ரூத்: 1: 14 " ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு பசலைக் கொடி வளர்ந்து வருகிறது. அது தானாகவே அருகில் உள்ள ஒரு போகன்வில்லாவை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அந்த போகன்வில்லாவிடமிருந்து இந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது போல உள்ளது! இன்று நான் பசலைக் கொடியைப் பார்த்த போது ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டாள் என்ற இன்றைய வேதாகம வசனம்… Continue reading மலர் 3 இதழ் 259 நாம் பற்றிக்கொள்ளும் உறவு!
Month: January 2013
மலர் 3 இதழ் 258 இருளில் பிரகாசிக்கும் சிறிய விளக்கு!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமித் தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த… Continue reading மலர் 3 இதழ் 258 இருளில் பிரகாசிக்கும் சிறிய விளக்கு!
மலர் 3 இதழ் 257 ஒர்பாளின் முடிவு தவறானதா?
ரூத்: 1: 6 "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, ரூத்: 1: 7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " ரூத்: 1: 8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல,… Continue reading மலர் 3 இதழ் 257 ஒர்பாளின் முடிவு தவறானதா?
மலர் 3 இதழ் 256 மழைக்கு பின்னால் வரும் வானவில்!
ரூத்: 1 : 13 "... என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்." என்னுடன் ஊழியத்தில் பணி புரியும் சகோதரியின் கணவரைப் பற்றி போனவாரம் எழுதியிருந்தேன். அவளுடைய கணவனுக்கு மூளையில் இருந்த கட்டியை ஆப்பரேஷன் பண்ணி எடுத்தார்கள். பின்னர் வலிப்பு வந்ததால் தையல் விட்டுப்போய் கஷ்டப்பட்டார். ஆப்பரேஷன் பண்ணிய கட்டி சாதாரண ட்யூமர் இல்லை , மூளையில் வளரும் புற்றுநோய் என்ற ரிசல்ட் நேற்று… Continue reading மலர் 3 இதழ் 256 மழைக்கு பின்னால் வரும் வானவில்!
மலர் 3 இதழ் 255 இருதயம் நலம் பெற ஒரு வழி!
ரூத்: 1: 8 - 10 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து; உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள். என்னுடைய வாழ்வில் நான் இளம் வயதிலேயே ஒன்றுக்கு… Continue reading மலர் 3 இதழ் 255 இருதயம் நலம் பெற ஒரு வழி!
மலர் 3 இதழ் 254 நம் வாழ்க்கையே சிறந்த பிரசங்கம்!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " இன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன! "நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற சிறந்த பிரசங்கம் போன்றது! நம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்! நாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால்… Continue reading மலர் 3 இதழ் 254 நம் வாழ்க்கையே சிறந்த பிரசங்கம்!
மலர் 3 இதழ் 253 வில்வித்தைக்காரன் எய்த அம்பு போல!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading மலர் 3 இதழ் 253 வில்வித்தைக்காரன் எய்த அம்பு போல!
மலர் 3 இதழ் 252 மனம் சோர்ந்துவிடாதே! தைரியமாயிரு!
ரூத்: 1: 6 "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, புத்தாண்டில் இந்த மலரைத் தொடரும்படியானக் கிருபையையும், பெலத்தையும் கொடுத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். இம்மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக வழி நடத்திய தேவன் தொடர்ந்து இந்த வருடமும் என்னை உங்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார் என்று நம்புகிறேன். நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி,… Continue reading மலர் 3 இதழ் 252 மனம் சோர்ந்துவிடாதே! தைரியமாயிரு!
Wishing You All A Happy And Most Blessed New Year 2013!
The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog. Here's an excerpt: 600 people reached the top of Mt. Everest in 2012. This blog got about 2,100 views in 2012. If every person who reached the top of Mt. Everest viewed this blog, it would have taken 4 years to get… Continue reading Wishing You All A Happy And Most Blessed New Year 2013!
