கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 470 மன உறுதியோடு முன் செல்!

நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த  தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன் வரை,  பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

என்னுடைய இளவயதில் வர்ணம் ஆர்ட் ஸ்கூல் என்ற கலைக்கூடத்தின் மூலம் படங்கள் வரையவும், பெயிண்ட் செய்யவும் கற்றுக்கொண்டேன். அதை ஆரம்பிக்கும் போது ஏதோ அந்தக் கோர்ஸ் முடியும்போது நான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட் ஆகி விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அந்தக் கலையில் கற்றுக் கொள்ளவேண்டியது வெறும் 10% தான், மன உறுதியோடு பயிற்சி செய்ய வேண்டியதோ 90% என்றப் பாடத்தை தான் முதலில் கற்றுக்கொண்டேன்.

மன உறுதியோடு செய்யும் கடினமான பயிற்சிக்கு பின்னர்தான் ஒரு கலைஞன் உருவாகிறான்! விடாமுயற்சியோடும், உறுதியான மனப்பான்மையோடும் நாம் உழைக்கும்போதுதான் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும்.

மன உறுதி என்ற வார்த்தைக்கு உதாரணமே நம் தெபோராள் தான்! இந்த வீரப் பெண்மணியின் மன உறுதி கர்த்தருடைய வழிநடத்துதலை அவள் தெளிவாகக் காண உதவியது!

தேவனாகிய கர்த்தர் தெபோராளிடம் ஒரு செய்தியைக்கொடுத்து அதை இஸ்ரவேலின் சேனாதிபதி பாராக்கிடம் கூறு என்றபோது, ஒரு துளி தயக்கமும் இன்றி ஆண் உலகத்தில் நுழைந்து பாராக்கை எழுந்திரு என்று உலுக்கி எழுப்பினாளே அந்த மன உறுதியை சிந்தித்து பாருங்கள்!

யாபீன் என்ற கானானியரின் ராஜாவும், சிசெரா என்ற சேனாதிபதியும், 900 இருப்பு ரதங்களோடு , இருமாப்பாய் அடக்கி ஆண்டபோது,அவர்களை வெற்றி பெறக்கூடிய தகுதியில் இஸ்ரவேலின் சேனை இல்லாமலிருந்தபோது,  தேவனாகிய கர்த்தர் தெபோராளுக்கு கொடுத்த வெற்றியின் செய்தியை அவள் விசுவாசித்து, கர்த்தருடைய வார்த்தைகளை சிறிதுகூட சந்தேகப்படவோ அல்லது இது எப்படியாகும் என்று ஆராய்ச்சி செய்யாமல், முழுமனதாக அவரைப் பற்றி, இஸ்ரவேலை வெற்றிபெற செய்தாளே அந்த மன உறுதியை சற்று சிந்தித்து பாருங்கள்!

தெபோராள் மற்ற தீர்க்கதரிசிகள் போல பாராக்கிடம் தேவனுடைய செய்தியைக் கொடுப்பதே என் கடன் என்று நினையாமல், தான் ஒரு பெண் என்று கூட நினையாமல் அவனோடு புறப்பட்டு, யுத்தம் நடந்த இடத்தில் தங்கி, இஸ்ரவேலின் சேனை வெற்றி பெற்று முடியும் வரை, முன்னின்று காரியத்தை நடத்தினாளே அந்த மன உறுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள்!

தெபோராளின் வாழ்க்கை , எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் மன உறுதியை பிரதிபலிக்கிறது அல்லவா? வேதத்தில் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவ திருச்சபையின் சரித்திரத்திலும், கர்த்தர் தங்களுக்கு அளித்த பொறுப்பை மன உறுதியோடு நிறைவேற்றிய அநேக தேவனுடைய பிள்ளைகளை கண்டிருக்கிறோம்!

நம்மை சுற்றிய சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் சரி, சோர்ந்து போகாமல்,  தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து முன் செல்!  நீ செல்லும் பாதையில் கல்லும் முள்ளும் இருக்கலாம், பெரியத் தடைகள் இருக்கலாம், நீ சாதிக்க வேண்டிய காரியம் பெரிய மலைபோல உன் கண்களில் தெரியலாம்! தெபோராளின் மன உறுதியோடு செல்!

செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுத்த பின் தடைகளைப் பார்த்து பின் வாங்காதே! கடின உழைப்பும், மன உறுதியும் உன்னை வெற்றியின் பாதையில் நடத்தும்! கர்த்தரைப் பின்பற்றும் தீர்மானத்திலும் உறுதியாய் இரு! தெபோராளைப் போல படிப்படியாய் கர்த்தருடைய வழிநடத்துதலைக் காண்பாய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

2 thoughts on “மலர் 7 இதழ்: 470 மன உறுதியோடு முன் செல்!”

 1. அன்பு சகோதரர் அவர்களே

  கடந்த 10 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தேன்.

  வேலை காரணமாக அடிக்கடி வெளி ஊர் செல்ல வேண்டி இருந்ததலும.

  பகுதி நேர ஊழியன் எனவே ஊலியமும செய்ய முடிய இயலாத காரணத்தால் மிகுந்த மன வேதனை
  அதிகமாகி வேலையை விட்டு விட்டேன்

  சுமார் 6மாதம் காலம் முழு நேர ஊழியம் செய்ய தேவன் இப்படி பட்ட சோதனை
  அனுமதித்து இறுக்கிரார் என்று வீட்டில் இருந்தேன்.

  அதன் பின் இப்போது ஒரு வேலைக்கு போகிறேன்.வேளையில் பிரச்னை இல்லை.ஊழியத்திலும்
  இல்லை.

  ஆனால் பொருளாதார ரீதியாக குறைவு பட்டு கஷ்ட பாடுகிரேன் .

  பழைய வேலையை விட்டு இப்படி கஷ்ட படுகிறமே என்ற குற்ற மன சாட்சி என்னை
  வாட்டுகின்றது

  இப்போ நான் என்ன செய்வது என்று தெரியல குழப்பம் வேதனையை அதிக படுத்துகிறது

  பிரபாகரன் கோவை
  9994239663
  On 06-Sep-2016 6:01 am, “Prema Sunder Rajs Blog” wrote:

  > Rajavinmalargal posted: “நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும்,
  > நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம்
  > பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த
  > தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந”
  >

  1. உங்களை எங்கள் ஜெபத்தில் தாங்குகிறோம்.

   உங்கள் சகோதரி

   பிரேமா சுந்தர் ராஜ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s