1 இராஜாக்கள் 21: 8 – 15 நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்துபிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள்.
நம்முடைய செயல்கள் நம்மைப் பற்றி பிறருக்கு வெளிப்படுத்தும் அல்லவா? யேசபேல் களத்தில் இறங்கியவுடன் ஆகாபின் மனதை மாற்றினாள் என்று பார்த்தோம். ஆகாபின் பிடிவாத குணத்தை உபயோகப்படுத்தி , தன்னுடைய இனிமையான வார்த்தைகளால் அவனை தன் வசப்படுத்துகிறாள். அவன் அந்த நாட்டை ஆளும் ராஜா ஆதலால் அவன் நினைத்ததை அடைந்துவிடலாம் என்று கூறிய அவள் உடனே அதற்கான திட்டத்தைத் தீட்டுகிறாள்.
ஆகாப் என்ன செய்தான் பாருங்கள்! நாய் வாலை ஆட்டிக்கொண்டு தன் எஜமான் பின்னால் செல்வது போல யேசபேலை பின் தொடருகிறான்.
என்னுடைய மதிப்பிற்குரிய பாஸ்டர் சார்லஸ் சுவிண்டோல் அவர்கள் என்ன கூறுகிறார் பாருங்கள்!
“கணவர் பயங்கர மன அழுத்தத்தில் உள்ளார்…. அதனால் யேசபேல் அதை சாதகமாகப் பயன்படுத்தி மேற்கொள்கிறாள் …. அவள் தன்னை திருப்திபடுத்த எந்த எல்லைக்கும் போகக்கூடிய தேவ பயமில்லாத கொடூரவாதி! … அவள் ஆகாபிடம் கூறியது எப்படி உள்ளது என்றால் உனக்கு இதுதானே வேண்டும், நான் பார்த்துக் கொள்கிறேன், நீ குறுக்கே வராதே என்பது போல இருந்தது. ராஜாவின் பெயரில் கடிதம் குடிமக்களுக்கு அனுப்புவது அவளுடைய வேலை அல்ல, அதை செய்ததின் மூலம் அவள் அந்த ஏழை குடிமகனை கொலை செய்ய வரைபடம் வரைந்து விட்டாள். இன்றைய பாணியில் சொல்லப்போனால், அவள் அவனை ஏதோ சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டதுபோல சிக்க வைத்து விட்டாள்.”
நாம் நேற்று பார்த்தபோது அவள் ஆகாபின் மனதை முதலில் மாற்றி அவள் சொல்வதற்கெல்லாம் நாய்குட்டி போல தலையாட்ட வைக்கிறாள். இப்பொழுது அவள் செய்தது எதுவும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல என்று நம்ப வைக்கிறாள்.
அதை செய்து முடிக்க அவளுக்கு தேவைப்பட்டது இரண்டு கூலியாட்கள் தான். நாபோத் தேவனுக்கு விரோதமாகவும், ராஜாவுக்கு விரோதமாகவும் தூஷணம் பேசினான் என்று அனைவரையும் நம்ப வைக்க வந்த பேலியாட்கள். அங்கு கூடியிருந்த மக்களுக்கு நாபோத்தை நன்றாகவே தெரிந்திருந்தாலும் வேறு வழியில்லாமல் யேசபேலுக்கு பயந்து , ஒரு பாவமும் அறியாத அவனைக் கல்லெறிகிறார்கள். இவையனைத்தும் நடந்தேறும்போது, அந்த ஆகாப், தொடைநடுங்கி ஆகாப் அரமனைக்குள்ளே ஒரு மூலையில் பதுங்கிக்கொண்டிருந்தான்.
யேசபேல் எலியாவின் வாழ்க்கையை முடித்துவிட வகை தேடினபோதும், இஸ்ரவேலிலே கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொலை பண்ணினபோதும், யேசபேலின் அக்கிரம செயலுக்கு எதிர் பேசாத இஸ்ரவேல் மக்கள் இன்றைக்கு அவர்களில் ஒருத்தனான, ஒருவருக்கும் துரோகம் செய்யாத, அப்பாவி நாபோத்தை மன பதைபதைக்க கல்லெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இன்று நாம் சாத்தானுக்கு எதிர்த்து நிற்க தவறிவிட்டால் நாளை அவன் உங்களை மேற்கொண்டு விடுவான். யேசபேல் உன்னுடைய மனதை தாக்கும்போதே அவளைவிட்டு ….ஓடு!இன்று நாம் யேசபேலின் இனிமையான வார்த்தைகளுக்கு மயங்கி நம்முடைய மனதை பறிகொடுத்தால் அவள் நம்மை கொடிய பாதாளத்துக்கு இழுத்துச் செல்ல முடியும்!
ஆனால் நாம் சாத்தானுக்கு எதிர்த்து நிற்கும்போது வேதம் கூறுகிறது,நம்முடைய தேவனாகியக் கர்த்தர் கர்த்தர் நம்மோடு துணைஇருந்து நம்மை வெற்றிக்கு வழி நடத்துவார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
