மலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா?

 

யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.

 

தேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நாம் பார்த்தோம். ஆனால் ஒரு மாதமாக என்னால் இதைதொடர்ந்து எழுத முடியவில்லை.

 

இன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம்    யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது.

 

இதை நான் எழுதும் போது சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய உறவினரின் பரிதாபமான மரணமும், அடக்கமும் தான் நினைவுக்கு வருகிறது. தாயை தன் வீட்டிலிருந்த ஒரு பழைய பாத்திரத்தைப் போல தூக்கியெரிந்த அவன், அவர்கள் மரணத்தில் வந்து கண்ணீர் விட்டு அழுதான். என்ன பிரயோஜனம்? உயிருடன் இருக்கும்போது ஒரு துளி பாசத்தைக் கூட காட்டாமல் சவப்பெட்டியில் காட்டுவதால் பலன் என்ன?

 

நாம் இன்று படிக்கிற இந்த பிரமாணம் நமக்கு நம் குடும்பத்தில் உள்ள உறவினரிடம், விசேஷமாக நம் தாய் தகப்பனிடம் காட்ட வேண்டிய மரியாதையை நமக்கு கற்ப்பிக்கிறது. இந்த பிரமாணங்கள், மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை எவ்வாறு வாகனங்கள் செங்குத்தாக விழாமல் காக்கிறதோ அவ்வாறு நம்மையும் காக்கின்றன.

 

எபிரேய மொழியில் கனம் என்ற வார்த்தைக்கு உயர்வு என்று அர்த்தம் உண்டு! அப்படியானால் நம் தகப்பனையும் தாயையும் நாம் உயர்த்த வேண்டும் என்று அர்த்தம்! ஒருவேளை அவர்கள் நம்மை கர்த்தருடைய வழியில் வளர்க்க தவறியிருக்கலாம். அல்லது அவர்கள் செய்த தவறுகள்  நம் வாழ்வை பலமாக பாதித்திருக்கலாம். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறியிருக்கலாம். ஆனாலும் வேதம் சொல்கிறது நாம் அவர்களை உயர்த்த வேண்டும் என்று!

 

அவர்களை பணக்காரர்களாக    உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், ஞானிகளாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், பெலசாலிகளாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம்,  ஆனால் அவர்களை உன்  பெற்றோராக உன்னால் உயர்த்த முடியும்!

 

உன்னுடைய  எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், நடத்தையினாலும் உன் பெற்றோரை கனம் பண்ணு! கர்த்தர் உன்னுடைய ஆயிசை நீண்டதாக்கி உன்னை கனம் பண்ணுவார்!

 

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

ஜெபக்குறிப்பு: எனது வலது கரத்தில் ஏற்ப்படும் கடினமான வலியினால் இந்த தியானம் எழுதுவது தடைப்பட்டு போகிறது. கர்த்தர் எனக்கு இந்த வலியிலிருந்து விடுதலைக் கொடுத்து நான் வேத வார்த்தைகளை தடையில்லாமல்  அளிக்க தேவன் உதவுமாறு தயவு செய்து ஜெபியுங்கள்.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s