கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1126 இன்றைக்குத் தேவையான கிருபையைத் தாரும்!

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

யோசுவா:24:17 ”..நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே.”

என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது வெளியில் எந்த விதமான பழ ரசமும் வாங்கமாட்டேன். வீட்டிலேயே பழங்களை வாங்கி அதை ஜூஸ் போட்டு வைப்பேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கருப்பு திராட்சை கிரஷ் பண்ணுவது! கடினமான வேலைதான் ஆனாலும் செய்யும்போது ஆர்வமாக இருக்கும். அது பாட்டில்களை கழுவி ஸ்டெரிலைஸ் பண்ணுவதில் ஆரம்பிக்கும். பின்னர் பழங்களை கழுவி, ஒரு அகல பாத்திரத்தில் போட்டு சற்று வேகவிட்டு, அடுப்பின்மீது இருக்கும்போதே அதை மத்தால் கடைந்து சாறு எடுத்து, அந்த சாறு அளவுக்கு சர்க்கரை எடுத்து, பாகு காய்த்து,. கிரிமிகள் அணுகாமல் பாதுகாக்க சிட்ரிக் ஆக்ஸிட், சோடியம் பென்சோனேட் போட்டு, கலர் சேர்த்து…… அப்பப்பா! பெரிய வேலை! கடைசியாக சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் ஊற்றி, காற்று போகாமல் சீல் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்! இப்படியாகத்தான் பழசாறு சேதமடையாமல் பதப்படுத்தப்படும்!.

இங்கு நாம் வாசிக்கும் வசனத்தில் ராகாப் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டாள் என்று பார்க்கிறோம்.

கானானிய வேசியான ராகாப் தான் இஸ்ரவேலின் தேவனைப்பற்றி கேள்விப்பட்டவைகள் மூலமாக காணப்படாத தேவனை விசுவாசித்து, இஸ்ரவேலின் வேவுகாரர் தன்னிடம் வந்தபோது அவரைத் தொடர்ந்து விசுவாசித்ததால், அவள் தேவனாகிய கர்த்தராலே சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டாள்.

 நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால், தொடர்ச்சியான விசுவாசம் அதற்கு தேவையான இன்னொரு கல் என்று நாம் நேற்று பார்த்தோம். சேதமடையாமல் பாதுகாக்கப்படுவது நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான இன்னொரு கல்!

கர்த்தர் ராகாபை ஒரு நல்ல தகப்பனாக, அவள் சேதமடையாமல் தம்முடைய செட்டைகளின்கீழே பாதுகாத்தார்! அவிசுவாசம் என்ற கிருமி ராகாபை சேதமடையச் செய்யாதபடி பாதுகாத்தார்! கீழ்ப்படியாமை என்ற கிருமியிடமிருந்து அவளைக் காத்துக்கொண்டார்.  ராகாப் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டாள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அதற்குள் அவள் எத்தனை முறை அக்கினியில் வேக வேண்டியிருந்தது என்று நமக்குத் தெரியாது!  நம்மை நாமே காத்துக்கொள்ள முயற்சி செய்வோமானால் ஒருவேளை தவறிவிடலாம்! கர்த்தரை சார்ந்து, அவரை விசுவாசித்து, அவரிடம் நம்மை ஒப்படைத்து வாழ்வோமானால் அவர் நம்மை சேதமின்றி காப்பார்! 

நாமும் எத்தனை முறை அக்கினி போன்ற அனுபவங்களில்  கடந்து செல்கிறோம்!  சரியான சமயத்தில் கர்த்தரின் அன்பின் கரம் ராகாபைக் காத்தது போல நம்மையும் பாதுகாக்கும்! நம்முடைய வாழ்க்கையில் சோதனையின் உச்சிக்குத் தள்ளப்படும்போது பயப்பட வேண்டாம்!  ராகாபை சேதமடையாமல் காத்த தேவன் உன்னையும் காப்பார்!

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் இன்று நிற்பதும் நிமூலமாகாதிருப்பதும் தேவனாகிய கர்த்தருடைய சுத்த கிருபையே என்ற உணர முடிகிறதா? நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய குடும்பத்துக்காக இவ்வாறு ஜெபிப்பேன், இன்று எங்களை எல்லாத் தீங்கினின்றும் காத்துக் கொள்ளும், இன்று எங்களை எல்லா சோதனைகளினின்றும் விலக்கிக்காரும், இன்று எங்களுக்குத் தேவையான அப்பத்தைத் தாரும், இன்று நாங்கள் உம்முடைய இராஜ்யத்தின் பிள்ளைகளாக வாழ எங்களுக்கு உதவி தாரும்!

இவ்விதமாக ஒவ்வொருநாளும் நாம் தேவனுடைய செட்டையின்கீழ் அடைக்கலம் அடையும்போது அவர் நம்மை சேதமடையாமல் காப்பார்! ராகாப் மாத்திரம் அல்ல, நீங்களும் நானும் கர்த்தருக்கு விசேஷமானவர்கள். இந்த உலகத்திலேயே நீ மாத்திரம்தான் அவருடைய பிள்ளை போல உன்னை நேசிப்பார்! பாதுகாப்பார்!

 உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

2 thoughts on “இதழ்: 1126 இன்றைக்குத் தேவையான கிருபையைத் தாரும்!”

 1. What a way to learn and draw the truth from Rehab’s life. Yes. Our God would help us in our dark moments, when we feel as if we were walking in Fire. Rehab believed in God and that saved her life and her house hold. Let’s have faith like Rehab.

 2. On Mon, 15 Mar 2021 at 20:34, Prema’s Tamil Bible Study & Devotions wrote:

  > Prema Sunder Raj posted: ” எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி
  > வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச்
  > சேதமாகாதிருந்தாள்.” யோசுவா:24:17 ”..நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம்
  > கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பற்றினவர் நம்முடை”
  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s