1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து... ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள்… Continue reading இதழ்:1375 சிற்றின்பங்களை அள்ளித் தருபவன்!
Month: February 2022
இதழ்:1374 பொல்லாங்கைத் தேடி போகாதே!
1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்பொழுது, குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என்று பலவிதமானவர்கள் நம்முடைய நாட்டிலும் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. விக்கிரகாராதனையாலும், ஆவிகளாலும் நடத்தப்படும் இவர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம்… Continue reading இதழ்:1374 பொல்லாங்கைத் தேடி போகாதே!
இதழ்: 1373 கீழ்ப்படியாமை விளைவிக்கும் பயம்!
1 சாமுவேல் 28:3 - 5 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்..... பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது. தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன், நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன். பெலிஸ்தர்… Continue reading இதழ்: 1373 கீழ்ப்படியாமை விளைவிக்கும் பயம்!
இதழ்:1372 658 இழந்த ஆசீர்வாதங்களை மீட்டுக்கொள்!
1 சாமுவேல்: 30 : 8,18 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர். அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். போன வாரம் நான் ஒரு வெப்சைட்பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நம் வீட்டில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற நிலையில் இருக்கும் மேஜை, நாற்காலி போன்ற… Continue reading இதழ்:1372 658 இழந்த ஆசீர்வாதங்களை மீட்டுக்கொள்!
இதழ்:1371 பயப்படாதே! மனுஷன் உனக்கு என்ன செய்வான்?
1 சாமுவேல் 30:6 தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தாவீது தன்னுடைய அவிசுவாசத்தினாலும், கீழ்ப்படியாமையாலும் பொய் சொல்லி ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருந்த போது கொடிய சூழலில் முடிவடைந்தான் என்று நாம் பார்த்தோம். தாவீது யாரை உண்மையான நண்பர்கள் என்று நினைத்தானோ அவர்களே அவனைக் கல்லெறியத் துணிந்த நேரத்தில், தன் அன்பின் குடும்பமே சிறைப்படுத்தப் பட்டு காணாமற்போன வேளையில், அவன் எப்படி இருந்திருப்பான்? மனம் தளர்ந்து, சோர்ந்து, வேதனையில் துடித்துக் கொண்டிருந்திருப்பான் அல்லவா? ஆம்! சிக்லாகில்… Continue reading இதழ்:1371 பயப்படாதே! மனுஷன் உனக்கு என்ன செய்வான்?
இதழ்:1370 எந்நிலையில் வந்தாலும் உதவி உடனே கிடைக்கும்!
1 சாமுவேல் 30: 3, 6 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். தாவீதும் மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.… Continue reading இதழ்:1370 எந்நிலையில் வந்தாலும் உதவி உடனே கிடைக்கும்!
இதழ்:1369 பாவத்தின் கருவியே பொய்தான்!
1 சாமுவேல் 27: 8 - 12 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும், அமலேக்கியர் மேலும் படையெடுத்துப்போனார்கள்....... இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ....ஒரு புருஷனையாகிலும்,ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான். ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான். என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான். நான் என்றுமே தாவீதின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடமான வாழ்க்கை என்று… Continue reading இதழ்:1369 பாவத்தின் கருவியே பொய்தான்!
இதழ்:1368 கொடிய வனாந்திரத்தில் கர்த்தரே நம் அரண்!
1 சாமுவேல் 27:1 பின்பு தாவீது நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்.இனி சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டு பிடிக்கலாம் என்கின்ற நம்பிக்கையற்றுப் போகும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்துக்குப் போய், தப்பித்துக் கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான். நான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வால்பாறைக்கு அடிக்கடி வருவேன். அங்கு ஒரு இடத்தில் உள்ள மரங்கள் எப்பொழுதும் என் கண்களைக் கவரும். வானளாவிய அவைகள்… Continue reading இதழ்:1368 கொடிய வனாந்திரத்தில் கர்த்தரே நம் அரண்!
இதழ்:1367 வெற்றிகரமான திருமணம் என்ற முக்கோணம்!
1 சாமுவேல்: 25:42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய் அவனுக்கு மனைவியானாள். நான் இதற்கு முன்னால் இந்தப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம், ஒரு பணக்கார விதவையான அபிகாயில், தாவீதை மணந்து சந்தோஷமாக வாழ்ந்தாள் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அபிகாயிலின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் படிக்கும் போது தான் அது தவறான எண்ணம் என்று புரிந்தது. தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியபோது அவள்… Continue reading இதழ்:1367 வெற்றிகரமான திருமணம் என்ற முக்கோணம்!
இதழ்:1366 கண்ணில் நீர் காயும் முன் எடுக்கும் முடிவு?
1 சாமுவேல்: 25: 39 - 43 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது,......அபிகாயிலை விவாகம் பண்ணுகிறதற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான். பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து.... அவனுக்கு மனைவியானாள். யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான். அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள். அபிகாயிலின் கணவன் கர்த்தர் வாதித்ததினால் மரித்ததை நேற்றுப் பார்த்தோம். அதைக் கேள்விப்பட்ட தாவீது அபிகாயிலை மணக்க விரும்பி தூது அனுப்புகிறான்.. இந்த அதிகாரத்தைப் படிக்கும்போது என்ன காரணத்தினால் தாவீது… Continue reading இதழ்:1366 கண்ணில் நீர் காயும் முன் எடுக்கும் முடிவு?