புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்! ( மாற்கு:6:50)

“தளர்ந்த கைகளை திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்,

மனம்பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ உங்கள் தேவன் நீதியை

சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்…”  ஏசாயா: 35: 3,4

 

 

ராஜாவின் மலர்கள் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

பயம் என்பது நம்மில் அனேகருக்குள் பலவிதங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த வருடத்தின் கடைசிநாளில் தாணே புயல் காற்று வீசியதால் வந்த அழிவைப் பார்த்து கலங்கினோம்.

கடந்த வருடத்தில் வாழ்க்கைப்புயலினால் அடிபட்டவர்கள் பலருண்டு.

 

இயேசுவின் சீஷர்கள் புயல் அடித்தபோது கலங்கிப் போயினர். அவர்கள் பயத்தை அதிகரிக்கும்படியாய் தூரத்தில் ஒரு உருவம் கடலின்மேல்

நடந்து வந்ததைக் கண்டனர். பயத்தினால் உறைந்து போய் விட்டார்கள். அப்பொழுது கடலின்மேல் நடந்து வந்த இயேசு அவர்களைப்

பார்த்து திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள் என்றார். அவர்கள் இயேசுதான் என்று உணர்ந்தவுடனே அவர்கள்

பயம் ஓடிப்போயிற்று!

அதேவிதமாக எம்மாவுக்கு போகும்வழியில் சீஷர்கள் இயேசுவை அறியாததினாலே அவர்கள் உள்ளம் கலங்கியிருந்தது. அவர்கள் அவரை

இயேசு என்று அறிந்தவுடனே அவர்கள் பயம் நீங்கி தெளிவடைந்தார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றின விசுவாசம், அவரோடு  அதிக நேரம் செலவிட்டு அவரை அதிகதிகமாய் அறிந்து கொள்ளுதல், இவை

நம்முடைய பயத்தை அறவே போக்கிவிடும்.

திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள் என்று கர்த்தராகிய இயேசு இன்று நம்மிடம் கூறுகிறார். அவர் நம்மோடு இருக்கிறார்

என்ற நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் நாம் இந்த வருடத்துக்குள் காலடி எடுத்து வைப்போம்!

 

கர்த்தர்தாமே இந்த வருடம் முழுவதும் நம்மோடிருந்து காத்து வழிநடத்துவாராக!

 

உங்கள் சகோதரி

 

பிரேமா சுந்தர் ராஜ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s