கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1925 A VERY BLESSED CHRISTMAS EVERYONE!

1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு மானிடனாய் வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை வரை சென்றது! அல்லேலுயா! இந்த அன்புக்கு நான் எம்மாத்திரம்?  கிறிஸ்துமஸ் என்பதே அன்புதான்! தேவன் தம்முடைய குமாரனை நமக்காக அனுப்பிய மகா பெரிய அன்பு! தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து பரலோகத்தை துறந்து இந்த பூமிக்கு மானிடனாக வந்த மாதயவு! கோரி டென் பூம் அம்மையார் கூறியது போல, கிறிஸ்மஸ் என்பதற்கு யார் அர்த்தத்தைக் கூட்ட முடியும்? இதன் ஒரே நோக்கம் தேவன் நம் மேல் வைத்த அன்புதான்! இதன் ஒரே பரிசு அவர் நமக்களித்த அவருடைய ஒரே பேறான குமாரன் தான்! இதன் ஒரே விளைவு நாம் பிழைத்திருப்பது தான்! இதைப் பெற ஒரே நிபந்தனை அவரை விசுவாசிப்பதுதான்! இந்த விசுவாசத்தின் ஒரேபரிசு நித்திய ஜீவன் தான்! இந்த தேவன் நமக்களித்த இந்த அன்பின் பரிசை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுகொள்வீர்களா? சகலவித சந்தோஷமும் மகிழ்ச்சியும் அன்பும் சமாதானமும் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் உங்கள் குடும்பங்களில் நிலைக்கட்டும்! WISHING YOU ALL A VERY HAPPY AND BLESSED CHRISTMAS! MAY THE JOY OF CHRISTMAS FILL YOUR HEARTS AND HOMES!    உங்கள் சகோதரி பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment