1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள்.சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத் தங்களை… Continue reading மலர் 5 இதழ் 313 உன்னைத் தள்ளவில்லை! என்னைத்தான்!
Month: September 2014
மலர் 5 இதழ் 312 ஒரே அச்சில் வார்த்த மாவு போல!
1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.சமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும்… Continue reading மலர் 5 இதழ் 312 ஒரே அச்சில் வார்த்த மாவு போல!
மலர் 5 இதழ் 311 பணம் பேசிய காலம்!
1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான் அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.இந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில் இருந்த… Continue reading மலர் 5 இதழ் 311 பணம் பேசிய காலம்!
மலர் 5 இதழ் 310 வீட்டுக்குள் நுழையும் போது வரும் சுகமே தனி!
1 சாமுவேல் : 7: 15 - 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். நேற்று 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி… Continue reading மலர் 5 இதழ் 310 வீட்டுக்குள் நுழையும் போது வரும் சுகமே தனி!
மலர் 5 இதழ் 309 எபெனேசர்! இம்மட்டும் உதவி செய்தார்!
1 சாமுவேல் 7:12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். இருபது வருடங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்ததால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கோபாக்கினையை அனுபவித்துதான் ஆக வேண்டும், அவர்களுக்கு கர்த்தர் எப்படி தயை செய்வார்? கர்த்தர் ஒன்றும் அவர்களை சும்மா விடப் போவதில்லை என்றுதானே நாம் எண்ணுகிறோம்? அவர்கள் சாமுவேலிடம் ஜெபிக்கும் படி வேண்டியபோது கர்த்தருடைய… Continue reading மலர் 5 இதழ் 309 எபெனேசர்! இம்மட்டும் உதவி செய்தார்!
