Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்!

யோசுவா: 8:1  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;  நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள் மடிந்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்கவைக்கின்றன பல்லாயிரக்கணக்கான மக்கள் விடுமுறைக்காக செல்லும் இந்தக் கணவாய் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும்!

இதைப் பற்றி நான் வாசித்தபோது, இதைக் கண்களால் கண்டு ரசிக்காமல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றுதான் தோன்றியது. நாம் கண்களால் காண்பவைகளைத் தான் நாம் ரசித்து அனுபவிக்க முடியும். நாம் எதையும் அனுபவித்து களிகூற வேண்டுமானால் அதை நம் கண்களால் காண வேண்டும் அல்லவா?

இன்றைய வேத பகுதியில் இதைதான் கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார். இன்று நான் உனக்கு கொடுக்கும் வெற்றியை உன் கண்களால் கண்டு களிகூறு என்கிறார்.

இதோ…. ஒப்புக்கொடுத்தேன்  என்ற வார்த்தைகளை கவனியுங்கள்! ஏதோ கடந்த கால அற்புதங்களை அவனுக்கு நினைவூட்டும் வார்த்தைகள் இல்லை அவை. அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிறவைகளை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இல்லை அவை. கர்த்தர் அவனிடம்  இதோ உன் வெற்றியைப் பார் என்று அவன் கண்முன்னால் காட்டுவதுபோல உள்ளது. நீயே உன் வெற்றியை பார்! அனுபவி! என்பதைப்போல் உள்ளது.

இன்று நாம் இரண்டு அருமையான பாடங்களை இந்த யோசுவா 8:1 லிருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.

சில நேரங்களில் நம்மால் எதையும் தெளிவாக பார்க்க முடியாத மனசூழ்நிலையில் இருப்போம். நம் மனக்கண்களை திரை போல ஒன்று மூடிகொண்டு நம்மால் கர்த்தரின் கரம் நம்மை ஆகோர் பள்ளத்தாக்கு வழியாக நடத்துவதை காணமுடியாமல் இருக்கலாம். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து வெற்றிசிறந்ததையும் உணராமல் இருக்கலாம். கர்த்தர் இன்று நம்மிடம் இதோ உன் வெற்றியை உன் கண்களால் பார்! என்கிறார். உன் மனத்திரையைக் கிழித்து உன் கண்களால் பார்!

ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற தோல்விகள் நம்மை சூழும்போது, மன சோர்புகள் உறைந்தபனிபோல் நம்மேல் வந்திரங்கும்போது, நாம் தலையைத் தூக்கமுடியாமல் முகங்குப்புறவிழுந்து கிடக்கும்போது கர்த்தர் நம்மைப் பார்த்து, இதோ உன் வெற்றி என் கரத்தில் உள்ளது, எழுந்திரு, உன் வெற்றியை என் கரத்திலிருந்து பெற்றுக் கொள் என்கிறார்.

 இதை கர்த்தர் யோசுவாவுக்கு மட்டும் அல்ல, அல்லது எனக்கு மட்டும் அல்ல, உங்கள் ஒவ்வொருவருக்கும் கூறுகிறார்.

கர்த்தராகிய இயேசு, உங்களுக்காக சிலுவையில் பெற்ற வெற்றி என்னும் பரிசை அவருடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன். அவரை நோக்கிப் பாருங்கள்! அவர் உங்களுக்காக வைத்திருக்கிற வெற்றியின் வாழ்க்கைத் தெரியும்!

ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற பாவங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற அவமானங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற சோதனைகள், இன்று கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் வெற்றியுள்ள வாழ்க்கையை மறைத்துப் போடலாம். இதுவரை அனுபவிக்காத அந்த வெற்றியின் வாழ்க்கை இன்று உங்களுடையதாகட்டும்!

இயேசு கிறிஸ்து என்பவர் ஜீவனுள்ள தேவன்! அவர் வேதத்தில் கூறியவை அனைத்தும் சத்தியம்! அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவார். அவரை விசுவாசிப்பாயானால் வெற்றி நிச்சயம்!

ஆகோரின் பள்ளத்தாக்கு என்பது இன்று உன் வாழ்வில் வறுமை, பெலவீனம், தோல்வி, பாவம், மரணம் என்ற எதுவாக இருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு உனக்கு வெற்றியளிப்பார்!

சூழ்நிலைகள் எதிர் திசையை நோக்கிக் காட்டினாலும்,

வெற்றி என்பது இயலாத ஒரு காரியமாய்த் தோன்றினாலும்

தேவன் நமக்கு கொடுத்த வாக்குகள் நிச்சயமாய் நிறைவேறும்!

இதோ வெற்றி உன் பக்கம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

2 thoughts on “மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s