2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து.. இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப் இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும் இவள்… Continue reading இதழ்:1499 புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்!
Month: August 2022
இதழ்:1498 திடன் கொள்ளுங்கள்! பயப்படாதிருங்கள்!
2 சாமுவேல் 17: 6-10 ஆகிலும் அப்சலோம் அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப்பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால் நீ சொல் என்றான். அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அக்கிதோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். ... உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் ... உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்... உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும் அவனோடிருக்கிறவர்கள் பலசாலிகள்… Continue reading இதழ்:1498 திடன் கொள்ளுங்கள்! பயப்படாதிருங்கள்!
இதழ்:1497 பெலனற்று சோர்ந்து போகும் வேளை!
2 சாமுவேல் 17: 1-4 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்து கொண்டு, எழுந்து இன்று இராத்திரி தாவீதைப் பின் தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில் நான் அவனிடத்தில் போய் அவனைத் திடுக்கிடப் பண்ணுவேன். அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால் நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாக திரும்பப்பண்ணுவேன். இப்படி செய்ய நீர் வகைதேடினால் எல்லாரும் திரும்பின பின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். இந்த வார்த்தை அப்சலோமின்… Continue reading இதழ்:1497 பெலனற்று சோர்ந்து போகும் வேளை!
இதழ்:1496 துஷ்டனுடைய துரோகத்தில் கண்ணி உண்டு! ஜாக்கிரதை!
2 சாமுவேல் 15: 4-6 பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு என்னைத் தேசத்திலே நியாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி முத்தஞ்செய்வான். இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். பரலோக தேவன் நமக்கு அருளியிருக்கும் நன்மையான வாழ்வு என்ன என்று நாம் தாவீதின் வாழ்க்கையிலிருந்து… Continue reading இதழ்:1496 துஷ்டனுடைய துரோகத்தில் கண்ணி உண்டு! ஜாக்கிரதை!
இதழ்:1495 குடும்ப ஜெபம் உங்களை ஒன்றுபடுத்தும்!
யோவான் 17:10,11 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்,அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். தாவீதின் குடும்பத்தைப் பற்றி நாம் படிக்கும்போது அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளிதான் இன்று என் மனதுக்கு வந்தது. தாவீதுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இருந்த இடைவெளி, அவன் பிள்ளைகளுக்குள் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளி இவற்றைப் பார்க்கும்போது… Continue reading இதழ்:1495 குடும்ப ஜெபம் உங்களை ஒன்றுபடுத்தும்!
இதழ்:1494 குற்ற உணர்வால் தலை குனிய வேண்டாம்!
மீகா 7: 18,19 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். நான் என்றாவது பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் நினைக்கும்போது, நான் வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா? என்று சற்று… Continue reading இதழ்:1494 குற்ற உணர்வால் தலை குனிய வேண்டாம்!
இதழ்:1493 எங்கே கிடைக்கும் அந்த சந்தோஷமான வாழ்வு?
சங்: 34:11,12 பிள்ளைகளே வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனிதன் யார்? கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆமைகளில் கலபகோஸ் என்ற ஒருவகையான ஆமை 100 - 170 வருடங்கள் வரை வாழும் என்று படித்தேன். நான் ஒருவேளை 150 வருடங்கள் வாழ முடிந்தால் எப்படியிருக்கும்?என நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் அத்தனை வருஷம் வாழ்ந்தால் நான் என்ன செய்வேன் என்ற எண்ணமும் வந்தது!… Continue reading இதழ்:1493 எங்கே கிடைக்கும் அந்த சந்தோஷமான வாழ்வு?
இதழ்:1492 மண் வயிறை நிரப்புவது போன்றது பழிவாங்குதல்!
2 சாமுவேல் 13: 23, 28, 29 இரண்டு வருஷம் சென்றபின்பு அப்சலோம் ...ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்......அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள். அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன். உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்று போடுங்கள். நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்...... அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள். அப்சலோம் நீண்ட நாட்கள் காத்திருந்தான். அவன் உள்ளத்தில் கோபம் உலையாகக்… Continue reading இதழ்:1492 மண் வயிறை நிரப்புவது போன்றது பழிவாங்குதல்!
இதழ்: 1491 வஞ்சம் என்னும் நஞ்சு மறைக்கப்பட்ட வாழ்க்கை!
2 சாமுவேல் 13: 21,22 தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட ஆரம்பித்தனர்! இவர்கள் என்ன செய்கிறார்கள்! ஒருவரை மற்றொருவர் பேசவிடாமல் தடுப்பதுதான் இவர்கள்… Continue reading இதழ்: 1491 வஞ்சம் என்னும் நஞ்சு மறைக்கப்பட்ட வாழ்க்கை!
இதழ்:1490 வாழ்க்கையே ஒரு ஏற்பாடு என்ற புத்தகம்தான்!
2 சாமுவேல் 14:27 அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர் கொண்ட குமாரத்தியும் பிறந்திருந்தார்கள். இவள் ரூபவதியான் பெண்ணாயிருந்தாள். கடந்த சில நாட்கள் நாம் அம்னோன் தாமார் என்ற தாவீதின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தாமாரைப்போல வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் நம்மில் உண்டு! அவர்களுக்கு தாமாரின் வாழ்க்கை என்ன அர்த்தத்தைக் கொடுக்கும் என்று சற்று ஆழமாகப் படிக்கும்போதுதான் என்னுடைய ஆத்துமாவுக்கு செழிப்பூட்டிய சில உண்மைகளைப் பார்த்தேன். தாமாரைப்பற்றி அதிகம் படிக்க எனக்கு ஆசை வந்ததின் காரணம்… Continue reading இதழ்:1490 வாழ்க்கையே ஒரு ஏற்பாடு என்ற புத்தகம்தான்!