இரண்டத்தனையான ஆசீர்வாதத்தை கொடுத்த ஜெபம்!
யோபு:42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார்”
வாருங்கள் இந்த சனிக்கிழமையும் நாம் ஒன்றுபட்டு ஜெபிப்போம்!
யோபு தனக்காக அல்ல, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய தேவையை இரண்டத்தனையாய் சந்தித்தார்.
நம்மையே பற்றியே சிந்திக்காமல், தேவனுடைய சமுகத்தில் நாம் நம்மை சுற்றி உள்ள மக்களுக்காக, தேவையிலும், கஷ்டத்திலும் உள்ளவர்களுக்காக, வாதையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக, ஜெபிக்கும்போது, கர்த்தர் நம்முடைய தேவைகளை அற்புதமாய் சந்திப்பார், நம்முடைய சிறையிருப்பை மாற்றுவார். இதையே இன்றைய வேதபகுதி நமக்குப் போதிக்கிறது!
முக்கியமான ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள். கர்த்தர் இந்த நாளை நமக்கு ஆசிர்வதிப்பாராக!
இன்று ஒரு மணி நேரமாவது என்னோடு சேர்ந்து ஜெபிக்க மாட்டீர்களா!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்.
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.