நியாதிபதிகள்: 16:5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; ஏதேன் தோட்டத்தில் ஒருநாள் சர்ப்பமானவன் ஏவாளின் வருகைக்காகக் காத்துக்கொண்டேயிருந்தான். தனிமையில், தற்காப்பு இல்லாமல் வந்த ஏவாளின் பெலவீனத்தை தாக்கினான்! சர்ப்பம் தந்திரமாக வைத்த வலையில் விழுந்தாள் ஏவாள். 1 பேதுரு 5: 8 ல் பேதுரு நம்மிடம் சாத்தான் எவனை விழுங்கலாமோவென்று… Continue reading இதழ்: 1218 உன் வாழ்க்கையை வீணாக்கும் மதுவும் மங்கையும்!
Tag: சிம்சோன்
இதழ்:1213 உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்…
நியாதிபதிகள்: 14:3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். இன்று நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம். தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள் தான்… Continue reading இதழ்:1213 உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்…
இதழ்: 1212 கண்களும் கவனமும் திசை திருப்பும் ஆசைகள்!
நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை’செய்யாதிருப்பாயாக’ , அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே… Continue reading இதழ்: 1212 கண்களும் கவனமும் திசை திருப்பும் ஆசைகள்!
இதழ்:1209 இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் !
நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். நேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய… Continue reading இதழ்:1209 இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் !
இதழ்:1199 சிம்சோன் விழுந்த மலர்களால் நிறைந்த குழி!
நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம். ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள்… Continue reading இதழ்:1199 சிம்சோன் விழுந்த மலர்களால் நிறைந்த குழி!
இதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை!
ஏசா: 49: 16 இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒரு நண்பர் போன் பண்ணினார். அநேக வருடங்கள் கழித்து அவருடைய குரலைக் கேட்டபோது என்னால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் உங்களோடு படித்தேனே உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று பலமுறை கேட்டார். நான் அத்தனை வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் கொடுத்த ஒரு செய்தியையும் ஞாபகம் வைத்திருப்பதாக சொன்னார். நிச்சயமாக நானும் அந்த நண்பரின் பெயரையும்,… Continue reading இதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை!
இதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு!
நியாதிபதிகள்: 16: 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். தெலீலாளின் மடியில் நித்திரை அடைந்த சிம்சோன், தூக்கத்திலிருந்து எழுந்த போது , நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை, நாம் நம் கண்களின் இச்சையின்படி எடுப்போமானால் என்ன நடக்கும் என்று மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது! அவன் தெலீலாளின் பிடியில் இருந்தபோது மூன்று காரியங்கள் நடந்தது என்று… Continue reading இதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு!
இதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்!
நியாதிபதிகள் 16: 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. சில நேரங்களில் தலைமுடியை சற்று அதிகமாக டிரிம் பண்ணிவிட்டு, ஐயோ அதிகமாக வெட்டிவிட்டோமே, வளர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமே என்று கவலைப்படுவதுண்டு. ஆனாலும் ஆச்சரியப்படும்படியாய் வெட்டிய முடி வளர்ந்து விடுகிறது. அப்படித்தான் நம்முடைய கதாநாயகன் சிம்சோனின் வெட்டிய முடி வளர ஆரம்பித்தது. சிம்சோனின் வாழ்க்கையில் முடி வளர ஆரம்பித்தது சரீரப்பிரகாரமாக அவனுக்குக் கிடைத்த பரிசு மட்டுமல்ல ஆவிக்குரிய பரிசும்தான்! நாம்… Continue reading இதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்!
இதழ்: 945 சிம்சோனுக்கு போடப்பட்ட கால்க்கட்டு!
நியாதிபதிகள் 16: 6, 7 தெலீலாள் சிம்சோனைப் பார்த்து; உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப் படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு சிம்சோன்; உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். பெரியவர்கள் நம் வீடுகளில் அடிக்கடி ‘ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் திருமண பந்தத்தையே கால்க்கட்டு என்றனர்… Continue reading இதழ்: 945 சிம்சோனுக்கு போடப்பட்ட கால்க்கட்டு!
இதழ்: 944 பணம்! மிகப் பெரிய பணம்!
நியாதிபதிகள்: 16:5 “அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்”. இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்போது எப்பொழுதும் பணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயத்திற்காகவே சிம்சோனின் கதை எழுதப்பட்டது போல எனக்குத் தோன்றியது. நியாதிபதிகள் 16:4 ல் சிம்சோன் தெலீலாளை… Continue reading இதழ்: 944 பணம்! மிகப் பெரிய பணம்!