ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , பழைய புத்தகங்கள், அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று… Continue reading இதழ்:1232 தேவன் உனக்காக திட்டமிட்ட பாதை!
Tag: பெத்லெகேம்
இதழ்: 1226 எங்கே அலைந்து கொண்டிருக்கிறாய்?
ரூத்: 1: 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள். எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. கர்நாட்டகா, தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, உத்தரபிரதேசம் என ஐந்து மாநிலங்களில் வாழ்ந்தோம். ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை… Continue reading இதழ்: 1226 எங்கே அலைந்து கொண்டிருக்கிறாய்?
இதழ்:1068 கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?
லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். இன்று கிறிஸ்மஸ் ஈவ் என்று சொல்லப்படுகிற கிறிஸ்மஸ்க்கு முந்தின தினம்! உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது… Continue reading இதழ்:1068 கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?
இதழ்:1029 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே!!!
ஆதி: 35: 19 – 20 “ ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம். ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஏனெனில்… Continue reading இதழ்:1029 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே!!!
இதழ்: 985 குடும்பத்தை சரியான பாதையில் நடத்தும் ஞானம்!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்: 985 குடும்பத்தை சரியான பாதையில் நடத்தும் ஞானம்!
இதழ்:979 நம்பிக்கை, சந்தோஷம், ஆறுதல் தரும் மீட்பர்!
ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு… Continue reading இதழ்:979 நம்பிக்கை, சந்தோஷம், ஆறுதல் தரும் மீட்பர்!
இதழ்: 978 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளும் தேவன்!
லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து போவாஸின்… Continue reading இதழ்: 978 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளும் தேவன்!
இதழ்:975 இதுவே கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்!
ரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். கடந்த வருடம் எங்களுக்கு மழைகாலமே இல்லாததுபோல சென்னையில் மழையே இல்லை. குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வறண்ட நேரத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன் எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்சி காணப்பட்டது.… Continue reading இதழ்:975 இதுவே கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்!
இதழ்: 972 தேவனுடைய வார்த்தையால் திருப்தியான உள்ளமே துதியால் நிரம்பும்!!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில் ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன்.… Continue reading இதழ்: 972 தேவனுடைய வார்த்தையால் திருப்தியான உள்ளமே துதியால் நிரம்பும்!!
இதழ்: 971 கசப்பைக் களைந்து என் இருதயத்தை புதுப்பியும்!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது.… Continue reading இதழ்: 971 கசப்பைக் களைந்து என் இருதயத்தை புதுப்பியும்!