நியா: 21:25 “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்”. கடந்த சில மாதங்களாக நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம். கர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள்.… Continue reading இதழ்: 1183 தன் நேரம்தான் சரி என்று நினைக்கும் கடிகாரம் போல!
Tag: காலேப்
இதழ்:1153 தயக்கமின்றி கேள்! நிச்சயமாய் கிடைக்கும்!
யோசுவா: 15: 19 அப்பொழுது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்.அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின்… Continue reading இதழ்:1153 தயக்கமின்றி கேள்! நிச்சயமாய் கிடைக்கும்!
இதழ்:1152 உன் உள்ளத்தின் வாஞ்சைகளை அறிந்த தேவன்!
யோசுவா: 15:18 காலேப் (அவளைப்) பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றான். யோவான்: 5:6 (இயேசு) அவனை நோக்கி சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். இயேசு கிறிஸ்துவானவர் இந்த பூமியில் வாழ்ந்த போது, தான் சென்ற இடமெல்லாம் நோயாளிகளை சொஸ்தமாக்கினார் என்று நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அப்படிப் பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் பெதஸ்தா குளத்துக்க்கரையில் 38 வருடங்களாகக் காத்திருந்த ஒரு மனிதனை சுகமாக்கியது. அன்றைய நாட்களில், நோய் என்பது ஒருவனுடைய பாவத்தினால் வரும் தண்டனை என்று… Continue reading இதழ்:1152 உன் உள்ளத்தின் வாஞ்சைகளை அறிந்த தேவன்!
இதழ்: 1151 நாம் கேட்பதற்கு மேலாகக் கொடுக்கும் தகப்பன்!
யோசுவா: 15:18 அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு , கழுதையின் மேலிருந்து இறங்கினாள். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில்… Continue reading இதழ்: 1151 நாம் கேட்பதற்கு மேலாகக் கொடுக்கும் தகப்பன்!
இதழ்: 1150 உனக்காய்க் காத்திருக்கும் எதிர்காலம்!
யோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.” நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக… Continue reading இதழ்: 1150 உனக்காய்க் காத்திருக்கும் எதிர்காலம்!
இதழ்: 1149 நம்மை எதிரிகளிடமிருந்து காக்க வல்லவர்!
யோசுவா: 15: 14 “அங்கேயிருந்து சேசாய், அதீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்தி விட்டு,” நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading இதழ்: 1149 நம்மை எதிரிகளிடமிருந்து காக்க வல்லவர்!
இதழ்: 1147 பெலவீனமான நம்மைத் தூக்கி சுமக்கும் தகப்பன்!
யோசுவா: 14: 12 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்கு போக்கும் வரத்துமஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசித்த பின்னர் காலேப் அவர்களை நோக்கி நாற்பது வருடங்களுக்கு முன்னால் தான் இஸ்ரவேலை… Continue reading இதழ்: 1147 பெலவீனமான நம்மைத் தூக்கி சுமக்கும் தகப்பன்!
இதழ்: 1146 பரம தகப்பனின்அளவற்ற பரந்த அன்பு!
யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோஎன் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு திரும்பினர்.… Continue reading இதழ்: 1146 பரம தகப்பனின்அளவற்ற பரந்த அன்பு!
இதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்!
யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். இந்த யோசுவாவின் புத்தகத்தில் அடுத்தபடியாக நாம் காலேபுக்கும் அவன் மகள் அக்சாளுக்கும் இடையில் இருந்த ஒரு அருமையான உறவைப் பற்றிப்பார்க்கப்போகிறோம். யோசுவா 14 ம், 15 ம் அதிகாரங்களில், மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுகாரனாய் அனுப்பப்பட்ட காலேபைப் பற்றியும் அவன் குமாரத்தி அக்சாளைப் பற்றியும் படிக்கிறோம். ஆச்சரியப்படும் விதமாக, இதே கதை நியாதிபதிகள்… Continue reading இதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்!
இதழ்: 1098 எனக்கு ஏன் இந்த தண்டனை?
எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.” இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும்… Continue reading இதழ்: 1098 எனக்கு ஏன் இந்த தண்டனை?