1 சாமுவேல்: 25 2-3 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது. அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது..... அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர். வேதத்தை வாசிக்க வாசிக்கத்தான் நாம் அது எத்தனை அருமையான பொக்கிஷம் என்பதை உணர முடியும்! அது இந்த வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது நான் மிகவும் உணர்ந்தேன். இதை ஒவ்வொருநாளும் நாம் வாசிப்போமானால் எத்தனையோ பொல்லாங்குகளிலிருந்து… Continue reading இதழ்:1346 தேவன் இல்லையென்று மதிகெட்டவன் சொல்கிறான்!
Tag: நாபால்
இதழ்: 653 அவசரமாய் தேர்ந்தெடுத்த துணை!
1 சாமுவேல்: 25:42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய் அவனுக்கு மனைவியானாள். நான் இதற்கு முன்னால் இந்தப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம், ஒரு பணக்கார விதவையான அபிகாயில், தாவீதை மணந்து சந்தோஷமாக வாழ்ந்தாள் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அபிகாயிலின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் படிக்கும் போது தான் அது தவறான எண்ணம் என்று புரிந்தது. தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியபோது அவள்… Continue reading இதழ்: 653 அவசரமாய் தேர்ந்தெடுத்த துணை!
இதழ்: 651 கல்லைப்போலான இருதயம்!
1 சாமுவேல் 25:37-38 பொழுது விடிந்து நாபாலின் வெறி தெளிந்தபின்பு அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள். அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறைய பத்து நாளுக்கு பின்பு அவன் செத்தான். நாபாலின் வீட்டில் ராஜவிருந்து நடந்துமுடிந்தது. மதுபானத்தை அதிகமாக அருந்தியிருந்ததால், அன்று இரவு நாபாலிடம் அபிகாயில் எந்தக்காரியத்தையும் சொல்லவில்லை என்று பார்த்தோம். மறுநாள் காலையில், எல்லாவற்றையும் நாபாலுக்கு அவள் அறிவித்தாள். நாம் அவளுடைய காலத்துக்கு… Continue reading இதழ்: 651 கல்லைப்போலான இருதயம்!
இதழ்: 650 பேசுவதில் விவேகம்!
1 சாமுவேல் 25: 36 .....அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. அபிகாயில் தாவீதை சந்தித்துத் திரும்பும்போது ராஜ விருந்து நடந்து கொண்டிருந்தது என்று பார்த்தோம். நாபால் குடித்து வெறித்திருந்தான். அதனால் அபிகாயில் அவனிடம் ஒன்றையும் அறிவிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது. இந்தப்பகுதி மறுபடியும் அபிகாயிலுடைய விவேகத்தை நமக்கு தெளிவு படுத்துகிறது. தாவீதை சந்தித்துத் தன்னுடைய மதிகேட கணவனையும், ஊழியரையும் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து மீட்டு, அவள் வீட்டுக்குத்… Continue reading இதழ்: 650 பேசுவதில் விவேகம்!
இதழ்: 649 கர்த்தர் கணக்கு கேட்டால்?
1 சாமுவேல் 25: 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜாவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது. அவன் இருதயம் களித்திருந்தது. அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. ஆடுகள் மயிர் கத்தரிக்கும் காலம் கடந்து விட்டது! நாபாலுக்கு நல்ல வருமானம்! தாவீதிடம் நீயா நானா என்று பேசிவிட்டு, இப்பொழுது தாவீது நானூறுபேரோடு கர்மேலில் அவனைக்கொல்ல வருவதுகூடத் தெரியாமல் நாபால் வெறித்துக் களித்துக்கொண்டிருந்தான்! அவனுடைய மனைவியாகிய அபிகாயில்… Continue reading இதழ்: 649 கர்த்தர் கணக்கு கேட்டால்?
இதழ்: 642 உன்னை நடத்தும் தேவன்!
1 சாமுவேல் 25: 26 - 27 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்..... இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும். எத்தனையோ வருடங்கள் வேதத்தை ஆழமாகப் படித்திருந்தாலும், வற்றாத நீரோடை போல, ஒவ்வொரு நாளும் நமக்கு… Continue reading இதழ்: 642 உன்னை நடத்தும் தேவன்!
இதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?
1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது. அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம். அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக… Continue reading இதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?
இதழ்: 639 பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்!
1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப் பாதகம் என் மேல் சுமரட்டும். மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன். இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப்… Continue reading இதழ்: 639 பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்!
இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!
1 சாமுவேல் 25: 10-13 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?.... நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்… Continue reading இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!