யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். இன்று நாம் மோசேயை மணந்த சிப்போராளைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம்! மோசே!!!!!! 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து… Continue reading இதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா?
Tag: ஆபிரகாம்
இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
ஆதி:24:67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனையாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். நம்முடைய முற்பிதாக்களான ஆபிரகாம், சாரளுடைய காலம் வேகமாய்க் கடந்தது. ஆதியாகமம் 23 ம் அதிகாரத்தில் சாராள் 127 ம் வயதில் மரித்துப் போவதையும் அவளை அடக்கம் பண்ண ஆபிரகாம் ஒரு நிலத்தை வாங்குவதையும் பற்றிப் படிக்கிறோம். ஈசாக்கு வளர்ந்து திருமண வயதை அடைந்து விட்டான்! ஆதி 24 ம் அதிகாரம் நமக்கு ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில்… Continue reading இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
ஆதி: 21: 1 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆபிரகாம் சாராளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குரைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘… Continue reading இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!
ஆதி: 19: 29 தேவன் அனதச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார். லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று கடந்த வாரம் பார்த்தோம். இன்று இஸ்ரவேல், மட்டும் யோர்தான் நாடுகளில் கடல் மட்டத்திலிருந்து 400 அடி கீழே ஓடும் உப்புக்கடல் அல்லது Dead sea என்றழைக்கப்படும் ஆற்றின் பகுதியில் எங்கேயோ… Continue reading இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!
இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை!
ஆதி: 18:16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு சோதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை… Continue reading இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை!
இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?
ஆதி: 18:13,14 அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? ஆபிரகாம் விருந்தினரை உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம். வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர், சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்?… Continue reading இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?
இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
ஆதி: 18: 1-2, ....அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இதோ மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்... காலத்தின் சக்கரங்கள் வேகமாய் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99. (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் ,… Continue reading இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
ரூத்: 1: 1 “நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று “. தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலாம்? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும்! என்றுதான் எண்ணியிருப்பேன். நீங்கள் எப்படி?… Continue reading இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
இதழ்: 856 இனி கடந்த காலத்தைப் பற்றிய கவலையேவேண்டாம்!
மத்தேயு: 1: 1-5 “ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; யூதா பாரேசையும் சாராவையும் தாமாரிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.” வேதத்தில் நாம்… Continue reading இதழ்: 856 இனி கடந்த காலத்தைப் பற்றிய கவலையேவேண்டாம்!
இதழ்:836 உன் திருமண வாழ்க்கையின் கனவுகள் நனவாயிற்றா?
யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். மோசே! 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக் கொடுமைப் படுத்திய… Continue reading இதழ்:836 உன் திருமண வாழ்க்கையின் கனவுகள் நனவாயிற்றா?