2 சாமுவேல் 13: 21,22 தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட ஆரம்பித்தனர்! இவர்கள் என்ன செய்கிறார்கள்! ஒருவரை மற்றொருவர் பேசவிடாமல் தடுப்பதுதான் இவர்கள்… Continue reading இதழ்: 1491 வஞ்சம் என்னும் நஞ்சு மறைக்கப்பட்ட வாழ்க்கை!
Category: Tamil Christian Families
இதழ்:1490 வாழ்க்கையே ஒரு ஏற்பாடு என்ற புத்தகம்தான்!
2 சாமுவேல் 14:27 அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர் கொண்ட குமாரத்தியும் பிறந்திருந்தார்கள். இவள் ரூபவதியான் பெண்ணாயிருந்தாள். கடந்த சில நாட்கள் நாம் அம்னோன் தாமார் என்ற தாவீதின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தாமாரைப்போல வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் நம்மில் உண்டு! அவர்களுக்கு தாமாரின் வாழ்க்கை என்ன அர்த்தத்தைக் கொடுக்கும் என்று சற்று ஆழமாகப் படிக்கும்போதுதான் என்னுடைய ஆத்துமாவுக்கு செழிப்பூட்டிய சில உண்மைகளைப் பார்த்தேன். தாமாரைப்பற்றி அதிகம் படிக்க எனக்கு ஆசை வந்ததின் காரணம்… Continue reading இதழ்:1490 வாழ்க்கையே ஒரு ஏற்பாடு என்ற புத்தகம்தான்!
இதழ்:1488 உன்னை மனதளவில் கறைப்படுத்திய அந்த நாள்!
2 சாமுவேல் 13: 17 - 19 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி கதவைப்பூட்டு என்றன்..... அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்துக், சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள். இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்தபின் அவளை… Continue reading இதழ்:1488 உன்னை மனதளவில் கறைப்படுத்திய அந்த நாள்!
இதழ்:1487 சுதந்திர தின விடுதலை!
2 சாமுவேல் 13: 14-17 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்......அப்பொழுது அவள் நீர் எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும் இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்..... தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளிக் கதவைப் பூட்டு என்றான். தாமார் தன்னுடைய அண்ணன் சுகவீனப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு பணிவிடை செய்ய… Continue reading இதழ்:1487 சுதந்திர தின விடுதலை!
இதழ்:1484 நீ ஒரு நல்ல தகப்பனாக உள்ளாயா?
2 சாமுவேல் 13: 6 - 7 அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப்பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுபி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான். தேவனுடைய கட்டளையை மீறி பல… Continue reading இதழ்:1484 நீ ஒரு நல்ல தகப்பனாக உள்ளாயா?
இதழ்:1481 பெருமையான இருதயமும், உயரமான மலையும் வெறுமையானது!
2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். அம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான். அந்த இச்சையை அடைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பன் யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று கூறியதையும் பார்த்தோம். இன்று யோனதாப் தந்திரமாய்… Continue reading இதழ்:1481 பெருமையான இருதயமும், உயரமான மலையும் வெறுமையானது!
இதழ்: 1480 கெட்ட நட்பு ஒரு நோய் போன்றது!
2 சாமுவேல் 13:3 அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி. நாம் இன்னும் ஒரு சில நாட்கள் படிக்கப்போகும் இந்த சம்பவம் தாமார் அவளுடைய சகோதரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம். இது வேதத்தை சற்று படித்த எல்லோருமே அறிந்த ஒரு சம்பவம் தான். இந்த சம்பவம் தாவீதின் பிள்ளைகள் அத்தனைபேரையும் இதில் சம்பந்தப்படுத்தியது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இதை ஆழமாக படிக்கும்போதுதான் இந்த… Continue reading இதழ்: 1480 கெட்ட நட்பு ஒரு நோய் போன்றது!
இதழ்:1479 அனுபவித்தால் மட்டுமே புரியும் அந்த வேதனை!
2 சாமுவேல் 13:1,2 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன், இசைக்கருவி வாசிக்கும் கலைஞன், ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் - அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய… Continue reading இதழ்:1479 அனுபவித்தால் மட்டுமே புரியும் அந்த வேதனை!
இதழ்:1478 சற்று ருசித்துப் பாருங்களேன்!
யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார். தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம். தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன். நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு பின்னால் இன்னொரு பெண்ணைத் தேடியது, ஒருவேளை அவனுக்கு திருப்தியான அன்பு யாரிடமும் கிடைக்கவில்லையோ… Continue reading இதழ்:1478 சற்று ருசித்துப் பாருங்களேன்!
இதழ்: 1477 இருளில் மின்னும் ஒளியாய் வந்த செய்தி!
2 சாமுவேல் 12: 24 - 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்! இந்த மாதமும் நம்மை அவர் காத்து, பராமரித்து, வழி நடத்துமாறு ஒரு நிமிடம் ஜெபிப்போம்! எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது,… Continue reading இதழ்: 1477 இருளில் மின்னும் ஒளியாய் வந்த செய்தி!