நியாதிபதிகள் 11:31 “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”. ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்! பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டனர். இன்றும் அந்த வார்த்தைகளை நினைக்கும்போது என் மனதில் எங்கேயோ ஒருஇடத்தில் இரத்தம் கசிவது போல இருக்கும். நான்… Continue reading இதழ்: 1193 சிந்திக்காமல் சிந்தும் வார்த்தைகள்!
Tag: யெப்தா
இதழ்:1191 சுயநலமென்ற சுமைகளை இறக்கி விடு!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் என்னும் இரண்டெழுத்து பெருமை, பொறாமை, சுயநலம், அவல ஆசைகள், கேவலமான நடத்தை போன்ற பல பாவங்களுக்கு ஆதாரம் என்ற நமக்கு நன்றாகத் தெரியும். கடந்த சில நாட்களாக நாம் யெப்தாவின் கதையைப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆண்டவரே இந்தக் கதையின் மூலமாய் நீர் எனக்கு எதைக் கற்பிக்க விரும்புகிறீர் என்று நான் ஒவ்வொருநாளும் ஜெபித்துவிட்டுத்தான்… Continue reading இதழ்:1191 சுயநலமென்ற சுமைகளை இறக்கி விடு!
இதழ் :1187 கிடைத்தவுடன் கொடுத்தவரை மறந்து விடாதே!
நியாதிபதிகள் 11: 32 ” யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்”. இன்றைக்கு உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்! உண்மையாக மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! நீங்கள் வாழ்வின் உச்சியில் சுகமாய் வாழ்ந்த போது எடுத்த ஏதோ ஒரு முடிவினால் வெட்கப்பட்டு தாழ்சியடைந்து நாணிப்போனதுண்டா? அப்படிப்பட்ட தவறு செய்திருப்பீர்களானால், இன்றைய வேதாகமப்பகுதி உங்களுக்குத்தான்! நான் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ள பெயர்களை பார்க்கும்போது இந்தப்பெயர் இங்கு ஏன் இடம்… Continue reading இதழ் :1187 கிடைத்தவுடன் கொடுத்தவரை மறந்து விடாதே!
இதழ்:1186 நாளைக்கு நடக்கப் போவதை அறிவாயோ?
நியாதிபதிகள்: 11:30,31 அப்பொழுது யெப்தா ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் , நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச்சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். நீதிமொழிகளின் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மிகவும் ஞானமுள்ள , ” நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” (நீதி: 27:1) என்ற இந்த வார்த்தைகளை நமக்காகத்தான் கூறியிருப்பார் போலும்… Continue reading இதழ்:1186 நாளைக்கு நடக்கப் போவதை அறிவாயோ?
இதழ்: 1185 நம் பக்கமாய் காற்று வீசும்போது வரும் கர்வம்!
நியாதிபதிகள் 11: 4 – 6 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.” தன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா? கிலெயாத் என்பவன்… Continue reading இதழ்: 1185 நம் பக்கமாய் காற்று வீசும்போது வரும் கர்வம்!
இதழ் 1184 உன்னை நொறுக்கி உருவாக்கும் குயவனிடம் ஒப்புவி!
நியாதிபதிகள்: 11: 1 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.” ஒருமுறை என்னுடைய அப்பாவை இருதய சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் வைத்திருந்த போது, ஒரு நர்ஸ் வந்து அப்பாவின் கடந்த காலத்தைப் பற்றி எழுதினார்கள். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன பழக்கங்கள் இருந்தன? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அப்பாவின் கடந்த காலத்துக்கும் அவருடைய இருதயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை சிந்திக்க வைத்தன அந்த நர்ஸின் கேள்விகள். நம்முடைய கடந்த… Continue reading இதழ் 1184 உன்னை நொறுக்கி உருவாக்கும் குயவனிடம் ஒப்புவி!
இதழ்:923 நீ எடுக்கும் ஒவ்வொரு தவறான அடியும்!!!!!
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக… Continue reading இதழ்:923 நீ எடுக்கும் ஒவ்வொரு தவறான அடியும்!!!!!
இதழ்: 921 உன் கண்ணீர் துடைக்கப்படும்!
என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” ( சங்: 56:8) என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்… Continue reading இதழ்: 921 உன் கண்ணீர் துடைக்கப்படும்!
இதழ்: 920 இன்று நம்முடைய கடமை என்ன?
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம். அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே… Continue reading இதழ்: 920 இன்று நம்முடைய கடமை என்ன?
இதழ்: 919 பயணத்தை இலகுவாக்கும் நல்ல நட்பு!
நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.” இந்தப் புதிய மாதத்தில் தேவனுடைய கிருபை நம்மோடு இருந்து, நம்மை எல்லாத் தீங்குக்கும், நம்மை சுற்றி உலாவும் கொள்ளைநோய்க்கும் விலக்கிக் காக்கும்படி ஜெபிக்கிறேன்! தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையும் மகா இரக்கமும் நம்மோடு இருப்பதாக! நல்ல நண்பர்கள் உங்களுக்கு உண்டா? எப்பொழுதோ ஒருமுறை… Continue reading இதழ்: 919 பயணத்தை இலகுவாக்கும் நல்ல நட்பு!