நியாதிபதிகள்: 14:15 " ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு..." இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், பிளாக்பெரியிங் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான். திம்னாத்தில்… Continue reading மலர் 3 இதழ் 235 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கு போல மனைவி அமையக் காரணம்??
Month: October 2012
மலர் 3 இதழ் 234 கண்களுக்குப் பிரியமானவை?
நியாதிபதிகள்: 14:3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம். தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள் தான் எனக்கு… Continue reading மலர் 3 இதழ் 234 கண்களுக்குப் பிரியமானவை?
சோதனையென்னும் என்னும் தேன்கூடு!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் கடையில் போய் மளிகை சாமான் வாங்குவோரில் ஒருவர் எந்த சமயத்தில் கடைக்கு போனால் அதிகம் செலவிடுகின்றனர் என்று கணக்கெடுத்திருந்தனர். அவர்கள் கணிப்புப்படி, ஒருவர் சாப்பிடுமுன்னர் பசியாயிருக்கும்போது கடைக்கு சென்றால் அதிகம் செலவிடுவதாகவும், சாப்பிட்ட பின்னர் சென்றால் குறைவாய் செலவிடுவதாகவும் சொல்லியிருந்தனர். நம்முடைய… Continue reading சோதனையென்னும் என்னும் தேன்கூடு!
பொருளாசை என்னும் புளித்தமாவு!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து……” லூக்கா: 12:15 “பின்பு இயேசு அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”. இன்று எங்களது பகுதியில் தேர்தல் விளம்பரங்கள் உற்சாகமாய் நடந்து கொண்டிருக்கின்றன! ஒலிப்பெருக்கியின் சத்தம் காதுகளைப் பிளந்து கொண்டிருக்கிறது. அதைக் கேட்கும் போது கர்த்தராகிய இயேசு… Continue reading பொருளாசை என்னும் புளித்தமாவு!
எங்கே உன் கூடாரம்?
ஆதி: 33:18“ யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும், சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான்.” கீழ்படிதலினால் வருகிற கஷ்டங்களை விட கீழ்ப்படியாமையினால் வரும் கஷ்டங்கள் மிகவும் அதிகம் என்று ஒருவர் கூறியிருக்கிறார். இது நமக்கும் தெரிந்த உண்மையே, ஆனாலும் நம்மில் பலருக்கு கீழ்ப்படிதல் என்றால் அறவே பிடிக்காது. பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு கீழ்ப்படிய பிடிக்காது, பெரியவர்களுக்கு அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து நடக்க பிடிக்காது. சிலருக்கு யாரும் புத்தி சொன்னால் … Continue reading எங்கே உன் கூடாரம்?
கலங்காதே! நீ கலங்கத் தேவையில்லை!
யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி; நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;” பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள கல்யாணி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் (Nurses Training School) பயிற்சி பெறும் பெண்களுக்கு இரண்டு வருடங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுது அவர்களுடைய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அயராத சேவைக்கு அர்ப்பணிக்கும் காட்சி என்றும் மனதில் தங்கிய ஒன்று. தன் வாழ்வை மருத்துவ சேவையில்… Continue reading கலங்காதே! நீ கலங்கத் தேவையில்லை!
பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!
யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி; நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;” நேற்று நான் வால்ப்பாறைக்கு பயணம் செய்தேன். மழைக்காலத்தில் காரில் பிரயாணம் பண்ணுவது நாங்கள் விரும்பாத ஒரு காரியம். பொள்ளாச்சி அருகில் சென்றபோது பயங்கர மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் மலைப்பகுதியை நெருங்க நெருங்க மலைகளிருந்து நீர் ஊற்றிக்கொண்டிருந்ததால், மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்துகொண்டிருப்பது தெரிந்தது. மலைகளில் கார் ஏறிய போது இருள் சூழ்ந்த மேகத்தோடு மழை கொட்டிக்கொண்டிருந்ததால் ’பனிப்படரும் பகுதி’ ’கற்கள் விழும்… Continue reading பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!
நான் சில நாட்கள் வெளியூர் செல்வதால் ஒருவாரம் எனக்கு பிடித்தமான சில தியானங்களை வெளியிடுகிறேன். பிரேமா சுந்தர் ராஜ்
மலர் 3 இதழ் 233 அடம் பிடிக்கும் குணம் உண்டா?
நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை'செய்யாதிருப்பாயாக' , அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே… Continue reading மலர் 3 இதழ் 233 அடம் பிடிக்கும் குணம் உண்டா?
மலர் 3 இதழ் 232 திசை திருப்பும் சிற்றின்பங்கள்!
நியாதிபதிகள்: 14: 1 " சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு," நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு பின்பாக துங்கபத்திரா ஆறு ஓடியது. மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. ஆற்றில் ஓடியவரை சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நீர், ஊருக்குள் புகுந்த போது வழியில் உள்ள எல்லா… Continue reading மலர் 3 இதழ் 232 திசை திருப்பும் சிற்றின்பங்கள்!
