யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு… Continue reading இதழ்:1586 தேவனே நம் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர்!
Month: December 2022
இதழ்: 1585 தேவனே நம் பயங்களை நீக்குபவர்!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 1585 தேவனே நம் பயங்களை நீக்குபவர்!
இதழ்:1584 தேவனே நம் எதிரியை முறியடிக்க செய்பவர்!
1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய வேத வசனத்தைப் பாருங்கள்! கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று நமக்கு தெளிவாக காட்டுகிறது! இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம்.கோலியாத் தன்னுடைய பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் நின்று தாவீதை எதிர்கொண்ட இடம்… Continue reading இதழ்:1584 தேவனே நம் எதிரியை முறியடிக்க செய்பவர்!
இதழ்:1583 தேவனே நமக்கு வழிகாட்டியானவர்!
நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நாம் இந்த வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம். இன்று நாம் தியானிக்கும் இந்த வசனத்தை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும், தெபோராளையும் எழுந்து போ என்று மாத்திரம் கட்டளை கொடுக்கவில்லை, அதோடு கூட அவர்களுக்கு முன்னால் செல்லும் வழிகாட்டியையும் கவனிக்கும்படி கூறுகிறார். வழிகாட்டி என்ற வார்த்தையை நான்… Continue reading இதழ்:1583 தேவனே நமக்கு வழிகாட்டியானவர்!
இதழ்:1582 தேவனே நமக்கு நித்திய அடைக்கலமானவர்!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி உபதேசத்தை இந்தப் பகுதியில் வாசிக்கிறோம். இன்றைக்கு நாம்… Continue reading இதழ்:1582 தேவனே நமக்கு நித்திய அடைக்கலமானவர்!
இதழ்:1581 கிறிஸ்துமஸ் என்பதின் அர்த்தமே அன்பு என்பதுதான்!
1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு மானிடனாய் வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய்… Continue reading இதழ்:1581 கிறிஸ்துமஸ் என்பதின் அர்த்தமே அன்பு என்பதுதான்!
இதழ்:1580 தேடினால் மட்டுமே கண்டு கொள்வோம்!
எண்ணாகமம் 24: 17 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.... இந்த கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்! இன்று மத்தேயு இரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் பற்றிப் படிக்கலாம்! இயேசு கிறிஸ்துவானவர் பெத்லேகேமில் பிறந்த பின்னர், இந்த சாஸ்திரிகள் ஒரு ராஜாவைத் தேடி யூதேயாவுக்கு வந்து ஏரோது ராஜாவிடம் செல்கின்றனர். யார் இந்த சாஸ்திரிகள்? இவர்கள் வான சாஸ்திரங்களைப்… Continue reading இதழ்:1580 தேடினால் மட்டுமே கண்டு கொள்வோம்!
இதழ்:1579 அந்த மேய்ப்பர்களைப் போல நாமும் கொண்டாடலாமே!
லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துமஸ் வாரம் இது! உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது இவை எல்லாவற்றையுமே நாம் இந்த மாதம்… Continue reading இதழ்:1579 அந்த மேய்ப்பர்களைப் போல நாமும் கொண்டாடலாமே!
இதழ்:1578 ஒரு விசேஷித்த அறிவிப்பு!
மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு… Continue reading இதழ்:1578 ஒரு விசேஷித்த அறிவிப்பு!
இதழ்:1577 எத்தனை மா தயவு! எத்தனை ஆச்சரியம்!
ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும்,… Continue reading இதழ்:1577 எத்தனை மா தயவு! எத்தனை ஆச்சரியம்!