Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 269 ஒரு தருணம் கொடு!

ரூத்: 2 : 15  அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ண வேண்டாம். பிறருக்கு கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன என்று வாசித்திருக்கிறேன். ஒன்று முணங்கிக்கொண்டே, ஐயோ வந்து நிற்கிறார்களே என்ன செய்வது என்று கொடுப்பது, இரண்டு கொடுக்க வேண்டியக் கடமை, இதிலிருந்து தப்பவே முடியாது என்று கொடுப்பது, மற்றொன்று மனமுவந்து , நன்றியறிதலோடு கொடுப்பது என்று. பல வருடங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில்… Continue reading மலர் 3 இதழ் 269 ஒரு தருணம் கொடு!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்!

ரூத்: 1: 22    "இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்". நாம் கடந்த வாரத்தில் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து அவள் விசுவாசத்தை அழித்ததால் அவள் பெத்லெகேமில் அவளை வரவேற்க வந்த உறவினரிடம் தன்னை நகோமி என்று அழைக்காமல் மாரா என்று அழைக்கும்படி கூறினாள் என்று பார்த்தோம். நகோமியின் வாழ்க்கையை நாம் படிக்கும்போது அவளுடைய… Continue reading மலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 267 போஷிக்க வல்லவர்!

ரூத்: 1: 22    "இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்". என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில்  ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன்.… Continue reading மலர் 3 இதழ் 267 போஷிக்க வல்லவர்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 266 புதிய துவக்கம்!

ரூத்: 1: 22    "இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்". சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது.… Continue reading மலர் 3 இதழ் 266 புதிய துவக்கம்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 265 கசப்பு என்ற நச்சு!

ரூத்: 1: 21   நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் ஸ்பிரிங் சீசனில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வண்ணமயமான… Continue reading மலர் 3 இதழ் 265 கசப்பு என்ற நச்சு!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 264 கசப்பு என்ற காடி!

ரூத்: 1 : 19, 20 " அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்." இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத்… Continue reading மலர் 3 இதழ் 264 கசப்பு என்ற காடி!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 263 மரணம் கூட பிரிக்க முடியாத அன்பு!

ரூத்: 1: 17   நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான்  நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர்… Continue reading மலர் 3 இதழ் 263 மரணம் கூட பிரிக்க முடியாத அன்பு!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 262 உன் கடவுள் எப்படிப்பட்டவர்?

ரூத்: 1: 16  "... உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" ஒருநாள் இண்டெர்னெட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன்.  அடிக்கடி மருத்துவங்களைப் பற்றிய கேள்வி பதில்களுக்கு பதில் கொடுத்து என்னுடைய மருத்துவ அறிவை வளர்க்க சற்று முயற்சி செய்வேன். ஆனால் அன்று நான் பங்கு பெற்றது கொஞ்சம் வித்தியாசமானது. கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் விளையாட்டு. சில கேள்விகளுக்கு அநேகருடைய  பதில் ஒரேமாதிரி இருந்தது. உதாரணமாக, 1.… Continue reading மலர் 3 இதழ் 262 உன் கடவுள் எப்படிப்பட்டவர்?

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 261 ஜாதி, சபை பாகுபாடு !

ரூத்: 1: 16    "நீர் போகும் இடத்திற்கு  நானும் வருவேன்;  நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்......ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ..... நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவள்... நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல! அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட… Continue reading மலர் 3 இதழ் 261 ஜாதி, சபை பாகுபாடு !

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 260 ஏற்றுக்கொள்ளவே முடியாததை ஏற்றுக்கொள்!

ரூத்: 1:22   இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; என் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு! எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும். இரண்டு அயல்நாட்டு… Continue reading மலர் 3 இதழ் 260 ஏற்றுக்கொள்ளவே முடியாததை ஏற்றுக்கொள்!