உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார். இன்று… Continue reading இதழ்:1119 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்!
Category: குடும்ப தியானம்
இதழ்: 1118 நம் வாழ்வில் கிரியை செய்யும் போதனை!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.” நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும் பார்த்தோம்.… Continue reading இதழ்: 1118 நம் வாழ்வில் கிரியை செய்யும் போதனை!
இதழ்: 1117 நான் பயப்படும் வேளை உம்மையே பற்றுவேன்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading இதழ்: 1117 நான் பயப்படும் வேளை உம்மையே பற்றுவேன்!
இதழ்:1116 என்றென்றும் நிலைத்திருக்கும் நட்பு!
உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் முதன்முறை இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது நாங்கள் இருவரும் தனியாகவே சென்றோம். எந்த ஒரு குழுவோடும் சேர்ந்து செல்லவில்லை. அப்பொழுது கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்படுமுன்னர் முழங்கால் படியிட்டு இரத்தம் வேர்வையாக சிந்த ஜெபித்த ஒலிவ மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது… Continue reading இதழ்:1116 என்றென்றும் நிலைத்திருக்கும் நட்பு!
இதழ்: 1115 பரிசுத்தமும் அசுத்தமுமே ஆசீர்வாதமும் சாபமும்!
உபாகமம்: 28:15 ” இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” இந்தப் புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் நம் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமையவேண்டுமென்று ஜெபிக்கிறேன்! கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய்,… Continue reading இதழ்: 1115 பரிசுத்தமும் அசுத்தமுமே ஆசீர்வாதமும் சாபமும்!
இதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்!
உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.” ஒருகாலத்தில் நான் அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் இருந்தன! அங்கு நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில்… Continue reading இதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்!
இதழ்: 1113 புத்துணர்ச்சி தரும் மழைத்துளிகள்!
உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். மே மாதத்தில் ஒருநாள், நாங்கள் காரில் பெங்களூருக்கு போய்க் கொண்டிருந்தோம். அன்று மழைக்கு எந்த அறிகுறியுமே இல்லை. சென்னையிலிருந்து வேலூர் வரை கடும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது! வேலூரைத் தாண்டி சற்று தூரம் சென்றவுடன் திடீரென்று மின்னல்களோடு, கருமேகத்துடன் மழை கொட்டியது. அப்படிப்பட்ட மழையை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என்றைக்குமே… Continue reading இதழ்: 1113 புத்துணர்ச்சி தரும் மழைத்துளிகள்!
இதழ்: 1112 தேவனுடைய ஆசீர்வாதத்தில் உனக்கு கனமும் மரியாதையும் உண்டு!
உபாகமம்: 28:10 ”அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.” நான் கல்லூரியில் படித்த நாட்களில் நாங்கள் அனைவரும் பயந்த ஒரு பேராசிரியை இருந்தார்கள். அவர்களைக் கண்டால் பயம் என்றவுடன் அவர்களைப்பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். மரியாதையால் வந்த பயம். அழகும், நவீனமும், அறிவும், திறமையும் கொண்ட அவர்களை எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள். யாருடைய வகுப்பை தவற விட்டாலும் சரி, அவர்கள் வகுப்புக்கு சரியாக போய்விடுவோம், வேலையை சரியாக செய்துவிடுவோம்.… Continue reading இதழ்: 1112 தேவனுடைய ஆசீர்வாதத்தில் உனக்கு கனமும் மரியாதையும் உண்டு!
இதழ்:1111 சத்தியமே பரிசுத்தமாக்கும்!
உபா:28:9 ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்”. நான் வாலிப நாட்களில் தேவனை அதிகமாய் அறிகிற ஆவலில் அநேக சபைகளுக்கு சென்றிருக்கிறேன். வெண்மை வஸ்திரம் தரித்து ஆலயத்துக்கு வருபவர்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணியதுண்டு! பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசினால் நாம் பாவிகளாகி விடுவோம் என்று எண்ணிய பரிசுத்தவான்களையும் பார்த்திருக்கிறேன். நீண்ட ஜெபம் செய்தவர்களும், நீண்ட அங்கி தரித்தவர்களும் கூட என்னுடைய பரிசுத்தவான்கள் என்ற… Continue reading இதழ்:1111 சத்தியமே பரிசுத்தமாக்கும்!
இதழ்: 1110 ஆசீர்வாதம் என்னும் தொடர் சங்கிலி!
உபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். இதைத்தான் நான் இன்றைய வேதாகமப்பகுதியில் காண்கிறேன்! உன் கர்ப்பத்தின் கனியும்….. ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நாம் நேற்று பார்த்தவிதமாக, நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால், எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம். கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சூழ்ந்திருக்கும்! அதுமட்டுமல்ல, கர்த்தருடைய பிரசன்னமானது கர்ப்பத்தின்… Continue reading இதழ்: 1110 ஆசீர்வாதம் என்னும் தொடர் சங்கிலி!