2 சாமுவேல் 3: 26,27 யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான். இன்றைய வசனங்களை என்ன வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை. முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன். எத்தனையோ யுத்ததங்களையும், எத்தனையோ இரத்தவெள்ளத்தையும்… Continue reading இதழ்: 672 பழிவாங்குதல் நமக்குரியது அல்ல!
Tag: 2 சாமுவேல் 3
இதழ்: 671 உள்ளம் போன போக்கில்!
2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்ப்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய சொந்த அனுபவங்களுக்காக நான் இன்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பினது எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை.… Continue reading இதழ்: 671 உள்ளம் போன போக்கில்!
இதழ்: 670 உனக்கு சொந்தமில்லாத ஒன்றின்மேல் ஆசையா?
2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான். தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது. மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது ராஜாவின் மகள் என்பதற்காக மணந்தானா… Continue reading இதழ்: 670 உனக்கு சொந்தமில்லாத ஒன்றின்மேல் ஆசையா?
இதழ்: 669 எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை!
2 சாமுவேல் 3:14 .... நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். ஆனால் சவுல் தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த அநியாயத்தை சரி செய்யப் பார்க்கிறான். இந்த வேளையில் அவனுக்கு ஆறு… Continue reading இதழ்: 669 எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை!
இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!
2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும். நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு… Continue reading இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!
இதழ்: 667 பதவியைத் தேடி ஓடாதே!
2 சாமுவேல் 3: 9-10 நான் ராஜ்யபாரத்தை சவுலின் குடும்பத்தைவிட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கி பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும், யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற்போனால்..... அப்னேர் சவுலின் படைத்தலைவனாக இருந்தவன். சவுலின் எதிர்பாராத மரணத்துக்கு பின், அவன் சவுலின் குடும்பத்துக்குத் தன் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்தான். அவன் தேவன் தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நன்கு அறிந்திருந்தான் என்று இன்றைய வேதாகமப்பகுதி நமக்குத் தெரிவிக்கிறது. ஏழறை வருடங்கள் சவுலின் குடும்பம்… Continue reading இதழ்: 667 பதவியைத் தேடி ஓடாதே!
இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!
2 சாமுவேல் 3: 7 - 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ன்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு....... என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யுதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மைக்கு தட்டுபாடு ஆகிய… Continue reading இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!