மலர்: 2 இதழ்: 131 நீ அறிவாயா?

உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை”

நாங்கள் இஸ்ரவேலில் கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல்,  யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி எங்கள் இருவரையும் படம் எடுத்ததுமட்டுமல்லாமல், என்னிடம் வந்து நீங்கள் கிறிஸ்தவரா?  என்று கேட்டார்கள், நான் ஆம் என்றெதும் என்னை பாசத்துடன் முத்தமிட்டு விட்டு கடந்து சென்றார்கள். அந்த சகோதரியின் முகப்பிரகாசமே, கர்த்தருடைய கிருபையையும், அன்பையும் அவர்கள் அதிகமாய் அறிந்தவர்கள் என்று காட்டிற்று. அவர்கள் முகம் என் கண்ணிலிருந்து மறையவேயில்லை!

எந்த மனிதனையும்விட கர்த்தராகிய தேவனை அதிகதிகமாக அறிந்த மோசேயின் வாழ்க்கையையும், அவர் கர்த்தரோடு கொண்டிருந்த தொடர்பையும் இன்றுமுதல் சில நாட்கள் நாம் படிக்கலாம். இதுவே நாம் உபாகமம் புத்தகத்தைப் படிக்கும் கடைசி வாரமாகும்.

மோசே தேவனை முகமுகமாய் அறிந்திருந்தார்! இந்த தேவன் யார்? மோசேயின் வார்த்தைகளைக் கேளுங்கள்!  கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம் பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.  அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம்; அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”  (உபா:32 : 3 – 4)

மோசேயின் வாழ்க்கையின் கடைசிக்கட்டமாக கர்த்தர் அவரை நேபோ மலையின் உச்சியில் உள்ள பிஸ்கா கொடுமுடிக்கு கொண்டுபோய் கானான் தேசத்தை அவருக்கு காட்டும் முன்னதாக மோசே இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, கர்த்தரை அறிந்த ஜீவியத்தை ஜீவிக்கிறதைப் பற்றி உபதேசிக்கிறதை நாம் உபாகமம் 32 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

மோசே இந்த உபதேசத்தை பண்ணும்போது அவருக்கு வயது 120! முதல் நாற்பது வருடங்கள் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாக எகிப்தின் அரண்மனையில் கழிந்தன! இரண்டாவது நாற்பது வருடங்கள் மீதியானின் வனாந்தரத்தில் ஆடுகளை மேய்ப்பதில் கழிந்தன! மூன்றாவது நாற்பது வருடங்கள் அடிக்கடி வழிதவறிய, முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் நடத்துவதில் கழிந்து விட்டன!

இத்தனை வயதில் கணீரென்ற குரலில், மோசே உரத்த சத்தமாய் ” நான் என் ஜீவியத்தில் அறிந்த தேவனாகிய கர்த்தர் ஒரு கன்மலை! என்று கூறுகிறார். இந்தக் கன்மலைமேல் மோசேயின் வாழ்க்கையின் அஸ்திபாரம் இருந்ததால், அவருடைய வாழ்வின் முடிவில் ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று கூறும்படியாய் அமைந்தது

கர்த்தரை அறிந்த ஜீவியத்திற்கு உறுதியான அஸ்திபாரம் தேவை! அது நாம் ஒரு வீடு கட்டுவது போலத்தான்! உறுதியான துருப்பிடிக்காத கம்பிகளோடு போடும் தூண்களும், அஸ்திபாரமும் வீட்டின் உறுதிக்கு ஆதாரம் அல்லவா? அவ்வாறு நம் வாழ்க்கையின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்துவின்மேல் போடப்பட வேண்டும் என்று மோசே கூறுவதைப் பார்க்கிறோம்!

. இந்த இடத்தில் நாம் முகமுகமாய் அறிந்த” என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கத்தைப் பார்ப்போம். நாம் யாராவது நமக்கு நன்றாகத் தெரிந்தவர்களைப் பற்றி பேசும்போது ‘ஓ அவர்களை எனக்கு நன்றாகத் தெரியுமே’ என்கிறோம் அல்லவா அந்த வார்த்தைதான் அறிந்த என்ற வார்த்தையும். மோசேயும் கர்த்தரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர், அவர்கள் இருவரும் நண்பர்கள்! ஒன்றாய் நடந்தனர்! பேசினர்! எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தனர்! என்ன அருமையான வாழ்க்கை!

பரலோகத்தின் தேவனை மோசே அறிந்ததாலே, பூமியிலே அவருடைய பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் உணர்ந்தார்! என்ன வாழ்க்கை!! வானாதி வானங்களைப் படைத்தவர் பூமியிலே மோசேக்கு நண்பரானார்!

பரிசுத்த பவுல் இயேசு கிறிஸ்துவை நான் இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்றார்.  நீ கன்மலையாகிய தேவனை அறிந்திருக்கிறாயா? அவர் உனக்கும் நண்பரா?? உன் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் அவரிடம் சொல்வாயா? அவருடைய கிருபை, இரக்கம், அன்பு இவற்றை அறிந்திருக்கிறாயா? அவர் உன்னுடன் பேசுவாரா? இல்லையானால் இன்றே அவரிடம் வா!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                           

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s