Bible Study, Call of Prayer

மலர்: 2 இதழ்: 150 நிலக்கரி வைரமாவது எப்படி?

யோசுவா 2: 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். ராகாபின் சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தபோது பதினைந்து நாட்கள் நாம் தியானைக்கும்படி என்னால் எழுத முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணவேயில்லை. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலுமிருந்து ராகாபைப் பற்றி படிக்க ஆரம்பித்தபோதுதான், இந்தப் பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமே… Continue reading மலர்: 2 இதழ்: 150 நிலக்கரி வைரமாவது எப்படி?

Bible Study

மலர்: 2 இதழ்: 149 உன்னை சுற்றி அமைந்துள்ள எரிகோ மதில்?

யோசுவா: 6:1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. இஸ்ரவேல் மக்கள் கானானின் எல்லையை நெருங்கிவிட்டனர். நாம் ஒருசில மாதங்களுக்கு முன்னால் படித்தவிதமாக மோசே பன்னிரண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பியிருந்தான். அதில் காலேபும், யோசுவாவும் கானானைப் பற்றி பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்ற மகிழ்ச்சியோடு வந்தனர், ஆனால் மற்ற பத்துபேரும் அந்த தேசம் நமக்கு அழிவும் அழுகையும்தான்  என்று துக்கமுகமாய் வந்தனர். தங்களை வழிநடத்தி வரும் தேவனாகிய… Continue reading மலர்: 2 இதழ்: 149 உன்னை சுற்றி அமைந்துள்ள எரிகோ மதில்?

Bible Study

மலர்: 2 இதழ்: 148 ஒரு சிவப்பு நூல் கயிற்றின் கதை!

யோசுவா: 2: 17 ” அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி….” இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் எரிகோவுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி யாராவது புதிய மனிதர் அவள் வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டார்களா என்று விசாரித்தான். உடனடியாக சிந்திக்கும் திறன் கொண்ட ராகாப், அந்த இருவரையும் தன் வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு,… Continue reading மலர்: 2 இதழ்: 148 ஒரு சிவப்பு நூல் கயிற்றின் கதை!

Bible Study

மலர்: 2 இதழ்: 147 குடும்ப விளக்கு!

யோசுவா: 6: 25 எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்து வைத்தபடியினால் அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்.” நமக்கு முன்னே பின்னே தெரியாத இரண்டு பேர் நம் வீட்டுக்குள் வந்து இந்தப் பட்டணம் அழியப்போகிறது, அதில் வாழ்கிற அத்தனைபேரும் அழிந்து போவார்கள் என்றால் நாம் என்ன செய்வோம். உடனே நம் மனதில் என்ன தோன்றும்! ஐயோ என் தம்பி குடும்பத்துக்கு இதை உடனே தெரியப்படுத்த… Continue reading மலர்: 2 இதழ்: 147 குடும்ப விளக்கு!

Bible Study

மலர்: 2 இதழ்: 146 பாவியாகவே வந்தேன்

மத்தேயு: 1: 1-5 “ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; யூதா பாரேசையும் சாராவையும் தாமாரிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.” வேதத்தில் நாம்… Continue reading மலர்: 2 இதழ்: 146 பாவியாகவே வந்தேன்