கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?

ஆதி: 21: 1 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

 

ஆபிரகாம் சாராளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் உருண்டோடின!

கர்த்தர் வாக்குரைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான்.  ஆபிரகாம் என்பதற்கு ‘ திரளான ஜனத்துக்கு தகப்பன்” என்று அர்த்தம். சாராளிடம் அவள் கணவன் பேரைக் கேட்டுவிட்டு எத்தனை பேர் நகைத்திருப்பார்கள்!

ஆதி: 12 ல் ‘ நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன்’ தேவன் வாக்களித்தபோது ஆபிரகாமுக்கு  வயது 75.  இருபத்து நான்கு வருடங்களுக்கு பின்னர்,  ஆதி: 17:19 ல் சாராள் பெறும் குமாரனோடு தான் என் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் ( ஆகார் பெற்ற இஸ்மவேலோடு அல்ல ) என்று தேவன் கூறியபோது , பலரின் நகைப்புக்கும், இருதயத்தைப் பின்னும் வேதனைக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆபிரகாம் சாராள் தம்பதியினர் மனதில் எவ்வளவு பெரிய விசுவாசம் இருந்திருக்கும் என்று நினைகிறீர்கள்? எத்தனை நாட்கள் இதைக் குறித்து பேசியிருப்பார்கள்! விசேஷமாக அவர்கள் வயது முதிர்ந்து, சரீரம் செத்து போன வேளையில், இது வெறும் கனவாகத்தானே தோன்றியிருக்கும்!

ஈசாக்கின் பிறப்பின் மூலமாக நம் தேவன் வாக்கு மாறாதவர் என்று இந்த தம்பதியினரின் வாழ்வில் நிரூபித்தார்.  தன்னுடைய  நூறாவது வயதில் பிறந்த  இந்த செல்லக் குமாரனுக்காக பெரிய விருந்து ஒன்று நடத்தினான் ஆபிரகாம். ஊரே திரண்டு வந்து பங்கு பெற்ற அந்த விருந்து கர்த்தர் அந்தக் குடும்பத்துக்கு காட்டின இரக்கத்தை மாத்திரம் அல்ல, பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியதிருந்தாலும் அவர் தம் பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வல்லவர் என்று அந்த ஊருக்கே பறை சாற்றிற்று.

எபிரேயர் 6:15 ல் அவன் பொறுமையாய்க்  காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்  என்று வாசிக்கிறோம். எத்தனை வருடங்களாய் பொறுமை? இருபத்து ஐந்து வருடங்களாய் !  பலமுறை இந்த தம்பதியினர் தவறு செய்தாலும், தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை   அவர்களின் உள்ளம் விசுவாசித்தது.

ஆபிரகாம், சாராள் தம்பதியினரின் வாழ்வில் விசுவாசமும், பொறுமையும் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்திற்று. எப்படிப்பட்ட வல்லமை! மரித்த சரீரத்துக்கு  இணையான இரு சரீரங்களை உயிர்ப்பித்து வாக்குத்தத்தத்தின் குழந்தை பிறக்கும்படி செய்த மகா வல்லமை!

நம்மில் பலருக்கு விசுவாசமுண்டு ஆனால் பொறுமை உண்டா? எல்லாமே நமக்கு உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நினக்கிறோம் அல்லவா? இப்பொழுதே! இப்பொழுதே பதில் தாரும் என்று எத்தனை பேர் அதிகாரத்தோடே ஜெபிக்கிறீர்கள்? ஜெபத்திற்கு உடனே பதில் வேண்டும்! இல்லையானால் கர்த்தர் மேல் கோபம்!  இனி ஜெபிக்கவே  மாட்டேன் என்ற சபதம் வேறு சிலருக்கு!  எத்தனை பொறுமையற்றத் தன்மை நம்மில் காணப்படுகிறது!

அன்பின் சகோதர சகோதரிகளே! தேவன் நீங்கள் ஜெபித்த காரியத்திற்கு பதிலளியாமல் ‘காத்திரு’ என்று சொல்வாரானால் தளர்ந்து போக வேண்டாம்!

ஒரு வருடமல்ல, பல வருடங்கள் காத்திருக்க நேர்ந்தாலும், ஆபிரகாம், சாராள் தம்பதியினரை நினைத்துக்கொள்! தேவன் தம்முடைய மகா வல்லமையை உன்னில் வெளிப்படுத்தவே உன்னை காத்திருக்க சொல்கிறார்! காத்திரு என்று கர்த்தர் கட்டளையிடுவாரானால் அவர் உனக்காக யாவையும் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். விசுவாசத்தோடு பொறுமையாயிரு! தேவன் குறித்த காலத்திலே பெரிய ஆசீர்வாதம் உனக்குக் காத்திருக்கிறது!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

1 thought on “இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?”

  1. Patient and Faith always go together in a believers life. Abraham and Sarah were suitably reward for their Faith and Patent. Yes. We need to WAIT upon God for His time. We have a God who understands us better than any body in the world. He has chosen us when we were in our mother’s womb. For we are fearfully and wonderfully made. Psalm 139. ( must read the whole chapter and must be greatful to Him all through our lives.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s