வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்!
சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று II நாளாகமம் 7:1
ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! சாலொமோன் ஜெபிக்கும் போது ஜனங்கள் எல்லோரும் கூடியிருக்கிறார்கள்! திடீரென்று அக்கினி பலிகளை பட்சிக்கிறது, கர்த்தருடைய மகிமை ஆலயத்தையே நிரப்புகிறது! மகா பெரிய வெளிச்சம்! அங்கிருந்த ஜனங்களைப் பற்றி யோசித்து பாருங்கள்! எல்லோரும் அப்படியே தாழ முகங்குப்புற விழுந்திருப்பார்கள்! ஒரு கணத்தில் அத்தனைபேரும் தேவனோடு ஒப்புரவாகியிருப்பார்கள்! என்ன ஆராதனை!
ஜெபவேளை என்பது நாம் தேவனை சந்திக்கும் வேளை! அவரால் நாம் பரிசுத்தமாக்கப்படும் வேளை! உங்கள் ஆவலை கர்த்தரிடம் இன்று தெரியப்படுத்துங்கள்! வாருங்கள் நாமும் இன்று அவருடைய பிரசன்னத்தில் அவரோடு ஒப்புரவாகலாம்!
தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம் நம் ஜெபத்துக்கு பதிலாய் இறங்கும்!
விசேஷத் தேவைகளை premac2c2gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள். நாம் ஒன்றிணைந்து ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்