2 சாமுவேல் 11: 25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்..... நீ யுத்தத்தை பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். வேதத்தில் நாம் படிக்கிற சில அதிர்ச்சியான சம்பவங்களில் ஒன்றுதான் நாம் படித்துக்கொண்டிருக்கிற உரியாவின் கதையும். நாம் தாவீது, பத்சேபாள், உரியாவின் சரித்திரத்தைத் தொடரும்போது, தாவீது யுத்தத்திலிருந்து செய்தி கொண்டுவந்த ஆளிடம் தன்னுடைய ஆர்மி ஜெனெரல் யோவாபிடம் கூறும்படி சொல்லிய வார்த்தைகள் அவனுடைய… Continue reading இதழ்:1445 ஒரு உத்தம ஊழியனுக்கு கிடைத்த பரிசு!
Category: குடும்ப தியானம்
இதழ் 1444 தேவனை அவமானப்படுத்திய ஒரு திட்டம்!
2 சாமுவேல் 11: 18 - 21 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி ...... நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால் உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். தாவீது, பத்சேபாள், உரியா என்னும் முக்கோணத்தில் கவனிக்கப்படாமல் போகும் பகுதி இன்றைய வேதபகுதி என்று நினைக்கிறேன். இந்த வசனங்கள் நமக்கு இஸ்ரவேல் அம்மோனியரோடு செய்த யுத்தத்தை விளக்குகிறது. இதுவரை இஸ்ரவேலின் சேவகர் நன்றாகத்தான்… Continue reading இதழ் 1444 தேவனை அவமானப்படுத்திய ஒரு திட்டம்!
இதழ்:1443 தவறை சுட்டிக்காட்டுவதே நல்ல நட்பின் அடையாளம்!
2 சாமுவேல் 11:16 அப்படியே யோவாப் அந்தப்பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். தமிழில் ஒரு பழமொழி உண்டு அல்லவா? உன் நண்பனைக் காட்டு உன்னைப்பற்றி சொல்லுகிறேன் என்று. நம்முடைய நட்பை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று உலகம் கணித்து விடும். ஒரு நல்ல நட்பு கிடைப்பது அரிது தானே! இன்றைய வேதாகம வசனம் எனக்கு தாவீது யோவாபோடு கொண்டிருந்த நட்பைத்தான் சிந்திக்க வைத்தது. சற்று பின்னே திரும்பிப் பார்ப்பொமானால்… Continue reading இதழ்:1443 தவறை சுட்டிக்காட்டுவதே நல்ல நட்பின் அடையாளம்!
இதழ்: 1442 தேவனுக்குகந்த நறுமணம் வீசும் வாழ்க்கை!
2 சாமுவேல்: 11: 17 பட்டணத்து மனுஷர் புறபட்டு வந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள். ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். இமாலய மலையில் மலையில் அமைந்துள்ள தரம்ஷாலா என்ற பட்டணத்துக்கு சென்றபோது உய்ரமான ஒரு மலைக்கு சென்றோம். ஒருபக்கத்தில் அழகிய லேக் இருக்கும் அந்த மலையின் அடுத்தபகுதி கண்கொள்ளாத பள்ளத்தாக்கு. மேலிருந்து பார்க்கும்போது ஆங்காங்கே காணப்பட்ட வீடுகள் பொம்மை வீடுகள் போல இருந்தன. அங்கே தென்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி ஏதோ வெள்ளைக் கோடு… Continue reading இதழ்: 1442 தேவனுக்குகந்த நறுமணம் வீசும் வாழ்க்கை!
இதழ்:1441 புயலடிக்கும் வாழ்வில் பயமே வேண்டாம்!
2 சாமுவேல்: 11:15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். எனக்கு மிகப்பிடித்த ஒரு ஆங்கில மாத இதழ் உண்டு. முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்பு நான் ஆந்திராவில் இருந்தபோது யாரிடமாவது சொல்லியனுப்பி சென்னையிலிருந்து இந்த இதழை வாங்குவேன். அதிலிருந்து சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அதில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காட்டப்படுகிற வாழ்க்கையே வேறு. ஒரு உயர்ந்த வாழ்க்கையை வரையறுத்துக்… Continue reading இதழ்:1441 புயலடிக்கும் வாழ்வில் பயமே வேண்டாம்!
இதழ்:1440 தாவீதின் கீழ்த்தரமான ஒரு நிருபம்!
2 சாமுவேல்: 11:15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். தாவீதின் நகரமாகிய எருசலேமில் சூரியன் அஸ்தமித்துவிட்டது. ராஜாவாகிய தாவீது தன்னுடைய படுக்கை அறையில் தூக்கமில்லாமல் புரளுகிறான். அவன் மனது படபடத்தது. அவன் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றேத் தெரியவில்லை. அவன் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்று தவறாக எண்ணி தன்னை இச்சைக்குட்படுத்தி விட்டான். இப்பொழுது… Continue reading இதழ்:1440 தாவீதின் கீழ்த்தரமான ஒரு நிருபம்!
இதழ்: 1439 நேர்மையானதையே செய்வேன் ஏனெனில் அதுவே நேர்மையானது!
2 சாமுவேல் 11:11 .......நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இந்த புதிய மாதத்தை காணச்செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம். இந்த மாதம் முழுவதும் அவர் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு நம்முடைய பரம பிதாவிடம் ஒரு நிமிடம் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். கொள்கைரீதியாக வாழாத எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் வாழத் தகுதியில்லாதவர்க்ள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்!… Continue reading இதழ்: 1439 நேர்மையானதையே செய்வேன் ஏனெனில் அதுவே நேர்மையானது!
இதழ்:1438 கற்பாறை மேல் அஸ்திபாரம் போடப்பட்ட விசுவாசம்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இன்றைய வேதாகம வசனத்தில் பார்க்கும் சம்பவத்தில் உரியா ராஜாவகிய தாவீதுக்கு முன்னால் நின்றது என் கற்பனையில் வந்தது. நான் அவ்விடத்தில்… Continue reading இதழ்:1438 கற்பாறை மேல் அஸ்திபாரம் போடப்பட்ட விசுவாசம்!
இதழ்:1437 பிரிவினைகள் அற்ற ஒரே நோக்கம்!
2 சாமுவேல் 11: 11 ..... பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில்.....நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தோடு வாழத்தானே ஆசைப்படுகிறோம்? சிலருக்கு வாழ்வில் உயருவதே நோக்கம், சிலருக்கு பிள்ளைகளைக் குறித்த நோக்கம். என் வாழ்க்கையில் நோக்கமே இல்லை, நான் எதையும் பற்றிக் கவலைப்படாமல் எனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவரை நான் இதுவரைப்… Continue reading இதழ்:1437 பிரிவினைகள் அற்ற ஒரே நோக்கம்!
இதழ்:1436 நம்மைப்போல கர்த்தரின் நிழலில் வந்த ஒருவன்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். தாவீதைப் பற்றியே படித்துக் கொண்டிருக்கும் நாம் உரியாவைப் பற்றி ஏன் சற்று படிக்கக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் இந்த… Continue reading இதழ்:1436 நம்மைப்போல கர்த்தரின் நிழலில் வந்த ஒருவன்!