1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். இன்று காலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது, ஒரு நல்ல குடும்பத்துக்கான அஸ்திபாரம் போட நாம் எவ்வளவு கடினமாக பாடுபட வேண்டியிருந்தது என்று சிந்தித்தேன். மிகவும் சிறிய சம்பளத்துடம் ஊழியம் செய்த நாட்களில் கூட என்றுமே மற்றவரைப் பார்த்துப் பொறாமைப் படாமல், எங்களிடம் உள்ளதை வைத்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, குடும்பத்தை ஒரு… Continue reading இதழ்:2005 ஒருவரின் இருதயத்தைக் குத்தி புண்படுத்தும் வார்த்தைகள்!
Month: April 2024
இதழ்:2004 ஒரு குடும்பத்தையே ஆட்டம் கொள்ள வைத்த பிரச்சனை!
1 சாமுவேல் 1: 4, 5 ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.” சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை என்னுடைய கார் சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்சனையா என்று பார்க்க சொல்லியனுப்பினேன். காட்டிலும் மேட்டிலும் அசையாமல் ஏறும்படியாக அமைக்கப்பட்ட கார் அது. அப்படிப்பட்ட கார் கொஞ்ச காலமாக சிறிய பள்ளத்தில்… Continue reading இதழ்:2004 ஒரு குடும்பத்தையே ஆட்டம் கொள்ள வைத்த பிரச்சனை!
இதழ்:2003 வெறுமையான பாத்திரம் நிரம்பும்!
1 சாமுவேல் 1: 2 பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. என்னுடைய வாழ்க்கையில் என்றாவது நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்கு இதை வாசித்தவுடன் வந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா? யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் அல்லது உதவாதவள் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.! ஒருவேளை உங்கள் கணவர் உங்களைக் கைவிட்டதாலோ, அல்லது சரீரப்பிரகாரமாக கொடுமை செய்ததாலோ நான் உபயோகப்படுத்தப்… Continue reading இதழ்:2003 வெறுமையான பாத்திரம் நிரம்பும்!
இதழ்:2002 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள். தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு. நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம். பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணீரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும். இங்கு தான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில்… Continue reading இதழ்:2002 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!
இதழ்:2001 நம் வாழ்க்கையை நிலைகுலைய வைக்கும் இன்னொரு பெண்!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால், என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியவே முடியாது. ஆனால் இன்று பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading இதழ்:2001 நம் வாழ்க்கையை நிலைகுலைய வைக்கும் இன்னொரு பெண்!
இதழ்:2000 கர்த்தருக்கு பிரியமில்லாத உறவுகள் வேண்டாமே!
1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;” அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று 2000 இதழ்களை முடித்திருக்கும், மகிமையுள்ள கிறிஸ்து ராஜாவின் மலருக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். http://www.rajavinmalargal.com என்ற இணையதளத்திற்கு ஒவ்வொரு நாட்களும் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து… Continue reading இதழ்:2000 கர்த்தருக்கு பிரியமில்லாத உறவுகள் வேண்டாமே!
இதழ்:1999 இந்த இராத்திரியிலே ஒருவேளை இடறல் வரலாம்!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாம் ரூத்தின் புத்தகத்தை முடித்து விட்டோம்! அடுத்த புத்தகத்தை நாம் ஆரம்பிக்குமுன் ஒரு சின்ன பிரேக்! ஈஸ்டரே முடிந்து விட்டது, இப்பொழுது இதை எழுதுகிறீர்களே என்று நீங்கள் கேட்கலாம், ஒரு சிறிய உந்துதலால் இதை இன்று எழுத முடிவு செய்தேன். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால்… Continue reading இதழ்:1999 இந்த இராத்திரியிலே ஒருவேளை இடறல் வரலாம்!
இதழ்:1998 உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இதை செய்யுங்கள்!
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது. முதல் முறையாக வானவில்லைப் பார்த்த… Continue reading இதழ்:1998 உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இதை செய்யுங்கள்!
இதழ்:1997 வாழ்க்கையில் பொறுத்திருக்கும் ஞானம்!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்:1997 வாழ்க்கையில் பொறுத்திருக்கும் ஞானம்!
இதழ்:1996 செவி கொடுப்பதே அன்பின் அடையாளம்!
ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.” நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்ட ” நமக்கு கர்த்தர் ஒரு வாயும், இரண்டு செவிகளும் கொடுத்திருப்பது நாம் குறைவாய் பேசவும், நிறைய கேட்கவும் தான்” என்ற பேருண்மை என் மனதில் என்றும் தங்கி விட்டது. என்னுடைய வாழ்நாளில் இந்த உண்மை என்னை பல இக்கட்டான சம்பவங்களில் காப்பாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடன் வேலை செய்த பெண்களின்… Continue reading இதழ்:1996 செவி கொடுப்பதே அன்பின் அடையாளம்!
