1 சாமுவேல் 12:24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். சாமுவேல் இஸ்ரவேல் மக்களோடு உரையாடும்போது அவர்கள் தேவனாகிய கர்த்தரை முழுஇருதயத்தோடும்கூட சேவிக்கும்படியாக ஊக்கப்படுத்துவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். ஆனால் சில நேரங்களில் மாம்சமான நாம் உன்னதங்களில் வாசம் செய்பவரை சேவிப்பது கடினமாகவே தோன்றுகின்றது அல்லவா! பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா? இது என்றுமே புரியாத பரம இரகசியம்! ஆதலால் ஒருசில நாட்கள் நம்முடைய பரம தகப்பனைப் பற்றிப்… Continue reading இதழ்:2038 உம்மைப் பற்றி இன்னும் அறிய வேண்டுமே!
Month: May 2024
இதழ்:2037 கர்த்தர் நம்மை மன்னிக்காவிடில்?
1 சாமுவேல் 12:20,22 அப்பொழுது சாமுவேல் ஜங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள். நீங்கள் இந்த பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள். ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக் கொள்ள பிரியமானபடியால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார். அமெரிக்க தேசத்தில் ஒலி ஒளி அரங்கத்தில் ஒருமுறை கிறிஸ்துவின் பிறப்பை சித்தரித்த நாடகத்தையும், மறுமுறை மோசேயின் சரித்திரத்தையும் காண கர்த்தர் உதவி செய்தார். அந்த நாடகங்களின் சிறப்பு அம்சமே அதன்… Continue reading இதழ்:2037 கர்த்தர் நம்மை மன்னிக்காவிடில்?
இதழ்:2036 உன் வாழ்வின் நிலை என்ன?
1 சாமுவேல்: 12: 12 .. உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். நாம் சாமுவேலின் வாழ்க்கையின் கடைசிப்பகுதிக்கு வந்திருக்கிறோம். சாமுவேல் இப்பொழுது முதிர்வயதடைந்திருந்தாலும், அவருடைய வாழ்நாள் முழுவதும், மக்களுக்குத் தேவையான ஆலோசனையும், ஆவிக்குரிய வழி நடத்துதலும் அவரிடம் எப்பொழுதும் தடையில்லாமல் கிடைத்தது என்பதை எந்த இஸ்ரவேலரும் மறுதலிக்க மாட்டனர். இப்பொழுதோ இந்த வயதானவருக்கு பதிலாக ஒரு வாலிபனான, அழகுள்ளவனான, சுறுசுறுப்புள்ளவனான ஒரு தலைவனைத்… Continue reading இதழ்:2036 உன் வாழ்வின் நிலை என்ன?
இதழ்:2035 கர்த்தருடைய ஈவை இழந்து போகாதே!
1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார். இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம். தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார்.… Continue reading இதழ்:2035 கர்த்தருடைய ஈவை இழந்து போகாதே!
இதழ்:2034 ஆயத்தமுள்ள இருதயம் மட்டுமே தேவை!
1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். சில மாதங்களுக்கு முன்னர், ஒரு கர்த்தருடைய ஊழியர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தைப் பார்த்தேன். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறாரா அல்லது ஊழியத்துக்கு… Continue reading இதழ்:2034 ஆயத்தமுள்ள இருதயம் மட்டுமே தேவை!
இதழ்:2033 உன் தினசரி வேலைகளின் மத்தியில் தேவன் கிரியை செய்ய முடியும்!
1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.அதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். என்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே… Continue reading இதழ்:2033 உன் தினசரி வேலைகளின் மத்தியில் தேவன் கிரியை செய்ய முடியும்!
இதழ்:2032 நீ அளக்கும் அளவுகோல் எது?
1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர்! கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார்! ஆம்! அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன்!. கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய… Continue reading இதழ்:2032 நீ அளக்கும் அளவுகோல் எது?
இதழ்:2031 கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து விடாதே!
1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். இன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு… Continue reading இதழ்:2031 கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து விடாதே!
இதழ்:2030 உன் வேதனையை என் மேல் இறக்கிவிடு!
1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள். சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர்… Continue reading இதழ்:2030 உன் வேதனையை என் மேல் இறக்கிவிடு!
இதழ்:2029 மற்றவரைப் போலவே வாழ வேண்டும் என்று எண்ணாதே!
1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து, இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். சமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும்.… Continue reading இதழ்:2029 மற்றவரைப் போலவே வாழ வேண்டும் என்று எண்ணாதே!
