நியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம். இப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து வருவோம். இதை நாம் படிக்கும்போது கிதியோன் எப்படியொரு சிக்கலான மனிதன் என்று தெரிந்து கொள்ளப்போகிறோம். நியாதிபதிகளின் புத்தகம் ஆறாவது அதிகாரம் “பின்னும் இஸ்ரவேல்… Continue reading இதழ்: 1178 உன்னால் காண முடியாத உன் எதிர்காலம்!
Tag: சிசெரா
இதழ்: 1170 தேவவனுடைய பணி செய்யும் குழுவில் நீயும் தேவை!
நியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது. இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக… Continue reading இதழ்: 1170 தேவவனுடைய பணி செய்யும் குழுவில் நீயும் தேவை!
இதழ்: 1169 எதிரியை அசட்டை பண்ணாதே! ஒழித்து விடு!
நியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்” ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் மோட்டார் பைக்கில் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு… Continue reading இதழ்: 1169 எதிரியை அசட்டை பண்ணாதே! ஒழித்து விடு!
இதழ்: 1168 இனிய ரூபமும் ஆசை வார்த்தைகளும் கொண்டு வரும் சாத்தான்!
நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்! அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின் கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான். அதற்காக… Continue reading இதழ்: 1168 இனிய ரூபமும் ஆசை வார்த்தைகளும் கொண்டு வரும் சாத்தான்!
இதழ்: 1167 பொல்லாங்கனுக்கு உன் கூடாரத்தில் இடம் கொடுக்காதே!
நியா: 4:19 ” அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். இன்றைக்கு மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன! உடம்பிலிருந்து ஆவி குறைவது போல் இருந்தது.… Continue reading இதழ்: 1167 பொல்லாங்கனுக்கு உன் கூடாரத்தில் இடம் கொடுக்காதே!
இதழ்: 1166 உன்னுடைய நட்பு உன்னைப் பிரதிபலிக்கும்!
நியா: 4: 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டு போய்; உள்ளே வாரும்: என் ஆண்டவனே,என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; யாகேல் என்னும் பெயருக்கு வரையாடு என்று அர்த்தம் என்று பார்த்தோம். அவள் ஒரு நாடோடிப் பின்னணியில் வளர்ந்திருக்கக் கூடும் என்றும் பார்த்தோம். யாகேல் முரட்டுப் பெண்ணாக வளர்ந்திருக்கலாம் ஆனால் முட்டாள் பெண்ணாக அல்ல! புத்திசாலி என்று எண்ணப்படுகிற எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனையும், பிள்ளைகளையும் கூர்ந்து கவனிப்பாள். கணவனுடைய நட்பும், பிள்ளைகளுடைய… Continue reading இதழ்: 1166 உன்னுடைய நட்பு உன்னைப் பிரதிபலிக்கும்!
இதழ்: 1164 ஒளித்து வைக்கப்பட்ட சிற்றின்பம்!
நியா: 4: 17 “சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.” வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய 900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன! இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், ” தலைப்புச் செய்திகள்… சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!”… Continue reading இதழ்: 1164 ஒளித்து வைக்கப்பட்ட சிற்றின்பம்!
இதழ்: 1163 உம்முடைய பெலத்தால் என்னை பெலப்படுத்தும்!
நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.” நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார் என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம். இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்… Continue reading இதழ்: 1163 உம்முடைய பெலத்தால் என்னை பெலப்படுத்தும்!
இதழ்: 1162 சர்வ வல்ல தேவன் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்! அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று… Continue reading இதழ்: 1162 சர்வ வல்ல தேவன் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
இதழ்: 1158 பனித்துளிகள் ஒன்றிணைந்து பனிக்கட்டி ஆவதில்லையா? ?
நியாதிபதிகள் : 4 : 8 “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. நம்முடைய அணியின் வெற்றிக்கு, சச்சின் மாதிரி ஒரே ஒரு நல்ல விளையாட்டு வீரன் இருப்பதைவிட, பல நல்ல வீரர்கள் இருக்கும் ஒரு கூட்டணியாக இருப்பது தான் மிகவும்… Continue reading இதழ்: 1158 பனித்துளிகள் ஒன்றிணைந்து பனிக்கட்டி ஆவதில்லையா? ?