2 சாமுவேல் 11:2 அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது. தாவீதின் அரசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை. ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று… Continue reading இதழ்:1421 வெளிப்புறமாய் கண்களை அலையவிடும் முட்டாள்தனம்!
Tag: 2 சாமுவேல் 11:2
இதழ்:1420 எச்சரிக்கையை மீறிய தவறான பாதை!
2 சாமுவேல் 11: 2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். இன்றுமுதல் நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் ஆழமாக படிக்கப்போகிறோம். இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை பாருங்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும்… Continue reading இதழ்:1420 எச்சரிக்கையை மீறிய தவறான பாதை!
இதழ்: 1419 உன் வாழ்வில் அந்த ஒரு நொடி உண்டா?
2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள். ஒருநாள் காலையில் வாசலில் கால் வைக்கும்போது ஏதோ ஒன்று நீளமாக இருப்பதுபோலத் தோன்றியது. அந்த இடத்தில் ஒரு தொட்டி வைத்திருந்தேன், அதில் சிவப்பு நிற நீளமான பூக்கள் பூக்கும். அந்தப் பூ காய்ந்து மண் கலரில் விழுந்து கிடக்கும். அன்றும் நான் அந்தப்பூ தான் விழுந்து… Continue reading இதழ்: 1419 உன் வாழ்வில் அந்த ஒரு நொடி உண்டா?