மலர்:1 இதழ்: 56 கோபுரமோ! குப்பை குழியோ!

ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத்  தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்

இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

கலா:6: 7  மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்

 

இந்த வசனம் “கடவுளை பைத்தியக்காரன் என்று நினைக்காதே! அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் இன்று நினைப்பது போல எல்லாம் நடக்காவிட்டாலும், கர்த்தருக்கு நாம் எதை விதைத்தோம் என்று நன்கு தெரியும் , நாம் விதைத்ததை நிச்சயமாக அறுப்போம்” என்றுதானே கூறுகிறது! ஏனெனில் இந்த உலகில், தீமை செய்கிறவர்கள் செழித்திருக்கிறதையும், தேவனுடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதையும் பார்த்து நாம், தேவன் இவற்றை கவனிக்கிறாரா என்று கூட எண்ணலாம்!

யோசேப்பின் வாழ்வில் நடந்தது என்ன? அவனுடைய நேர்த்தியான நடத்தையினால் , பல வருடங்கள், அவனுக்கு எந்த நன்மையையும் கிடைத்தது போல தெரியவில்லை. அடிமைத்தனத்திலும், சிறைச்சாலையிலும் வாழ்ந்த அவனைப் பார்த்தால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் இதுதானா என்று கேட்கும்படி தான் இருந்தது.

சிறைச்சாலையின் தலைவன் , அங்குள்ள யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்த பின்னரும், சிறையில் இருந்த பார்வோனின் பான பாத்திர காரனின் சொப்பனத்தின் அர்த்தத்தை  தேவனுடைய கிருபையால் விளக்கிய பின்னரும், இரண்டு வருடங்கள் அவன் சிறைவாசம் என்ற இருளில் இருக்க வேண்டியதிருந்தது.

யோசேப்பு சிறையில் வாழ்ந்த இத்தனை வருடங்களும், அவனுக்கு தீங்கு நினைத்த அவன் சகோதரர் அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவனுக்கு தீங்கிழைத்த திருமதி போத்திபாரும் அவள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். எல்லோரும் நன்றாக வாழ்ந்த போது தேவனுடைய பிள்ளையாகிய யோசேப்புக்கு  மட்டும் ஏன் இந்த இருளான சிறைவாசம்? தேவன் அவனை மறந்து விட்டாரா?

நிச்சயமாக இல்லை! அதுமட்டுமல்ல, யோசேப்பும் தேவனை மறக்கவில்லை! ஒருவேளை யோசேப்பின் நிலையில் நாம் இருந்திருந்தால், நாட்கள் கடந்து போக, போக, நாம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று குறை கூறியிருப்போம். எதிலும் நாட்டம் இல்லாமல், கசப்போடு, ஒவ்வொரு நாளையும் கழித்திருப்போம்!

ஆதி: 39: 23 கூறுகிறது, “சிறைச்சாலைத் தலைவன், சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும், யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்தெல்லாவற்றையும், யோசேப்பு செய்வித்தான்” என்று.

யோசேப்பு சிறையில் கூட, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தான். தான் தேவனுடைய பிள்ளை என்பதை ஒருக்காலும் மறந்து போகவில்லை. தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், தனக்கு விசேஷமான இடம் வேண்டும் என்று கேட்கவும்  இல்லை, தான் பொருப்பாளியானதால் தனக்கு மற்றவர்கள் சேவை செய்யவேண்டும் என்றும் எண்ணவில்லை. தன்னுடைய நேர்மையான நடத்தைக்கு உடனடியாக பதில் கிடைக்கவேண்டும் என்று நினைத்து அவன் நடக்கவில்லை.

யாக்கோபின் செல்லப்புத்திரனாய் இருந்தபோதும் சரி, போத்திபாரின் அரண்மனை ஊழியக்காரனாய் இருந்தபோதும் சரி, சிறையில் ஒரு எபிரேய அடிமையாய் இருந்தபோதும் சரி, யோசேப்பு தேவனிடத்தில் உண்மையாய், உத்தமமாய் வாழ்ந்த வாழ்க்கை துளி கூட மாறவில்லை!

கோபுரத்தில் இருந்தாலும், குப்பைக்குழியில் வாழ்ந்தாலும், கர்த்தருக்கு உண்மையும் உத்தமுமாக வாழ்வதே அவன் நோக்கம்!

மதர் தெரேசா,” நான் கர்த்தரிடம் ஜெயத்தை தாரும் என்று ஜெபிப்பதில்லை, உண்மையாய், உத்தமமாய் வாழ பெலன் தாரும் என்றுதான் ஜெபிப்பேன்” என்று ஒருமுறை கூறினார்கள் என்று படித்தேன்.

கர்த்தர் உன்னிடம் யோசேப்பில் காணப்பட்ட உண்மையையும், உத்தமத்தையும், எதிர்பார்க்கும் இடத்தில் நீ இன்று இருக்கலாம்! நீ வாழும் இடத்திலே, வேலை செய்யும் இடத்திலே, யாரும் பார்க்காத இடத்திலே, யாரும் பார்க்காத நேரத்திலே உன்னிடம் உண்மையும், உத்தமமும் காணப்படுகிறதா?

உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையில் புகழோ , கைத்தட்டலோ கிடைக்காமல் இருக்கலாம். ஆனாலும் யோசேப்பைப் போல் உத்தமமாய் வாழ்! கர்த்தர் உன்னைப் பார்க்கிறார்! தக்க சமயத்தில் பலனளிப்பார்!

ஜெபம்: ஆண்டவரே! எந்த பலனையும்  எதிர்பார்க்காமல், எங்கள் வேலையில் உண்மையாய் இருக்க பெலன் தாரும்! நீர் எங்களைப் பார்க்கிறீர் என்ற உணர்வு எங்களுக்குள் எப்பொழுதும் இருக்கட்டும். ஆமென்!

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

One thought on “மலர்:1 இதழ்: 56 கோபுரமோ! குப்பை குழியோ!

 1. Sis,

  I am really touched by this message. It was just like how God speaks to me.
  I am facing a problem similar to this.
  Now, I understood what God is really expecting from me and why God is delaying in blessing me and in helping me to come out of the problems I face for years. I got all the answers for my questions in my life through this message.

  This is the message at the right time. Really I don’t know how I got this web page. I strongly believe that wherever I go, God is with me and speaks to me and Yes now he proved it by directing me to this web page at the right time. Praise the Lord!

  I will definitely tell about this blog page to all my friends and I will wait at the Lord’s feet patiently and continue being good before Him without expecting anything.
  Please pray for me and my family.

  Thank you so much for the touching message!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s