக்கும் மருத்துவ வசதி நிச்சயமாக அப்பொழுது இல்லை. அநேக  பெண்கள் பிரசவ வேதனையில், மரித்து புதிய ஜீவனை உலகத்துக்கு கொண்டுவந்தனர்.

ராகேலுக்கு மரண வேதனை உண்டாகி அவள் மரிக்கும் தருவாயில் தன் மகனுக்கு பெனோனி  என்று பேரிட்டாள்.

 இந்த இடத்தில் , பிறக்கும் பொழுதே தாயை இழந்த குழந்தைகளை நாம் நினைக்கத் தவறக் கூடாது. தாயில்லாத குழந்தைகள் மேல் நாம் அன்பு காட்ட தவறாகக் கூடாது. பெற்ற தாயின் முகத்தை பார்க்காத குழந்தைகள் தாயன்புக்காக ஏங்க மாட்டார்களா? அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு உதவும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் ஒரு தாயின் அன்பை சிறிதாவது அந்த குழந்தைக்கு  கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்!

நம்மில் பெரும்பாலோர் கர்த்தரை துதிப்பது எப்பொழுது தெரியுமா? வாழ்வின் சூழ்நிலை அமைதியாக, கஷ்டங்கள் இல்லாமல் இருக்கும்போதும், கடனில்லாமல் வாழும்போதும், நோயில்லாமல் சுகமாக வாழும்போதும், பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும்போதும், மரணம் என்ற வேதனை தொடாமல் இருக்கும்போதும் தான். அப்பொழுதுதான் என் தேவனை நான் நேசிக்கிறேன், ஸ்தோத்தரிகிறேன், மகிமைப்படுத்துகிறேன் , அவர் என்னை கரம் பிடித்து நடத்துகிறார் என்றெல்லாம் பேசுவோம்.

ஆனால் ஒருவேளை நம் குடும்பத்தில் ஒருத்தருக்கு திடீரென்று ஒரு நோய் தாக்கி விட்டால்… நாம் நேசிக்கிற ஒருவர்  ஒரு விபத்தில் மரித்து விட்டால்…….நம்  வியாபாரம் தோல்வியடைந்து பெருங்கடனில் விழுந்து விட்டால்……. அப்பொழுதும் நம் ஆண்டவர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவராக நம் வாழ்க்கையில் இருப்பாரா?

சிலக் கிறிஸ்தவர்கள், விசுவாசிகளுக்கு நோய் நொடிகள் வராது, கஷ்டங்கள் எல்லாம் ஓடிப்போகும், பணத்தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும் என்றல்லவா பிரசங்கிக்கிறார்கள்? அப்படிப்பார்த்தால் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையை விட்டுக்கொடுத்து, ஆப்பிரிக்க நாட்டுக்கு ஊழியராக சென்ற மருத்துவர் டேவிட் லிவிங்ஸ்டன் , தன் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எத்தனை என்று தெரியுமா? அவர் விசுவாசி மட்டுமல்ல, தேவனுக்காக ஊழியம் செய்ய சென்றவர் தானே! அவருக்கு ஏன் அத்தனை கஷ்டங்கள்?

வேதத்தில் யோபு எத்தனை  பாடுகள்  பட்டான் என்று படிக்கிறோம். அத்தனை வேதனைகளின் மத்தியிலும் அவன் என்ன சொன்னான் பாருங்கள்! (யோபு: 13:15) அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று.

ராகேல் தன் மரண வேதனையில் தன் குழந்தையை  பென்….ஓ ….னி …… பெனோனி  என்று அழைத்தாள். அதற்கு ‘ என் வேதனையின் குமாரன்’ என்று அர்த்தமாம். ஆனால் தேவன் அவள் வேதனையைக் கண்நோக்கிப் பார்த்தார். அவள் குழந்தையின் பெயரை உடனே மாற்றி தன் ‘வலது கரத்தின் குமாரன்’ (மதிப்புக்குரியவன்) என்ற அர்த்தத்தில் பென்யமீன் என்று பெயரிட கர்த்தர் அங்கு யாக்கோபை வைத்திருந்தார்.

இன்று ராகேலைப் போல மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாயா? உன் வேதனையை  கர்த்தர் அறிவார். உன் முணங்கல் கர்த்தர் காதில் விழுகிறது.

ராகேலுடைய பிள்ளைகளை கர்த்தர் ஆசிர்வதித்தார். அவள் குமாரன் யோசேப்பு எகிப்து நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலிருந்து காத்த பெருந்தலைவன் ஆனான். அவள் குமாரன் பென்யமீனின் கோத்திரத்தில் வந்தவர்  தான் அப்போஸ்தலனாகிய பவுல் அடியார். என்ன ஆசீர்வாதம் பாருங்கள்? புறஜாதியாராகிய நமக்கு சுவிசேஷத்தை கொடுத்த பவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று பிலிப்: 3:5 ல் கூறுகிறார்.

நம் வாழ்க்கையில் இன்று  நடக்கும் பல வேதனையான காரியங்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாமல் நாம் திகைக்கலாம் ஆனால் அவற்றின் அர்த்தத்தை தெரிந்த தேவன் நம்மோடு இருக்கிறார், அவர் மேல் நம்பிக்கையாயிருப்போம்!

 

ஜெபம்:  ஆண்டவரே, என் வேதனையையும், கண்ணீரையும், துக்கத்தையும் நீர் அறிவீர். நான் அறியாத பாதையில் சென்றாலும் நீர் என்னை வழி நடத்துவதால் பயமில்லாமல் செல்ல உதவி தாரும் ஆமென்!

6 thoughts on “மலர்:1 இதழ்: 46 எனக்கு ஏன் இந்த வேதனை?”

  1. Dear Prayer Warriors In Jesus Christ,I Am Jeevan,Plz Fasting Pray For My Forgiveness, God’s Kindness And Good Unity Of Jesus Christ, And Spiritual Guidence And Humble Mind And Devotion Development And Spiritual Growth And Good Health Please Fasting Pray Hand Of God’s Love Be With Me Throughout My Entire Life Thank You.

  2. Dear Prayer Warriors In Jesus Christ,Please Fasting Pray For My Dad’s [ Ethirajan ] Peaceful Retirement life And Jovial Mind And God’s Blessings And Graces And Good Health,Spiritual Guidence And God’s grace in every moment through out the year,Wisdom In Taking Decision For The Children’S Future To Surrender In God’s Hand,Amen, I am Jeevan: The First son in the Family,Physical Mind Spritual Guidence From God,God’s Blessings And Graces And Good Health,And God’s Great Wisdom,And Humble Mind before God Jesus And Holy Sprit,And God’s Kindness,Devotion Development And Good Friends,And Jovial Mind,Good And Beautiful Bride with God’s Blessings And Graces, And Good Family And God’s Blessed Children’s This Prayer Request For The First Son’s Soul And Entirelife,Amen, My Brother: [ Rajkumar ] Transfer to native Place,Good Family With God’s Grace And Blessings,God’s Wisdom,Spiritual Guidence,And Humble Mind Before God Jesus,Good Friends And Jovial Mind,Good Wife Good Children’s With God’s Blessings And Graces,Good Health,And Kindness Mind Of God,Amen, My Sister [ Sheeba chandra leela ] :To Get Good Job,And Good Life Partner Blessed By God,And Peaceful Entirelife,Spiritual Guidence,Devotion Development,Good Friends And Jovial Mind,Good Health And Blessed Children’s By God’s Grace,God’s Blessings And Grace Please Pray For This, Amen. [ My Mother Gunaseeli Ethirajan: With God’s Blessings And Graces In Peaceful Family Life,And Good Health And Peaceful in office, And Promotion, and children’s Bright Future,and Good health for husband,by god’s grace and blessing to purchace to lands,And Jovial Mind,Spiritual Growth,god’s grace in entire family members,special prayer for mother in laws health and blessings and grace from God,two sister’s family and children’s to be blessed by God,one sister name shakila to covert Hindu From Christian,Please Remember This For Your Fasting Prayer To Pray for all This Request, Please Fasting Pray Hand Of God’s Love Be With Me Throughout My Entire Life Thank You.Amen

  3. மதிப்பிற்குரிய ஜெப வீரர்களுக்கு, என் பெயர் சௌந்தர்,சில வருடங்களாக கான்சர் வியாதியால் கஷ்டப்படுகிறேன், நான் குணம் அடைந்து என் குடும்பத்தோடு சுகமாய் வாழவும், என் குடும்பத்தார் இயேசு கிறிஸ்துவை அறிந்து இரட்சிக்கபடவும்,என் மனைவி உடல் பெலன் ஆரோகியதிர்ககவும் பிள்ளைகள் கேட்டுக்கு செல்லாதவாறு நல்ல ஒழுக்கத்தில் வளரவும் இயேசு கிறிஸ்துவுக்கு ஏதுவான சிந்தனையில் வளரவும் ஆவிக்குரிய வழி நடத்துதலை பெறவும் பரிசுத்த ஆவியின் பதறாத சிந்தித்து நலமான இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான காரியத்தை மட்டும் செய்யவும்,எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உங்கள் தனி உபவாச ஜெபம் மற்றும் குழு உபவாச ஜெபம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்,நன்றி.

  4. மதிப்பிற்குரிய ஜெப வீரர்களுக்கு,என் பெயர் குணசீலி ,BHEL ல் தலைமை செவிலியராக பணியாற்றுகிறேன், நான் சில வருடங்களாக சக்கரை வியாதியால் கஷ்டப்படுகிறேன், மட்டும் அல்லாமல் எனக்கு இருதய மாற்று வழி அறுவை சிகிச்சை [ BYPASS ] செய்து இருகிறார்கள், என் கணவர் RAILWAY ல் மூத்த பிரிவு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், அவருக்கும் சர்க்கரை வியாதியால் கஷ்டப்படுகிறார்,எங்கள் உடல் சுக பெலன் ஆரோகியதிர்காகவும், எங்கள் இரண்டு மகன்கள் எதிகால வாழ்விற்காகவும் நல்ல ஆவிக்குரிய இயேசு கிறிஸ்துவுக்கு சித்தமான இயேசு கிறிஸ்துவின் மேல் பக்தி வைராக்கிய வாஞ்சையுள்ள சிறு வயது முதல் இயேசு கிறிஸ்துவின் அன்பிலே ஐக்கியத்தில் வளர்க்கப்பட்ட குணசாலியான மணமகள்கள் என் மகன்களுக்கு வாய்க்கவும், அதேபோல் எங்கள் மகளுக்கு திருமணம் கொஞ்சம் தாமதம் ஆகி கொண்டு வருகிறது தயை கூர்ந்து எங்கள் மகளுக்கும் நல்ல ஆவிக்குரிய இயேசு கிறிஸ்துவுக்கு சித்தமான,பக்தி வைராக்கியமுள்ள சிறு வயது முதல் இயேசு கிறிஸ்துவின் அன்பிலே ஐக்கியத்தில் வளர்க்கப்பட்ட நல்ல குணம் கொண்ட மணமகன் எங்கள் மகளுக்கு வாய்க்கவும்,எங்கள் மூத்த மகனின் உடல் சுக ஆரோகியதிர்ககவும் அவன் ஆவிக்குரிய வழிநடத்துதலை பெறவும் ஜெபத்தில் அனுதினமும் தரித்திருக்க தலை தண்ணீரும் கண்கள் கண்ணீரும் உள்ள மன்றாட்டின் ஆவியை பெரும் படிக்கும், நாங்களும் எங்கள் பிள்ளைகளும் இயேசு கிறிஸ்துவின் உண்மை அன்பிலே ஐக்கியத்தில் பக்தி வைராக்கியத்தில் வேத தியானத்தில் ஜெபத்தில் இயேசு கிறிஸ்துவுக்காக என்றென்றும் நிலைத்து நின்று இயேசு கிறிஸ்துவுக்கு சித்தமான காரியங்களை மட்டுமே செய்ய எங்கள் அனைவருக்காகவும் உங்கள் தனி உபவாசம் மற்றும் குழு உபவாச ஜெபத்திலும் ஜெபித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்,நன்றி ஆமென்

  5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஜெப வீரர்களே,என் பெயர் லோகநாதன்,தற்போது நான் தாட்கோவில் பணிபுரிகிறேன்,எனக்கு சிறு வயதில் இருந்தே அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போய் விடுகிறது,இவ்வாறு ஆவது நின்று பூரண உடல் ஆரோக்கியம் பெறவும், பணி உயர்வு கிடைக்கவும், சிறு வயதில் இருந்தே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நடந்த பக்தி வைராக்கிய வாஞ்சையுள்ள இயேசு கிறிஸ்துவின் அன்பிலே ஐக்கியதிலே வளர்க்கப்பட்ட மனமகள் எனக்கு கர்த்தருக்கு சித்தமான வாய்ககவும்,மேலும் என் தாய்க்கு அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போய் விடுகிறது,என் தந்தையார் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்,அதற்க்கு பின்தான் என் தாய்க்கு அதிகமாக உடல் நிலை சரி இல்லாமல் போய் விடுகிறது,உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து வாட்டுகிறது,என் தாயாரின் நீடிய ஆயுளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்காகவும்,என் இரு சகோதரிகள் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறார்கள்,அவர்கள் வெற்றி கரமாக தன்னுடைய படிப்பை முடிக்கவும்,சிறு வயதில் இருந்தே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நடந்த பக்தி வைராக்கிய வாஞ்சையுள்ள இயேசு கிறிஸ்துவின் அன்பிலே ஐக்கியதிலே வளர்க்கப்பட்ட கர்த்தருக்கு சித்தமான வாழ்க்கை துணை வாய்ககவும், நாங்களும் இன்னும் ஆவிக்குரிய படியில் முழுமையாக கால் பதிக்க வில்லை, எங்கள் குடும்பம் வேதாகமத்தை நன்கு கற்கவும் அதன் படி நடக்கவும்,ஆவிக்குரிய வழிநடத்துதலை பெறவும்,பக்தி விருத்தி அடையவும்,எங்களுக்காக உங்கள் தனி உபவாசம் மற்றும் குழு உபவாச ஜெபத்திலும் ஜெபித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

  6. Please Fasting Pray God Would Increase My Faith And Devotion Development, Spiritual Guidence And Humble Mind And Spiritual Growth And Good Health Please Fasting Pray Hand Of God’s Love Be With Me Throughout My Entire Life Thank You.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s