யோவான் 17:10,11 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்,அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். தாவீதின் குடும்பத்தைப் பற்றி நாம் படிக்கும்போது அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளிதான் இன்று என் மனதுக்கு வந்தது. தாவீதுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இருந்த இடைவெளி, அவன் பிள்ளைகளுக்குள் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளி இவற்றைப் பார்க்கும்போது… Continue reading இதழ்:1800 ஒன்றாயிருத்தலினால் வரும் நன்மை!
Month: June 2023
இதழ்:1799 இன்று என்பது மட்டுமே நம்மிடம் உள்ளது! வீணாக்காதே!
மீகா 7: 18,19 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார். நான் என்றாவது கடந்த காலத்தில் பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் மாற்றி வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா?… Continue reading இதழ்:1799 இன்று என்பது மட்டுமே நம்மிடம் உள்ளது! வீணாக்காதே!
இதழ்:1798 தேவ பிரசன்னம் நிரம்பிய வாழ்க்கை!
சங்: 34:11,12 பிள்ளைகளே வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனிதன் யார்? கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆமைகளில் கலபகோஸ் என்ற ஒருவகையான ஆமை 100 - 170 வருடங்கள் வரை வாழும் என்று படித்தேன். நான் ஒருவேளை 150 வருடங்கள் வாழ முடிந்தால் எப்படியிருக்கும்?என நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் அத்தனை வருஷம் வாழ்ந்தால் நான் என்ன செய்வேன் என்ற எண்ணமும் வந்தது!… Continue reading இதழ்:1798 தேவ பிரசன்னம் நிரம்பிய வாழ்க்கை!
இதழ்:1797 இந்த ஆயுதம் நமக்கு வேண்டாமே!
2 சாமுவேல் 13: 23, 28, 29 இரண்டு வருஷம் சென்றபின்பு அப்சலோம் ...ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்......அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள். அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன். உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்று போடுங்கள். நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்...... அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள். அப்சலோம் நீண்ட நாட்கள் காத்திருந்தான். அவன் உள்ளத்தில் கோபம் உலையாகக்… Continue reading இதழ்:1797 இந்த ஆயுதம் நமக்கு வேண்டாமே!
இதழ்:1796 நாவினால் அல்ல கிரியையினால் அன்பு கூறுவோம்!
2 சாமுவேல் 13: 21,22 தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். எலியா தீர்க்கதரிசியைப் பற்றித் தொடரும் முன் ஒரு சிறிய இடைவேளை தேவைப்படுகிறது. ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட… Continue reading இதழ்:1796 நாவினால் அல்ல கிரியையினால் அன்பு கூறுவோம்!
இதழ்:1795 நீ கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்!
1 இராஜாக்கள் 19:10 நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். எலியா கர்மேல் பர்வதத்தில் தேவனுக்காக தனித்து நின்றான்! பாகாலின் தீர்க்கதரிசிகளை தனிமையாக எதிர்கொண்டான்! ஆனால் இப்பொழுதோ அவன் ஓரேப் பர்வதத்தில் ஒரு குகையில் தனிமையாக வாடி நின்றான். என்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை! என்னுடைய வலி யாருக்கும் புரியாது! இந்த எண்ணங்கள் நாம் கைவிடப்பட்ட நிலையில் நிற்கும் போதுதான் நமக்கு வரும். விசேஷமாக நாம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்காக நம்முடைய… Continue reading இதழ்:1795 நீ கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்!
இதழ்:1794 பார சுமை அதிகரிக்கும்போது அன்பின் கரம் உன்னை அரவணைக்கும்!
1 இராஜாக்கள் 19: 9,10 இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். எலியா மிகுந்த களைப்போடு பெயர்செபாவை நோக்கி ஓடியது நமக்குத் தெரியும்! அங்கே கர்த்தர் தன்… Continue reading இதழ்:1794 பார சுமை அதிகரிக்கும்போது அன்பின் கரம் உன்னை அரவணைக்கும்!
இதழ்:1793 இருண்ட கெபியிலும் உன்னோடிருக்கிறவர்!
1 இராஜாக்கள் 19:9 அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். எலியாவுக்கு ஒரு நீண்ட பிரயாணம் இது! நாற்பது நாட்கள் இராப்பகலாய் நடந்தான்! ஓரேப் பர்வதத்தில் ஏறிய அவனுக்கு ஒரு குகை கண்களில் பட்டது! அங்கே தங்க அவன் முடிவு செய்தான்! எபிரேய மொழியில் இந்த வார்த்தை தங்கினான் என்பதின் அர்த்தத்தை இன்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன், ஏனெனில்… Continue reading இதழ்:1793 இருண்ட கெபியிலும் உன்னோடிருக்கிறவர்!
இதழ்:1792 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர்!
1 இராஜாக்கள் 19:8 அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான். சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். இந்த சஙீதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! பூமியே அதிர்ந்தாலும், தண்ணீர் புரண்டு வந்தாலும், நம்முடைய தேவன் நமக்கு அளிக்கும் பெலன் அற்புதமானது! புயலடிக்கும் வாழ்விலும் எதிர்த்து போராட அவர் பெலன் தருவார் என்ற… Continue reading இதழ்:1792 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர்!
இதழ்:1791 என்னிடம் வா! இளைப்பாறுதல் தருவேன்!
1 இராஜாக்கள் 19:5-7 ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். தசை நாரெல்லாம் வலிக்கிறது என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். சில… Continue reading இதழ்:1791 என்னிடம் வா! இளைப்பாறுதல் தருவேன்!
