1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர்! கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார்! ஆம்! அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன்!. கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய… Continue reading மலர் 7 இதழ்: 586 முக அழகா? அக அழகா?
Tag: வேதாகமப் பாடம்
மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை!
1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். இன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு… Continue reading மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை!
மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது!
1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். சமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது… Continue reading மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது!
மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே!
1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள். சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத்… Continue reading மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே!
மலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று!
1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான் அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள். இந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில்… Continue reading மலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று!
மலர் 7 இதழ்: 582 வீடு என்றாலே தனி சுகம்!
1 சாமுவேல் : 7: 15 - 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஒருமுறை 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி… Continue reading மலர் 7 இதழ்: 582 வீடு என்றாலே தனி சுகம்!
மலர் 7 இதழ்: 581 யாரும் உன்னை அணுக முடியாது!
1 சாமுவேல் 7:12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். இருபது வருடங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்ததால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கோபாக்கினையை அனுபவித்துதான் ஆக வேண்டும், அவர்களுக்கு கர்த்தர் எப்படி தயை செய்வார்? கர்த்தர் ஒன்றும் அவர்களை சும்மா விடப் போவதில்லை என்றுதானே நாம் எண்ணுகிறோம்? அவர்கள் சாமுவேலிடம் ஜெபிக்கும் படி வேண்டியபோது கர்த்தருடைய… Continue reading மலர் 7 இதழ்: 581 யாரும் உன்னை அணுக முடியாது!
மலர் 7 இதழ்: 580 இதுவரை பட்டது போதுமப்பா!
1 சாமுவேல் 7:8 (இஸ்ரவேல் புத்திரர்) சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள். இருபது வருடங்கள்! கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப் போய் இருபது வருடங்கள்! பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது போதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர்! எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர்! தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய்,… Continue reading மலர் 7 இதழ்: 580 இதுவரை பட்டது போதுமப்பா!
மலர் 7 இதழ்: 579 உன்னில் ஆரம்பிக்கட்டுமே!
1 சாமுவேல்: 6:1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது. 1 சாமுவேல்: 7:2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாம் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள். பெலிஸ்தர் யுத்தத்தில் இஸ்ரவேலரை வென்றது மட்டுமல்லாமல் வீட்டுக்குத் திரும்பும்போது பெரிய பதக்கம் போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து சென்றனர் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்கள் அதை தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். ஆனால் இரண்டே நாளில் தாகோனுக்குத் தலையும்… Continue reading மலர் 7 இதழ்: 579 உன்னில் ஆரம்பிக்கட்டுமே!
மலர் 7 இதழ்: 578 ஒருவருக்குத்தான் இடம் உண்டு!
1 சாமுவேல் 5: 4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்த போது, இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துக்கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது. பெலிஸ்தர் மிகுந்த ஆர்ப்பரிப்போடு இருந்தனர். இஸ்ரவேல் மக்களை யுத்தத்தில் தோற்கடித்தது மட்டுமல்ல, திரும்பும்போது ஒரு பெரிய பதக்கம் கிடைத்தது போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் கிடைத்தது. அதைக் கொண்டு போய் தாகோனின் கோவிலிலே, தாகோனண்டையிலே… Continue reading மலர் 7 இதழ்: 578 ஒருவருக்குத்தான் இடம் உண்டு!