1 சாமுவேல் 25:34 ... உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடம்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன்.. நம்மில் எத்தனை பேர் ஒருநாளில் ஒன்றுக்கு இரண்டு வேலையை செய்துகொண்டு பிள்ளைகளோடு இருக்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுகூட நமக்குத் தெரியவில்லை! நம்முடைய வேலைகளுக்கே நேரம் ஒதுக்கத் தெரியாதபோது வேதம் வாசிப்பதும், ஜெபிப்பதும் சாத்தியமா என்ன? அபிகாயில், தாவீது என்ற இருவரின் வாழ்க்கையிலிருந்து நாம் இன்னொரு பாடம் கற்றுக்கொள்வோமென்றால்… Continue reading இதழ்: 648 அன்றாட வாழ்வில் எதற்கு முக்கியத்துவம்?
Tag: 1 சாமுவேல் 25
இதழ் 647 பழிவாங்குதல் என்றால்?
1 சாமுவேல் 25:33 ... என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக! ஆலோசனையைக் கொடுப்பதும், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல உறவுக்கு தேவையான அஸ்திபாரம் என்று அபிகாயில், தாவீதின் வாழ்க்கையிலிருந்து பார்த்தோம். இன்றைய வசனத்தில் தாவீது அபிகாயிலிடம், ' என்னுடைய வாழ்வில் யார் எதற்கு பொறுப்பு என்று சற்று ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அபிகாயில்' என்று கூறுவது போல் உள்ளது! கண்ணுக்கு கண் என்ற வேத வசனத்தை இறுகப்பிடித்துக் கொண்டு… Continue reading இதழ் 647 பழிவாங்குதல் என்றால்?
இதழ்: 646 ஆலோசனை மென்மையான பனியைப் போன்றது!
1 சாமுவேல் 25:33 நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும்..... நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக! நமக்கு யாராவது யோசனை சொன்னால் நாம் எப்பொழுதும் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதுண்டா என்று இன்றைய வசனம் என்னை சிந்திக்க வைத்தது. நண்பர்களுக்கு இடையிலாகட்டும், உறவினருக்காகட்டும் ஆலோசனை சொல்வது என்பது ஒரு கடினமான காரியம். அவர்களே யோசித்து நல்ல முடிவு எடுக்கட்டும் நாம் தலையிடக் கூடாது என்றுதான் நினைப்போம். கணவன் மனைவிக்குள்ளும்,… Continue reading இதழ்: 646 ஆலோசனை மென்மையான பனியைப் போன்றது!
இதழ்: 645 உன்னைக் காப்பாற்றும் நல் யோசனை!
1 சாமுவேல் 25: 33 நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. அபிகாயில் சொன்ன யோசனையை தாவீது ஏற்றுக்கொண்டான் என்று பார்த்தோம். இன்றைய வசனத்தைப் படிக்கும்போது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் நீதிமொழிகளில் கூறியது நினைவிற்கு வந்தது நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்; புத்தி உன்னைப் பாதுகாக்கும் (நீதி:2:11) எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். ஆனால் இன்று அபிகாயிலின் வாழ்க்கையின் மூலம், யோசித்தபின்னர் பேசுவதைப் பற்றி வேதத்திலிருந்து அறிகிறோம். நாம் ஒரு காரியத்தைக் குறைவாகப் புரிந்து கொண்டு பேசும்போது என்ன… Continue reading இதழ்: 645 உன்னைக் காப்பாற்றும் நல் யோசனை!
இதழ்: 643 தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகள்!
1 சாமுவேல்: 25: 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி : உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகப்பிரமாதமான விருந்தோடும், சாந்தமான வார்த்தைகளோடும் வந்த அபிகாயில் பேசி முடித்தவுடனே தாவீது அவளிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம். உண்மையை சொன்னால் இந்த வார்த்தைகள் பல காரணங்களுக்காக என்னை மிகவும் தொட்டு விட்டன! முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனெனில் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள்,… Continue reading இதழ்: 643 தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகள்!
இதழ்: 642 உன்னை நடத்தும் தேவன்!
1 சாமுவேல் 25: 26 - 27 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்..... இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும். எத்தனையோ வருடங்கள் வேதத்தை ஆழமாகப் படித்திருந்தாலும், வற்றாத நீரோடை போல, ஒவ்வொரு நாளும் நமக்கு… Continue reading இதழ்: 642 உன்னை நடத்தும் தேவன்!
இதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?
1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது. அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம். அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக… Continue reading இதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?
இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!
1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள்… Continue reading இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!
இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!
1 சாமுவேல் 25: 10-13 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?.... நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்… Continue reading இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!