மலர்:1இதழ்: 67 ஒரு திறமைசாலியான தாய்!

  

யாத்தி: 2: 3 அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்ப்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும், கீலும் பூசி , அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.

மோசே அழிவிலிருந்து மீட்கப்பட்ட இந்த கதையை மறுபடியும் வாசிக்கும்போது, கண்ணில் பட்ட இன்னுமொரு அருமையான காரியம், யோகெபெத்தின் கைவிரல்களின் சிருஷ்டிப்பு திறமை!

 பத்து விரல்களால் திறமையாக, அங்கே நைல் நதியண்டை கிடைக்கிற சாதாரண நாணல் என்னும் புல்லைக் கொண்டு, ஒரு பேழையை செய்தாள். அதில் தன் செல்ல மகனுக்கு மூச்சு விட காற்றும் வேண்டும், அதே சமயத்தில் அதற்குள் நீர் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக பக்குவமாக அதின் அடிப்புறம் பிசினும், கீலும் பூசினாள்!

 எத்தனை திறமையாக இந்தப் பெண் இதை படைத்திருக்க வேண்டும்! அவள் விரல்கள் அந்த நாணலை எடுத்து.. பதப்படுத்தி….வளைத்து….நெளித்து…..பின்னி… இணைத்து….. எத்தனை வேலைகள் செய்தன!  இதை அவள் சரிவர செய்யாமலிருந்திருந்தால் அவள் குழந்தை மூச்சு திணறி இறந்திருப்பான் அல்லது நீரில் மூழ்கியிருப்பான். தன்னுடைய குழந்தையை காப்பாற்ற அவளுடைய திறமையை வெளிப்படுத்துகிறாள் யோகெபெத்

 செய்யும் வேலையை சிறப்பாய், திறமையாய் செய்யும் தன்மையை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் அருளியிருக்கிறார். நம்மில் எத்தனை பேர் நம்முடைய விரல்களின் படைப்புத் திறமையினால் நம் குடும்பத்தை காப்பாற்றுகிறோம்? கையினால் பூக்கள் கட்டுவதில் இருந்து, கம்ப்யூட்டரில் டைப் அடிப்பது வரை எத்தனை விதமான வேலைகளை பெண்கள் செய்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்!

 நான் ‘கிராஸ் 2 கிராஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதை பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு , வறுமையால் பின்தங்கிய சமுதாயத்திலிருந்து வரும் பெண்களுக்காக ஆரம்பித்தேன். சாதாரண துணியில் பெருக்கல் குறி போன்ற தையல்களைப் போட்டு அதின்மூலம் அழகிய வர்ணத்தில்  வடிவங்களை உருவாக்குவதும், வேத வசனங்களை எழுதுவதும் தான் நான் இவர்களுக்கு கற்றுக் கொடுத்த கலை. இதை நான் என்னிடம் முதன்முறையாக வேலைக்கு வந்த பெண்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். பின்னர் அவர்கள் புதிதாய் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொடுத்தனர்.  வேலைக்குவரும் ஒவ்வொரு பெண்ணின் கை விரல்களும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தின!  இவ்வாறு மிகத்  தாழ்மையான நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று கம்ப்யூட்டர் மூலமாக இயங்கும் தையல் இயந்திரங்களோடு , மேல்  நாடுகளுக்கு, இங்கு தயார் செய்யும் பொருட்களை அனுப்பும் வகையில் வளர்ந்துள்ளது. இன்று இங்கு கம்ப்யூட்டர் மூலமாக இயங்கும் இயந்திரங்களை இயக்குவதும் பெண்கள் தான்! தேவன் இவர்களுக்கு அருளியிருக்கிற திறமை இவர்கள் குடும்பத்தை காக்கவும், பிள்ளைகளை படிக்க வைக்கவும் உதவுகிறது.

 யோகெபெத் நாணல் பெட்டியை, ஒரு புல்லை வைத்து சிருஷ்டித்து தன் குழந்தையை காப்பாற்றிய கதை,  நம்முடைய தேவனாகிய கர்த்தர், வானத்தையும் பூமியையும் உருவாக்கினவர், வானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாதபடியாகவும் கொண்ட தேவன், அவருடைய கரத்தின் சிருஷ்டியாகிய நமக்குள்ளும் சிருஷ்டிப்பு என்கிற திறமையை கொடுத்திருக்கிறார் என்பதை தெளிவாய் வெளிப்படுத்துகிறது.

  இருளை நட்சந்திரங்களைக் கொண்டு அழகு படுத்துகிற தேவன், நம் வாழ்வை இருள் சூழும் போது, நமக்குள்ளே அவர் கொடுத்திருக்கிற படைப்பின் திறமையின் மூலம் நம்மை ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள வகை செய்கிறார்.

 வானத்தில் நட்சத்திரங்களை திறமையாய் தொங்க வைக்கிற தேவன், தன்னுடைய குழந்தையை காப்பாற்ற அலைமோதின ஒரு தாய்க்கு நாணல் புல்லைக் கொண்டு ஒரு பெட்டியை, பேழையைப் போல திறமையாய் செய்து, இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வந்த குழந்தை மோசேயை காப்பாற்ற உதவி செய்த அதே தேவன், உனக்கும் எனக்கும் தேவையான திறமையை அனுக்கிரகம் செய்வார். அவர் உனக்கு கொடுக்கும் இந்த விசேஷக் கிருபையால் நீ வேலை செய்யும் ஸ்தலத்தில் முன்னேறுவாய்! நீ கையிட்டு செய்யும்வேலையை ஆசீர்வதிப்பார்! நீ எந்த துறையில் வேலை செய்தாலும் சரி, அதை சிறப்பாய், திறமையாய் செய்யது முடிக்க கர்த்தர் உதவி செய்வார்!

 யோகேபெத்தின் கதை வாழ்க்கையில் சோர்ந்து போயிருக்கும் உங்களை உற்சாகப்படுத்தட்டும்! நமக்கு வற்றாத ஜீவ ஊற்றாய் உதவி செய்யும் நம் சிருஷ்டி கர்த்தர் நம்மோடிருக்கும்போது, நாம் எதையும் கண்டு அஞ்ச வேண்டாம்! அவர் நம் வாழ்வில் நம்மை சூழும் பிரச்சனைகளை நாம் திறமையாய் எதிர்கொள்ள உதவி செய்வார்!

 சங்கீ: 8: 3,4 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும்,நட்சந்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதர்க்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதர்க்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள சிருஷ்டிப்பு என்கிற சிறப்பான திறமை, நாம் சிருஷ்டி கர்த்தராகிய தேவனுடைய சாயலாய் படைக்கப் பட்டோம் என்று நினைவுறுத்துகிறது அல்லவா?

 ஜெபம்: ஆண்டவரே! நீர் எங்களை திறமைசாலியாக உருவாக்கயதற்காக நன்றி. எங்கள் திறமையோடு நடத்த எங்களுக்கு உதவி தாரும்.ஆமென்!

 பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s