1 சாமுவேல் 15: 10,11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே என்னைப்போல நீங்களும் நினைக்கிறீர்கள்! இந்த… Continue reading இதழ்: 1310 உன்னை நேசிப்பவருக்கு இந்த மனவேதனையை கொடுக்காதே!
Tag: சாமுவேல்
இதழ்: 1306 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!
1 சாமுவேல் 13: 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்! இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத… Continue reading இதழ்: 1306 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!
இதழ்: 1305 இன்னும் சற்று பொறுமையோடு காத்திரு!
1 சாமுவேல் 13:7,8 ...சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்.சகல ஜனங்களும் பயந்து கொண்டு அவனுக்குப்பின் சென்றார்கள். அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனைவிட்டுச் சிதறிப்போனார்கள். ஒருமுறை ஒரு செயற்குழுவுக்குச் சென்றிருந்தேன். காலை 10.30 க்கு அங்கேயிருக்க வேண்டுமென்று அவசர அவசரமாக சென்றால் 11.15 வரை நாங்கள் 3 பேர் தான் உட்கார்ந்திருந்தோம். செயற்குழு தலைவர் எப்பொழுதும் எங்களுக்கு முன்னால் வருபவர். அன்றைய தாமதத்தின் காரணம் தெரியாமல் காத்திருந்த… Continue reading இதழ்: 1305 இன்னும் சற்று பொறுமையோடு காத்திரு!
இதழ்:1289 உன் வீட்டில் பரலோகத்தின் சாயல் உள்ளதா?
1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எவ்வளவு சோர்பாக இருந்தாலும் நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கிடைக்கும்… Continue reading இதழ்:1289 உன் வீட்டில் பரலோகத்தின் சாயல் உள்ளதா?
இதழ்:1281 கர்த்தரின் சத்தம் நம் பிள்ளைகளின் செவிகளில் விழுகிறதா?
1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான். 1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். ஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு… Continue reading இதழ்:1281 கர்த்தரின் சத்தம் நம் பிள்ளைகளின் செவிகளில் விழுகிறதா?
இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
ஆதி: 25: 20 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர்… Continue reading இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து... ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள்… Continue reading இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
1 சாமுவேல் 28:3 - 5 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்..... பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது. தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன், நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன். பெலிஸ்தர்… Continue reading இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!
1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர். ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார். மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட… Continue reading இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!
இதழ் 592 அவர் நாமம் பெற்றுத் தந்த மன்னிப்பு!
1 சாமுவேல் 12:20,22 அப்பொழுது சாமுவேல் ஜங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள். நீங்கள் இந்த பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள். ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக் கொள்ள பிரியமானபடியால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார். அமெரிக்க தேசத்தில் ஒலி ஒளி அரங்கத்தில் ஒருமுறை கிறிஸ்துவின் பிறப்பை சித்தரித்த நாடகத்தையும், மறுமுறை மோசேயின் சரித்திரத்தையும் காண கர்த்தர் உதவி செய்தார். அந்த நாடகங்களின் சிறப்பு அம்சமே அதன்… Continue reading இதழ் 592 அவர் நாமம் பெற்றுத் தந்த மன்னிப்பு!