யோசு:2:11 “……உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்.” சில வருடங்களுக்கு முன்னர்,நான் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த போது உலக பொருளாதார நிலைமையால் எங்கள் கம்பெனியின் ஏற்றுமதி மிகவும் குறைவுபட்டது. அநேக தொழிலாளர்கள் இருந்ததால் வேலையை நிறுத்தமுடியாமல் தொடர்ந்துவந்தோம். நாங்கள் தயாரித்த ஆடைகள் குவிய ஆரம்பித்தது. ஒரு வருடம் எப்படியோ சமாளித்து விட்டேன், அடுத்த வருடம் என்னால் கம்பெனியில் வேலை செய்தவர்களின் ஊதியம், பராமரிப்பு இவற்றை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது.… Continue reading இதழ்:1865 விசுவாசம் என்பது காணப்படாதவைகளின் நிச்சயம்!
Month: September 2023
இதழ்:1864 நாம் காட்டும் இரக்கம் மா இரக்கமுள்ள தேவனை கனம் பண்ணும்!
யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.” சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால்… Continue reading இதழ்:1864 நாம் காட்டும் இரக்கம் மா இரக்கமுள்ள தேவனை கனம் பண்ணும்!
இதழ்:1863 ஏன் இந்தப் பெண்ணைத் தெரிந்து கொண்டார்?
யோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்” யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம். ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது. இந்த… Continue reading இதழ்:1863 ஏன் இந்தப் பெண்ணைத் தெரிந்து கொண்டார்?
இதழ்:1862 அழையாத விருந்தாளியாய் வந்தடையும் பிரச்சனைகள்!
யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான். நாம் ராகாபைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் வேவுக்காரர் இருவர் வேசியான அவளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள் என்று நேற்று பார்த்தோம். சில நேரங்களில் பிரச்சனைகள் நாம் அழைக்காமலே நம் வாசலைத் தட்டுகின்றன என்பது எவ்வளவு உண்மை! ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் வீட்டுக்கு அவள்… Continue reading இதழ்:1862 அழையாத விருந்தாளியாய் வந்தடையும் பிரச்சனைகள்!
இதழ்:1861 சாக்குபோக்கு சொல்லாதே!
யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம்… Continue reading இதழ்:1861 சாக்குபோக்கு சொல்லாதே!
இதழ்:1860 மோசேக்கு பின்னர் வந்த தலைவன்!
யோசுவா: 1: 9 நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..” மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம். நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தை தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை… Continue reading இதழ்:1860 மோசேக்கு பின்னர் வந்த தலைவன்!
இதழ்:1859 நித்திய புயங்களில் அடைக்கலம் பெறு!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.… Continue reading இதழ்:1859 நித்திய புயங்களில் அடைக்கலம் பெறு!
இதழ்:1858 கர்த்தருடைய வார்த்தைகளால் போதிக்கப்படுதல்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.” நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும்… Continue reading இதழ்:1858 கர்த்தருடைய வார்த்தைகளால் போதிக்கப்படுதல்!
இதழ்:1857 நம்முடைய வீட்டின் முதல் தூண்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading இதழ்:1857 நம்முடைய வீட்டின் முதல் தூண்!
இதழ்:1856 நான் அறிந்த தேவன் ஒரு கன்மலை!
உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் 2006ல் முதன்முறையாக இஸ்ரவேல் தேசத்துக்கு சென்றபோது, கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி… Continue reading இதழ்:1856 நான் அறிந்த தேவன் ஒரு கன்மலை!
