Tamil Bible study

இதழ்:2440 நீ இடறினாலும் ஆழ்ந்து போக மாட்டாய்!

உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading இதழ்:2440 நீ இடறினாலும் ஆழ்ந்து போக மாட்டாய்!

Tamil Bible study

இதழ்:2439 வானாதி வானங்களைப் படைத்தவரை அறிவாயா?

உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் 2006ல் முதன்முறையாக இஸ்ரவேல் தேசத்துக்கு சென்றபோது, கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல்,  யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி… Continue reading இதழ்:2439 வானாதி வானங்களைப் படைத்தவரை அறிவாயா?

Tamil Bible study

இதழ்:2438 அசுத்தம் என்ற களைகள் நிறைந்த வாழ்க்கையே சாபம் எனப்படும்!

உபாகமம்: 28:15 ”  இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும்  நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய், நீ விளங்காமல் போவாய், என்று சாபமிடுவதையும் கண்களால் பார்த்திருக்கிறேன்.  ஒரு  கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பிள்ளைகள்… Continue reading இதழ்:2438 அசுத்தம் என்ற களைகள் நிறைந்த வாழ்க்கையே சாபம் எனப்படும்!

Tamil Bible study

இதழ்:2437 பதரைப்போல இருக்காதே!

உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.” நான்  அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் உள்ளன! நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான் திரும்புவார்கள்!… Continue reading இதழ்:2437 பதரைப்போல இருக்காதே!

Tamil Bible study

இதழ்:2436 கிருபை என்னும் மழைத்துளிகள் புத்துணர்ச்சியைத் தரும்!

உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். மே மாதத்தில் ஒருநாள், நாங்கள் காரில் பெங்களூருக்கு போய்க் கொண்டிருந்தோம். அன்று மழைக்கு எந்த அறிகுறியுமே இல்லை. சென்னையிலிருந்து வேலூர் வரை கடும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது! வேலூரைத் தாண்டி சற்று தூரம் சென்றவுடன் திடீரென்று மின்னல்களோடு, கருமேகத்துடன் மழை கொட்டியது. அப்படிப்பட்ட மழையை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என்றைக்குமே… Continue reading இதழ்:2436 கிருபை என்னும் மழைத்துளிகள் புத்துணர்ச்சியைத் தரும்!

Tamil Bible study

இதழ்:2435 பூமியிலே உனக்கு கனம் உண்டு!

உபாகமம்: 28:10 ”அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.” நான் கல்லூரியில் படித்த நாட்களில் நாங்கள் அனைவரும் பயந்த ஒரு பேராசிரியை இருந்தார்கள். அவர்களைக் கண்டால் பயம் என்றவுடன் அவர்களைப்பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். மரியாதையால் வந்த பயம். அழகும், நவீனமும், அறிவும், திறமையும் கொண்ட அவர்களை எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள். யாருடைய வகுப்பைத் தவற விட்டாலும் சரி, அவர்கள் வகுப்புக்கு சரியாக போய்விடுவோம், அவர்கள் கொடுக்கும்… Continue reading இதழ்:2435 பூமியிலே உனக்கு கனம் உண்டு!

Tamil Bible study

இதழ்:2434 தேவனில் தரித்திருந்தால் மட்டுமே பரிசுத்தராக முடியும்!

உபா:28:9 ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்”. நான் வாலிப நாட்களில் தேவனை அதிகமாய் அறிகிற ஆவலில் அநேக சபைகளுக்கு சென்றிருக்கிறேன். வெண்மை வஸ்திரம் தரித்து ஆலயத்துக்கு வருபவர்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணியதுண்டு! பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசினால் நாம் பாவிகளாகி விடுவோம் என்று எண்ணிய பரிசுத்தவான்களையும் பார்த்திருக்கிறேன். நீண்ட ஜெபம் செய்தவர்களும், நீண்ட அங்கி தரித்தவர்களும் கூட என்னுடைய பரிசுத்தவான்கள்… Continue reading இதழ்:2434 தேவனில் தரித்திருந்தால் மட்டுமே பரிசுத்தராக முடியும்!

Tamil Bible study

இதழ்:2433 தொடர் சங்கிலியான ஆசீர்வாதம்!

உபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய ஆசீர்வாதம் எங்களுடைய பிள்ளைகள்தான்! அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறார்கள் என்பதுதான் எங்களுடைய மிகப் பெரிய ஆசீர்வாதம். என் மகன் தன்னுடைய குடும்பத்தை கர்த்தருடைய வழியில் நடத்துவதையும், தான் பொறுப்பேற்றிருக்கும் திருச்சபையை திறமையோடு ஆவிக்குரிய வழியில் நடத்துவதும் எனக்கு மிகவும் பெருமையைத் தரும்… Continue reading இதழ்:2433 தொடர் சங்கிலியான ஆசீர்வாதம்!

Tamil Bible study

இதழ்:2432 ஆலயத்திலும் ஆராதிப்பாய்! ஆபீசிலும் ஆராதிப்பாய்!

உபாகமம்:28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! இந்த வேதபகுதியை வாசிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெரும் வீரர்கள், வெற்றி பெற்றவுடனே தங்கள் பயிற்சியாளர்களைக் கட்டித்தழுவுவது நினைவுக்கு வந்தது! ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட அதிகநேரம் பயிற்சியாளரிடம் செலவிட்டு, அவர்களுடைய கூர்மையான கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறுவவதால்தான் சாதனை படைக்கமுடிந்தது! ஒரு நல்ல பயிற்சியாளரைப் போல கர்த்தர் நம்மை ‘பட்டணத்திலும் வெளியிலும்’ தொடருகிறார். சங்கீதக்காரன் ‘நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம்… Continue reading இதழ்:2432 ஆலயத்திலும் ஆராதிப்பாய்! ஆபீசிலும் ஆராதிப்பாய்!

Tamil Bible study

இதழ்:2431 ஏன் ஐயா இந்த வேதனைகள்?

உபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” சென்ற வாரம் நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4:20 லிருந்து வாசித்தோம். இன்னும் இருப்புக்காளவாயின்… Continue reading இதழ்:2431 ஏன் ஐயா இந்த வேதனைகள்?