தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “
இருபத்தொரு வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். வட இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் இருவருமே வேலையை ராஜினாமா செய்துவிட்டு இரண்டு இளம் வயது பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டோம். அந்த மாற்றத்தை நாங்கள் தேர்ந்தெடுத்த போது எங்களை சார்ந்த அனைவருமே பயந்தார்கள். எப்படி சென்னையில் வந்து வாழப்போகிறோம், எப்படி பிள்ளைகளை படிக்க வைக்கப் போகிறோம் என்று நாங்கள் ஒருசில வேளைகளில் சற்று பயந்தாலும், கர்த்தர் எங்களை வழிநடத்தியதை உணர்ந்து முதல் அடியை எடுத்து வைத்தோம். ஆனால் இன்று நாங்கள் அப்படிப்பட்ட முடிவை எடுத்த அந்த நாளுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.
இன்று நாம் படிக்கிற வேதாகமப்பகுதியில் நகோமி தன் வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒரு முக்கிய முடிவை எடுப்பதைக் காண்கிறோம். அந்த மாற்றம் அவள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது!
நம்முடைய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும்போது நடக்கும் சில முக்கியமானக் காரியங்களை நாம் இந்த இரு வசனங்களிலும் காண்கிறோம். ஏனெனில் மாற்றம் என்பது சுலபமான காரியம் அல்ல. சில வேளைகளில் நம்முடைய எல்லாவித வசதியான வாழ்க்கையையும் விட்டு விட்டு ஒரு புதிய மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய கால கட்டத்தில், பிள்ளைகளுக்கு ஸ்கூல் மாற்றுவது கூட சுலபம் இல்லை.
இதேமாதிரி ஒரு மாற்றத்தைத்தான் எலிமெலேக்கு தன் குடும்பத்தாருக்கு செய்தான், ஆனால் அது நன்மையாக முடியவில்லை. மாற்றம் எப்பொழுதுமே நன்மையில்தான் முடியும் என்று நாம் சொல்லமுடியாது. அது நம் எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு ஆகாது, ஆதலால் ஆதாயத்துக்காக, பணத்துக்காக, மாற்றத்ததையே தேடி அலைந்து கொண்டிருந்தால் அது நம் குடும்பத்தை வெகுவாக பாதிக்கும்.
இங்கே நகோமி தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்துக்கான முதல் படியை எடுத்து வைக்கிறாள். ஒரு தனிமையான பெண்ணான அவளுக்கு, அயல்நாட்டில் வாழ்ந்த விதவையான அவளுக்கு, தன் புருஷனையும், தன் இரு குமாரரையும் இழந்த அவளுக்கு, ஒரு பெண்ணால் சாதிக்க முடியாத இவ்வளவு பெரிய மாற்றத்துக்கான தைரியத்தைக் கொடுத்தது யார் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா! தேவனுடைய பெலன் இல்லாமல் அவளால் அந்த சிந்தனையைக்கூட ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.
இன்று உன் வாழ்க்கையை சுற்றியுள்ள சூழலில் உல்லாசமாக அமர்ந்துவிடாதே! இதுதான் வாழ்க்கை, நான் எப்பொழுதுமே இப்படித்தான் இருக்கப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை கர்த்தர் ஒரு மாற்றத்துக்கு உன்னை அழைப்பாரானால் கீழ்ப்படி! நகோமியைப் போல எந்தக் கஷ்டத்தையும் எதிர் கொள்ளும் சவாலோடு கர்த்தருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படி!
கர்த்தர் உன்னை அழைக்கும் அந்த மாற்றத்தில் உனக்கு ஒரு பெரிய அற்புதம் காத்திருக்கலாம் யாருக்குத் தெரியும்? உன்னுடைய குறுகிய சிந்தைகளால் அதை இழந்து விடாதே!
மாற்றம் என்பது ஒரு புதிய வாழ்க்கையின் அடையாளம்! கர்த்தர் அழைப்பாரானால் பதில் பேசாமல் கீழ்ப்படி!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்