ஆதி: 25:23 அதற்கு கர்த்தர்; இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது ; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்: அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றார். ஒரு குடும்பத்தில் அநேக பிள்ளைகளோடு வளர்ந்த சிலர், முதல் பிள்ளைக்குத்தான் அம்மாவிடம் பாசம் கிடைக்கும் கடைசி பிள்ளைக்கும் அதில் பங்குண்டு, ஆனால் நடுவில் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொத்து விஷயங்களில் கூட சில பெற்றோர்… Continue reading இதழ் 1015 பிள்ளைகளின் குணத்தின் அழகு இல்லத்தில் பிறக்கும்!
Tag: பிள்ளைகள்
இதழ்: 913 தேவையில்லாத ஒரு பொருத்தனை!
நியாதிபதிகள்:11:34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவ்ள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை, குமாரத்தியும் இல்லை. ஒரு மகளின் சரிதையைப் படிக்கப்போகிறோம்! பெயர் தெரியாத ஒரு மகள்! வயது தெரியாத ஒரு மகள்! அவள் தந்தை பெயர் யெப்தா என்று மட்டும் தெரியும்! அவன் ஒரு பரஸ்திரீயின் மகன்! ஒரு முரட்டு வீரன், யுத்தத்துக்கு அழைப்பவர்களுக்கு உதவியாக சென்று… Continue reading இதழ்: 913 தேவையில்லாத ஒரு பொருத்தனை!
இதழ்: 875 நாம் எதிர்பார்க்கும் முடிவைத் தரும் நம் தேவன்!
யோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.” நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading இதழ்: 875 நாம் எதிர்பார்க்கும் முடிவைத் தரும் நம் தேவன்!
இதழ்: 830 ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்கும் விலைமதிப்பற்ற சொத்து!
எண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்” யோகெபெத்தை நாம் பொறுப்புள்ள ஒரு தாயாகவும், பெலசாலியான ஒரு தாயாகவும், திறமைசாலியான ஒரு தாயாகவும் பார்த்தோம். இந்த தாய் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு எவ்விதமாய் ஒரு ஆசீர்வாதமாக இருந்தாள் என்று பார்க்கலாம். யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர்.… Continue reading இதழ்: 830 ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்கும் விலைமதிப்பற்ற சொத்து!
இதழ்: 772 அப்பா என்னும் அற்புத உறவு!
2 சாமுவேல் 13:13 .... இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள். வேதத்தைப் படிக்கும் ஒவ்வொருநாளும் அதில் நான் கண்டெடுக்கும் முத்துக்கள் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என்று நான் மறுபடியும் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று தெரியாது! இன்றைய வேதாகமப்பகுதி நான் அடிக்கடி நினைக்கும் 'இதை நான் படித்ததே இல்லையே' என்று நினைத்த பகுதிகளில் ஒன்று! ஒருவேளை இந்தப்பகுதி உங்களுக்கும் இன்று புதிதாகத் தெரியலாம்! நேற்று நாம் அம்னோன்… Continue reading இதழ்: 772 அப்பா என்னும் அற்புத உறவு!
இதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா?
2 சாமுவேல் 13: 6 - 7 அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப்பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுபி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான். தேவனுடைய கட்டளையை மீறி பல… Continue reading இதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா?
இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
2 சாமுவேல் 13:1,2 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன், இசைக்கருவி வாசிக்கும் கலைஞன், ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் - அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய… Continue reading இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
இதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்!
2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன். இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும்… Continue reading இதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்!