ஆதி: 12:10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வண்டியின் சக்கரங்கள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று
அப்பொழுது ஆபிராம், சாராயுடைய வண்டியின் சக்கரம் திசை மாறி, கானானை விட்டு, வழி விலகி எகிப்தை நோக்கி சென்றது.
இன்று காலை உன்னுடைய வாழ்க்கை என்னும் வண்டியின் சக்கரம் தேவனுடைய வழி நடத்துதலை விட்டு வழி விலகி போய்க்கொண்டிருக்கிறதா?
நீதி மொழிகள் 3: 5, 6 ல் சொல்வது போல “ தன் சுய புத்தியில் சாயாமல் முழு இருதயத்தோடும் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து” கானானுக்குள் பிரவேசியாமல், தங்கள் சுயத்தை நம்பி எகிப்துக்குள் நுழைந்தனர் இந்த தம்பதியினர்.
வேதத்தில், எகிப்து தேசம் அடிமைத்தனத்தின் அடையாளமாக காணப்படுகிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அவிசுவாசம் நம்மை பாவம், பயம், நிம்மதியற்ற தன்மை என்கிற அடிமைத்தனத்துக்குள் வழி நடத்தும். கொடிய பஞ்சம் போன்ற கஷ்டங்கள் வருமாயினும் கூட அவருடைய சித்தத்துக்குள் வாழ்வது தான் நமக்கு பாதுகாப்பு. அவரை விட்டு விலகி எகிப்துக்குள் செல்வோமானால், அவருடைய அனுதின கிருபையை இழந்து போவோம். ஆபிராமும், சாராயும் இதை மறந்தவர்களாய் எகிப்து தேசம் சென்று, அங்கேயே தங்கினர்.
அங்கே ஆபிராமுக்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அவன் மனைவி சாராள் மிகுந்த அழகு வாய்ந்தவள். அவளால் தனக்கு ஆபத்து வரும் என்று கருதிய ஆபிராம் அவளை தன் சகோதரி என்று கூறுகிரான். அவன் கூறியதில் பாதி உண்மை உண்டல்லவா? அவள் ஆபிராமின் தகப்பன் தேராகுக்கு பிறந்தவள் தானே!
அச்சமயம் சாராள் ஒரு இளம் பெண்ணல்ல. வயதும், அனுபவமும், புத்திசாலித்தனமும் வாய்ந்த பெண். பார்வோனின் பிரபுக்கள் அவளைப் பற்றி பார்வோன் முன் புகழ, அவள் பார்வோன் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
அங்கே என்ன நடந்தது? பஞ்சம் என்கிற சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள தேவனுடைய சித்தத்திலிருந்து வழி விலகிப் போனதால் வந்த பேராபத்து என்ன? இவற்றை நாளைப் பார்ப்போம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்