2 இராஜாக்கள் 2:12 – 15அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகியக் கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தன்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.
எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
எலியா தன்னுடைய தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். எலிசா அதைக்கண்டு என் தகப்பனே, என் தகப்பனே என்று கதறி அழுதான் என்று இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது. எலிசா அவனை மறுபடியும் காணவில்லை.
வேதாகம வல்லுநர் மேத்யூ ஹென்றி அவர்கள் இதைக்குறித்து எழுதும்போது, ‘ மிகப்பெரிய தீர்க்கதரிசியான எலியாவை இழந்த துக்கத்தை எலிசா வெளிப்படுத்துகிறான். அவன் தனுடைய சொந்த வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு புலம்புகிறான். எலியா வெற்றிகரமாக பரலோகத்துக்கு சென்றிருந்தாலும் அவன் விட்டு சென்றவர்களுக்கு அது ஒரு பெரிய இழப்புதான். எலியாவின் பரலோகப் பிரயாணம் எலிசாவின் தீர்க்கதரிசன பயணத்துக்கு வழியமைத்தாலும், அவன் எலியாவை நேசித்ததால், எலியா இந்த பூமியில் நீண்ட நாட்கள் இருந்திருந்தாலும் அவனுக்கு ஊழியம் செய்ய எலிசா ஆயத்தப்பட்டிருந்தான்’ என்கிறார்.
மந்தைல் துக்க பாரத்தோடு எலிசா யோர்தான் அண்டையில் செல்கிறான். எலிசா அவனோடு இருந்த போது அந்தத் தடையை இலகுவாகக் கடந்து விட்டான். இப்பொழுது அதே யோர்தானை நோக்கி நோக்கி நடந்தபோது அவன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ புரியவில்லை.
எலியாவின் சால்வை அவன் எடுத்துக் கொள்ளப்பட்டபோது பறந்து வந்து எலிசாவின் மேல் விழுந்தது. எலியாவைப் போன்ற மலைவாழ் மனிதரின் சால்வை விலை உயர்ந்த பொருள் இல்லை என்று நமக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன்பு எலிசா தன் தகப்பனி ஏர்களை ஓட்டிக்கொண்டிருந்தபோது, இதே சால்வையைத் தான் எலியா அவன் மேல் போட்டு அவனை தன்னுடன் வரும்படி அழைத்தான். இப்பொழுத் இந்த சால்வை அவன் மேல் விழுந்த போது அது எலிசாவின் பரமஅழைப்பை உறுதிப்படுத்தியது. அது எலியாவின் பரிசு மட்டும் அல்ல பரலோகம் அவனுக்குக் கொடுத்த பரிசு! எலிசாவுக்கு வெள்ளியோ, பொன்னோ பரிசாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது அந்த சால்வைக்கு நிகராகாது. அது பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய சொரூபம் அல்ல, அவன் மேல் அணியப்பட வேண்டிய பரிசுத்த ஆவியானவரின் அடையாளம். எலியாவுக்கு அருளப்பட்ட ஆவியானவரின் அருள் இப்பொழுது எலிசாவை வந்து அடைந்திருந்தது.
எலிசா யோர்தானின் கரையை வந்தடைந்துவிட்டான். அவன் தன்னிடம் உள்ள எலியாவின் சால்வையை எடுத்து, எலியாவின் தேவன் எங்கே என்று தண்ணீரில் அடிக்க யோர்தான் இரண்டாய்ப் பிளந்து அவனுக்கு வழி விட்டது. எலியாவின் தேவனுடைய ஆவியானவர் அங்கே அவனுடன் இருக்கிறார் என்ற நிச்சயத்துடன் அவன் கரையைக் கடந்தான்.
எலிசாவின் ஊழியம் தொடர்ந்தபோது நிச்சயமாக அவனை எலியாவோடு சம்பந்தப்படுத்தி பேசியவர்கள் அநேகர் இருந்திருப்பார்கள். ஆனால் ஒரு வேதாகம வல்லுநர் குறிப்பிட்ட மாதிரி, எலியா கடந்து போனாலும், எலியாவின் தேவன் கடந்து போகவில்லை. களைத்துப்போன தன்னுடைய சேவகனை அவர் தன்னிடமாய் சேர்த்துக் கொண்டாலும், அவனுடைய இடத்தை இன்னொருவருக்குக் கொடுத்து , அபிஷேகம் பண்ணி, தன்னுடைய பணியைத் தொடர அவர் கிருபையளிக்கிறார். அவர் பணி எந்தக் காரணத்தைக் கொண்டும் தடை படுவதில்லை,
தேவன் கடந்த காலத்தில் தம்முடைய பிள்ளைகள் மேல் ஊற்றின அதே ஆவியின் வரத்தை இன்று நீங்களும் நாடும்படி நான் உங்களை இன்று காலையில் உற்சாகப்படுத்துகிறேன். அவர் இன்றும் நம்மை நிரப்ப ஆயத்தமுள்ளவராக இருக்கிறார். நாம் நம்முடைய வாழ்வை பரலோக சேவைக்காக அர்ப்பணிக்கும்போது எலியாவின் தேவன் நம்மை தம்முடைய ஆவியானவரால் நிரப்பி சேவை செய்யும் கிருபையை கொடுப்பார். எலியாவின் தேவன் நம்மோடிருக்கிறார்!
உங்கள் ச்கோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
