ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” நாம் ரூத்தின் புத்தகத்தை இன்றோடு முடிக்கப் போகிறோம்! கடந்த முறை பெத்லெகேமுக்கு சென்றபோது மேய்ப்பர்கள் மந்தையைக் காத்த இடம் என்ற ஒரு பரந்த வெளிக்கு சென்றோம். அங்கு நடந்து கொண்டிருந்த போது அது ஒருகாலத்தில் போவாஸ், ரூத்துடைய வயல்வெளியாக இருந்த இடம் என்று சொன்னார்கள். இந்தமுறை ரூத்தின் புத்தகம் எழுதும் போது அந்த வயல்வெளி என் மனக்கண்களில் தோன்றியது!… Continue reading இதழ்:1260 குடும்பம் என்னும் அழகிய மலர்த்தோட்டம்
Tag: நகோமி
இதழ்:1259 கடினமான வாழ்வு கற்றுத்தந்த பொறுமை!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்:1259 கடினமான வாழ்வு கற்றுத்தந்த பொறுமை!
இதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்!
ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.” நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்டஒரு பேருண்மை ஒன்று உண்டு. கர்த்தர் நம்மை உருவாக்கும்போது நமக்கு ஒரே ஒரு வாயை ஏன் கொடுத்தார் தெரியுமா? நாம் குறைவாக பேசவேண்டும் என்பதற்காகவே! அதே சமயம் அவர் நமக்கு இரண்டு செவிகளைக் கொடுத்ததின் அர்த்தம் நாம் அதிகமாக செவிசாய்த்து கேட்க வெண்டும் என்பதற்காகவே என்ற வார்த்தைகள் என் மனதில்… Continue reading இதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்!
இதழ்: 1253 முதிர் வயதிலே ஆறுதலும் ஆதரவும் அளிப்பவர்!
ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு… Continue reading இதழ்: 1253 முதிர் வயதிலே ஆறுதலும் ஆதரவும் அளிப்பவர்!
இதழ்: 1252 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ள வந்தவர்!
லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். அன்று என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து… Continue reading இதழ்: 1252 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ள வந்தவர்!
இதழ்:1247 கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழ்வதே பாதுகாப்பு!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. அன்பின் சகோதர சகோதரிகளே இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்! நாம் இன்று உயிரோடிருப்பதும், நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபை அல்லவா? நன்றியோடு அவரை துதிப்போம்! கடந்த மாதம் நாம் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து… Continue reading இதழ்:1247 கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழ்வதே பாதுகாப்பு!
இதழ்:1246 இருதய நிறைவால் உன் வாய் துதி பேசும்!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில் ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன்.… Continue reading இதழ்:1246 இருதய நிறைவால் உன் வாய் துதி பேசும்!
இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்!
ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர்… Continue reading இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்!
இதழ்: 1241 என் வாழ்வு கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது?
ரூத்: 1: 16 “… உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” ஒருநாள் இண்டெர்னெட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி மருத்துவங்களைப் பற்றிய கேள்வி பதில்களுக்கு பதில் கொடுத்து என்னுடைய மருத்துவ அறிவை வளர்க்க சற்று முயற்சி செய்வேன். ஆனால் அன்று நான் பங்கு பெற்றது கொஞ்சம் வித்தியாசமானது. கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் விளையாட்டு. சில கேள்விகளுக்கு அநேகருடைய பதில் ஒரேமாதிரி இருந்தது. உதாரணமாக, 1.… Continue reading இதழ்: 1241 என் வாழ்வு கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது?
இதழ்: 1240 நம் சபையை சேராதவர்களை நேசிக்கிறோமா?
ரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவள்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல! அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட… Continue reading இதழ்: 1240 நம் சபையை சேராதவர்களை நேசிக்கிறோமா?