ஆதி: 35:8 “ ரெபேக்காளின் தாதியாகிய தெபோராள் மரித்து, பெத்தேலுக்கு சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் பண்ணப் பட்டாள், அதற்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று.” நாம் நேற்று யாக்கோபை விட்ட போது, அவன் தன் குமாரரிடம் இன் வாசனையை நீங்கள் இந்த இடத்தில் கெடுத்து விட்டீர்களே என்று புலம்பக் கூடிய அளவுக்கு, லேவியும், சிமியோனும் மூர்க்கமாய் நடந்தனர் என்று பார்த்தோம். ஆனால் ஆதி: 34 லிருந்து, 35 க்குள் போகும்போது, தேவனை விட்டு விலகி இருந்த இந்த குடும்பம்… Continue reading இதழ்: 1027 இந்த தெபோராளை நீங்கள் சந்தித்ததுண்டா?
Tag: சாராள்
இதழ் 1013 ஆபிரகாம் எப்படித் தேர்ச்சி பெற்றார்???
ஆதி:25:1 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்” நான் தற்போது கர்த்தர் கொடுத்த அதிக நேரத்தைப்பயன்படுத்தி டாலஸ் தியாலாஜிக்கல் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆதியாகம புத்தகத்தைப் படிக்கும்போது அதின் பேராசிரியர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களில் விசுவாசத்தில் சிறந்தவர் யாராக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். வேதாகமத்தைப் படித்தால் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்தில் சிறந்திருந்தவன் யோசேப்பே என்று கூற முடியும். ஆனால் ஆபிரகாம் அல்லவா விசுவாசத்தின் தந்தை… Continue reading இதழ் 1013 ஆபிரகாம் எப்படித் தேர்ச்சி பெற்றார்???
இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
ஆதி:24:67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனையாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். நம்முடைய முற்பிதாக்களான ஆபிரகாம், சாரளுடைய காலம் வேகமாய்க் கடந்தது. ஆதியாகமம் 23 ம் அதிகாரத்தில் சாராள் 127 ம் வயதில் மரித்துப் போவதையும் அவளை அடக்கம் பண்ண ஆபிரகாம் ஒரு நிலத்தை வாங்குவதையும் பற்றிப் படிக்கிறோம். ஈசாக்கு வளர்ந்து திருமண வயதை அடைந்து விட்டான்! ஆதி 24 ம் அதிகாரம் நமக்கு ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில்… Continue reading இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
ஆதி: 21: 1 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆபிரகாம் சாராளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குரைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘… Continue reading இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?
ஆதி: 18:13,14 அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? ஆபிரகாம் விருந்தினரை உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம். வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர், சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்?… Continue reading இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?
இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
ஆதி: 18: 1-2, ....அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இதோ மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்... காலத்தின் சக்கரங்கள் வேகமாய் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99. (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் ,… Continue reading இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
ஆதி: 12:10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வண்டியின் சக்கரங்கள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம்… Continue reading இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
இதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு! இலகுவாய் முடியும்!
ஆதி: 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி : நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ நேற்று நாம் 'ஆபிராமின் மனைவியும், மலடியுமான’ என்று கருதப்பட்ட சாராயைப் பற்றிப் பார்த்தோம். சாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்களானால், தேராகு சாராயின் தகப்பனா? அவன்… Continue reading இதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு! இலகுவாய் முடியும்!
இதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது! ஆனாலும்!!!!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில், கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது! ஆனாலும்!!!!
இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
2 சாமுவேல் 13:1,2 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன், இசைக்கருவி வாசிக்கும் கலைஞன், ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் - அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய… Continue reading இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!